8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - ஈடில்லா-இயற்கை - கோணக்காத்துப்-பாட்டு

  Play Audio

1. நாட்டில் பெரும் பஞசம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் எந்த பாடலாக பாடினர்?

Answer: கும்மிப் பாடல்கள்

2. கும்மிப் பாடல்கள் பேச்சித்தமிழில் அமைந்த இவை ----- என்று அழைக்கப்பட்டன?

Answer: பஞசக்கும்மிகள்

3. பஞசக்கும்மிகள் என்ற நூலைத் தொகுத்தவர் யார்?

Answer: புலவர் செ. ராசு

4. காத்து நொண்டிச் சிந்து என்ற நூலை இயற்றியவர் யார்?

Answer: வெங்கம்பூர் சாமிநாதன்

5. கோணக் காத்துப் பாட்டு என்ற கவிதை எந்த நூலிருந்து எடுக்கப்பட்டது?

Answer: காத்து நொண்டி சிந்து

6. கோணக்காத்துப் பாடலில் புலவர் எந்தக் கடவுளை காக்குமாறு வேண்டுகிறார்?

Answer: முருகன்

7. முகில் என்பதன் பொருள் என்ன?

Answer: மேகம்

8. கெடிகலங்கி என்பதன் பொருள் என்ன?

Answer: மிக வருந்தி

9. சம்பிரமுடன் என்பதன் பொருள் என்ன?

Answer: முறையாக

10. சேகரம் என்பதன் பொருள் என்ன?

Answer: கூட்டம்

1

11. வின்னம் என்பதன் பொருள் என்ன?

Answer: தேசம்

12. வாகு என்பதன் பொருள் என்ன?

Answer: சரியாக

13. காலன் என்பதன் பொருள் என்ன?

Answer: எமன்

14. மெத்த என்பதன் பொருள் என்ன?

Answer: மிகவும்

15. காங்கேய நாடு என்பதன் பொருள் என்ன?

Answer: கொங்குமண்டலத்தில் 24நாடுகளுள் ஒன்று

16. வானில் கரு ----- தோன்றினால் மழை பொழியும் என்பர்?

Answer: முகில்

17. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் ----- யும் ஒட்டிவிடும்?

Answer: காலனை

18. 'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: விழுந்தது + அங்கே

19. 'செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: செத்து + இறந்த

20. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: பருத்தியெல்லாம்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்