8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் மூன்று - உடலை-ஓம்புமின் - நோயும்-மருந்தும்

  Play Audio

1. மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவது?

Answer: நோய்கள்

2. "போர்த்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்குஉரிய திரியோக மருந்துஇவை"என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்?

Answer: நீலகேசி

3. தீர்வன என்பதன் பொருள் என்ன?

Answer: நீங்குபவை

4. உவசமம் என்பதன் பொருள் என்ன?

Answer: அடங்கி இருத்தல்

5. நிழல்இகழும் என்பதன் பொருள் என்ன?

Answer: ஒளிபொருந்திய

6. பேர்தற்கு என்பதன் பொருள் என்ன?

Answer: அகற்றுவதற்கு

7. திரியோகமருந்து என்பதன் பொருள் என்ன?

Answer: மூன்று யோகமருந்து

8. தெளிவு என்பதன் பொருள் என்ன?

Answer: நற்காட்சி

9. திறந்தன என்பதன் பொருள் என்ன?

Answer: தன்மையுடையன

10. கூற்றுவா என்பதன் பொருள் என்ன?

Answer: பிரிவுகளாக

1

11. பூணாய் என்பதன் பொருள் என்ன?

Answer: அணிகலன்களை அணிந்தவளே

12. பிணி என்பதன் பொருள் என்ன?

Answer: துன்பம்

13. ஓர்தல் என்பதன் பொருள் என்ன?

Answer: நல்லறிவு

14. பிறவார் என்பதன் பொருள் என்ன?

Answer: பிறக்கமாட்டார்

15. பிறவித்துன்பங்களை தீர்க்கும் மூன்று மருந்துகள் எவை?

Answer: நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்

16. ஐஞசிறுகாப்பியங்களும் ஒன்று?

Answer: நீலகேசி

17. நீலகேசி எத்தனை சருக்கங்களைக் கொண்டது?

Answer: பத்து

18. நீலகேசியின் ஆசிரியர் பெயர்?

Answer: பெயர் தெரியவில்லை

19. நீலகேசி எந்த சமயத்தைச் சார்ந்த நூல்?

Answer: சமண சமயம்

2

20. உடல்நலம் என்பது ----- இல்லாமல் வாழ்தல் ஆகும்?

Answer: பிணி

21. நீலகேசி கூறும் நோயின் வகைகள்?

Answer: மூன்று

22. இவையுண்டார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: இவை + உண்டார்

23. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: தாமினி

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்