8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - குன்றென-நிமிர்ந்துநில் - உயிர்க்குணங்கள்

  Play Audio

1. "அறிவுஅருள் ஆசைஅச்சம்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: இறையரசன்

2. நிறை என்பதன் பொருள் என்ன?

Answer: மேன்மை

3. பொறை என்பதன் பொருள் என்ன?

Answer: பொறுமை

4. பொச்சாப்பு என்பதன் பொருள் என்ன?

Answer: சோர்வு

5. மையல் என்பதன் பொருள் என்ன?

Answer: விருப்பம்

6. ஓர்ப்பு என்பதன் பொருள் என்ன?

Answer: ஆராய்ந்து தெளிதல்

7. அழுக்காறு என்பதன் பொருள் என்ன?

Answer: பொறாமை

8. மதம் என்பதன் பொருள் என்ன?

Answer: கொள்கை

9. இதழ் என்பதன் பொருள் என்ன?

Answer: பகை

10. மண்ணும் என்பதன் பொருள் என்ன?

Answer: நிலைபெற்ற

1

11. மார்கழி திங்கள் பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு இதனை ----- என்பர்?

Answer: பாவை நோன்பு

12. திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது?

Answer: திருப்பாவை

13. திருப்பாவை என்ற நூலை இயற்றியவர் யார்?

Answer: ஆண்டாள்

14. சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது?

Answer: திருவெம்பாவை

15. திருவெம்பாவையை இயற்றியவர் யார்?

Answer: மாணிக்கவாசகர்

16. இறையரசனின் இயற்பெயர்?

Answer: சே. சேசுராஜா

17. இறையரசன் என்ன பணியாற்றினார்?

Answer: கல்லூரி ஒன்றில் தமிழ் பேராசிரியர்

18. கண்ணிப்பாவை என்னும் நூலை இயற்றியவர் யார்?

Answer: இறையரசன்

19. இறையரசன் எந்த நூலை தழுவி கண்ணிப்பாவை நூலை இயற்றியுள்ளார்?

Answer: ஆண்டாள் இயற்றிய திருப்பாவை

20. "உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் கான்"என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்?

Answer: திருப்பாவை

21. அடுத்தவர் வாழவைக் கண்டு ----- கொள்ளக்கூடாது?

Answer: அழுக்காறு

22. நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று?

Answer: பொச்சாப்பு

23. "இன்பத்துன்பம்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது?

Answer: இன்பம் + துன்பம்

24. குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதுக் கிடைக்கும் சொல்?

Answer: குணங்களெல்லாம்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்