8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் மூன்று - உடலை-ஓம்புமின் - எச்சம்

  Play Audio

1. படித்தான் என்னும் சொல்லில் பொருள் முற்றுப் பெறுகிறது. எனவே இது?

Answer: வினைமுற்று

2. படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்றுப்பெறவில்லை இவ்வாறு பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்லின் பெயர் என்ன?

Answer: எச்சம்

3. எச்சம் எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு வகை (பெயரெச்சம், வினையெச்சம்)

4. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ----- ஆகும்?

Answer: பெயரெச்சம்

5. பெயரெச்சம் ----- காலத்திலும் வரும்?

Answer: மூன்று

6. பாடிய பாடல் - இறந்தகாலப் பெயரெச்சம் பாடுகின்ற பாடல் எக்காலப் பெயரெச்சம்?

Answer: நிகழ்காலப் பெயரெச்சம்

7. பாடும் பாடல் எக்காலப் பெயரெச்சம்?

Answer: எதிர்காலப் பெயரெச்சம்

8. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் ----- எனப்படும்?

Answer: தெரிநிலைப் பெயரெச்சம்

1

9. செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் ----- எனப்படும்?

Answer: குறிப்பு பெயரெச்சம்

10. வினையைக் கொண்டு முடியும் எச்சம் ----- எனப்படும்?

Answer: வினையெச்சம்

11. செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் வினையெச்சம் ----- எனப்படும்?

Answer: தெரிநிலை வினையெச்சம்

12. காலத்தை வெளிப்படையாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் ----- எனப்படும்?

Answer: குறிப்பு வினையெச்சம்

2

13. முற்றுப் பெறாமல் என்சி நிற்கும் சொல் ----- எனப்படும்?

Answer: சொல்

14. கீழ்காணும் சொற்களில் பெயரெச்சம்?

Answer: பார்த்த

15. குறிப்பு வினையெச்சம் ----- வெளிப்படையாகக் காட்டாது?

Answer: காலத்தை

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்