9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதென்று-பேர் - திராவிட-மொழிக்குடும்பம்

  Play Audio

1. திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது?

Answer: தமிழ்

2. தமக்கு தோன்றிய கருத்துக்களை பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி எது?

Answer: மொழியாகும்

3. மனிதன் தமக்கு தோன்றிய எண்ணங்களை எதன் மூலம் பிறருக்கு தெரிவிக்க முயன்றான்?

Answer: மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஓவியங்கள்

4. இந்தியால் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer: 1300க்கு மேற்பட்டது

5. இந்தியாவில் உள்ள மொழிகள் எத்தனை மொழிக்குடும்பங்களாக பிரிக்கப்பட்டடுள்ளன?

Answer: நான்கு (4)

6. இந்திய நாடு மொழிகளின் காட்சிசாலையாக"திகழ்கிறது எனக் கூறியவர் யார்?

Answer: ச. அகத்தியலிங்கம்

7. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?

Answer: குமரிலபட்டர்

8. தமிழ் என்னும் சொல்லிலிருந்து தான்"திராவிட என்ற சொல் உருவானது என்று கூறியவர் யார்?

Answer: ஸீராஸ் பாதிரியார்

9. ஸீராஸ் பாதிரியார் தமிழிருந்து தான் திராவிட என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு விளக்கியுள்ளார்?

Answer: தமிழ், தமிழா, தமிலா, டிரமிலா, ட்ராமிலா, த்ராவிடா, திராவிடா

10. 18ம் நூற்றாண்டு தொடக்கம் வரை, தமிழ் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் ----- மொழியிலுருந்து உருவானவை என்ற கருத்து நிலவியது?

Answer: சம்ஸ்கிருத மொழி

1

11. வடமொழி மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்று குறிப்பிட்டவர் யார்?

Answer: அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்

12. ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?

Answer: அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்

13. 1816ஆண்டு மொழி சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் யார்?

Answer: பாப், ராஸ்க், கிரிம்

14. முதன் முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளுக்கு தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் யார்?

Answer: பிரான்ஸ் எல்லிஸ்

15. தென்னிந்திய மொழிகளுக்கு தமிழியன் என்று பெயரிட்டவர் யார்?

Answer: ஸோக்கன்

16. தமிழியன் மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகள் எவை?

Answer: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தோண்டி, தோடா

17. தமிழ் மொழி ஆரிய மொழிகளிலிருந்து மாறுபட்டவை என்ற கருத்தை கூறிய அறிஞர்கள் யார்?

Answer: ஸோக்கன் மற்றும் மாக்ஸ் முல்லர்

18. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: கால்டுவெல்

19. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிட்ட ஆண்டு?

Answer: 1856

20. திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சம்ஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்கு செலுத்தியுள்ளது என கூறியவர்?

Answer: கால்டுவெல்

2

21. திராவிட மொழிக் குடும்பங்களின் வகைகள் எத்தனை?

Answer: மூன்று அவை தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள்

22. தென்திராவிட மொழிகள் எவை?

Answer: தமிழ், கன்னடம், மலையாளம், குடகு, துளு கோத்தா, தோடா, கொரகா, இருளா

23. நடுத்திராவிட மொழிகள் எவை?

Answer: தெலுங்கு, கூயி, கூவி, கோண்டா கோலாமி நாய்க்கி, பெங்கோ, மண்டா, பர்ஜி, கதபா, கோண்டி, கோயா

24. வடதிராவிட மொழிகள் எவை?

Answer: பிராகுயி, குருக், மால்தோ

25. அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள் எவை?

Answer: எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா

26. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?

Answer: 28

27. கண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

Answer: தமிழ்

28. கண்ணு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

Answer: மலையாளம், கன்னடம்

29. கன்னு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

Answer: தெலுங்கு, குடகு

30. ஃகண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

Answer: குருக்

31. கென் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

Answer: பர்ஜி

32. கொண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

Answer: தோடா

3

33. மூன்று என்ற எண்ணுப் பெயர் மூணு என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது?

Answer: மலையாளம்

34. மூன்று என்ற எண்ணுப் பெயர் "மூரூ" என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது?

Answer: கன்னடம்

35. மூன்று என்ற எண்ணுப் பெயர் "மூஜி" என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது?

Answer: துளு

36. எந்த மொழியில் தினை, பால், என் ஆகிய வேறுபாட்டை காட்டுவதில்லை?

Answer: ஆங்கிலம்

37. திராவிட மொழியில் எந்த மொழியில் பால் காட்டும் விகுதிகள் இடம் பெறுவதில்லை?

Answer: மலையாளம்

38. கவிராஜ மார்க்கம் எனும் கன்னட மொழி இலக்கியம் இயற்றப்பட்ட நூற்றாண்டு?

Answer: பொ. ஆ. ஒன்பதாம் நூற்றாண்டு

39. பொ. ஆ. 11ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட "பாரதம்" என்ற இலக்கியம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

Answer: தெலுங்கு

40. பொ. ஆ. 12ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'ராம சரிதா'என்ற இலக்கியம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

Answer: மலையாளம்

41. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இயற்றப்பட்ட நூற்றாண்டு?

Answer: பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டு

42. பொ. ஆ. 9ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'கவிராஜ'மார்க்கம் என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

Answer: கன்னடம்

43. பொ. ஆ. 12ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'ஆந்திர பாஷா பூஷணம்'என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

Answer: தெலுங்கு

44. பொ. ஆ. 15ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'லீலா திலகம்'என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

Answer: மலையாளம்

45. தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: மு. வரதராசனார்

4

46. 'இந்திய இலக்கண கொள்கையின் பின்னணியில் தமிழ் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: செ. வை, சண்முகம்

47. எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது?

Answer: மொரீசியஸ், இலங்கை

48. ஒன்று என்ற தமிழ்ச்சொல் துளு மொழியில் ----- என்ற கூறப்படுகிறது?

Answer: ஒன்சி

49. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை ----- மொழியில் அமைந்துள்ளன?

Answer: தமிழ்

50. எந்த மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது?

Answer: தமிழ் மொழி

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்