8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் மூன்று - உடலை-ஓம்புமின் - வருமுன்-காப்போம்

  Play Audio

1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது என்ன?

Answer: பழமொழி

2. நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே ----- ?

Answer: அறிவுடைமை

3. ஒரு நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை எது?

Answer: நல்ல உணவு, உடல்தூய்மை, உடற்பயிற்சி ஆகியவை

4. "உடலின் உறுதி உடையவரே உலகின் இன்பம் உடையவராம்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: கவிமணி தேசிகவிநாயகனார்

5. நித்தம் நித்தம் என்பதன் பொருள் என்ன?

Answer: நாள்தோறும்

6. மட்டு என்பதன் பொருள் என்ன?

Answer: அளவு

7. சுண்ட என்பதன் பொருள் என்ன?

Answer: நன்கு

8. வையகம் என்பதன் பொருள் என்ன?

Answer: உலகம்

9. பேணுவையேல் என்பதன் பொருள் என்ன?

Answer: பாதுகாத்தல்

10. திட்டுமுட்டு என்பதன் பொருள் என்ன?

Answer: தடுமாற்றம்

1

11. கவிமணி தேசிகவிநாகனார் எங்கு பிறந்தார்?

Answer: குமரி மாவட்டம் தேரூரில்

12. கவிமணி எனப் போற்றப்படுபவர் யார்?

Answer: தேசிக விநாயகனார்

13. கவிமணி தேசிகவிநாயகனார் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்?

Answer: 36ஆண்டுகள்

14. ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை போன்ற நூல்களை எழுதியவர் யார்?

Answer: கவிமணி தேசிகவிநாயகனார்

15. மலரும் மாலையும் என்னும் நூலை எழுதியவர் யார்?

Answer: கவிமணி தேசிகவிநாயகனார்

16. உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலை படைத்தவர் யார்?

Answer: கவிமணி தேசிகவிநாயகனார்

17. காந்தியடிகள் ----- போற்ற வாழ்ந்தவர்?

Answer: வையம்

18. "நலமெல்லாம்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: நலம் + எல்லாம்

19. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்து எழுதுக?

Answer: இடமெங்கும்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்