8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - குன்றென-நிமிர்ந்துநில் - அணி-இலக்கணம்

  Play Audio

1. உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைக்கும் அணி எது?

Answer: பிறிதுமொழிதல் அணி

2. பிறிதுமொழிதல் அணி எடுத்துக்காட்டு தருக?

Answer: "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து"

3. இரண்டும் பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது?

Answer: வேற்றுமை அணி

4. வேற்றுமை அணி எடுத்துக்காட்டு தருக? "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு"இக்குறளில் பயின்று வந்துள்ள அணி என்ன?

Answer: வேற்றுமை அணி

5. ஒரு சொல் அல்லது தொடர் இருபொருளை தருமாறு அமைவது எது?

Answer: இரட்டுறமொழிதல்

6. சிலேடை என்ற பெயரால் அழைக்கப்படும் அணி எது?

Answer: இரட்டுறமொழிதல்

7. பிறிதுமொழிதல் அணியில் ----- மட்டும் இடம்பெறும்?

Answer: உவமை

8. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது ----- அணி?

Answer: வேற்றுமை

9. ஒரே செய்யுளை இருபொருள்படும் பாடுவது ----- அணி?

Answer: இரட்டுறமொழிதல்

10. இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் என்ன?

Answer: சிலேடை

11. objective ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

Answer: குறிக்கோள்

12. confidence ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

Answer: நம்பிக்கை

13. doctorate ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

Answer: முனைவர் பட்டம்

14. round table conference ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

Answer: வட்ட மேஜை மாநாடு

15. double voting ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

Answer: இரட்டை வாக்குரிமை

16. university ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

Answer: பல்கலைக்கழகம்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்