9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - கல்வி - இயல் ஐந்து - கசடற-மொழிதல் - குடும்ப-விளக்கு

  Play Audio

1. மறுமலர்ச்சி இலக்கியம் தோன்றிய ----- நூற்றாண்டு ஆகும்?

Answer: இருபதாம்

2. "கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்றவர் யார்?

Answer: பாரதிதாசன்

3. களர்நிலம் என்பதன் பொருள் என்ன?

Answer: பண்படாத நிலம்

4. நவிலல் என்பதன் பொருள் என்ன?

Answer: சொல்லல்

5. வையகம் என்பதன் பொருள் என்ன?

Answer: உலகம்

6. மாக்கடல் என்பதன் பொருள் என்ன?

Answer: பெரிய கடல்

7. மின்னாளை என்பதன் பொருள் என்ன?

Answer: மின்னலைப் போன்றவனை

8. மின்னாள் என்பதன் பொருள் என்ன?

Answer: ஒளிரமாட்டாள்

9. "உணவினை ஆக்கல் மக்கடடு உயிர்ஆக்கல் அன்றோ வாழ்வு என்ற பாடல் வரியை பாடியவர்?

Answer: பாரதிதாசன்

10. தாழி என்பதன் பொருள் என்ன?

Answer: சமைக்கும் கலன்

11. யாண்டும் என்பதன் பொருள் என்ன?

Answer: எப்பொழுதும்

12. கல்வியை கற்ற பெண்கள் பண்பட்ட ----- நிலத்தினைப் போன்றவர்கள்?

Answer: நன்செய்

13. பெண்களுக்கு எது முதன்மையானது என்று பாரதிதாசன் கூறுகிறார்?

Answer: கல்வி

1

14. கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதை காட்டும் நூல்?

Answer: குடும்ப விளக்கு

15. பாரதிதாசன் இயற்பெயர்?

Answer: கனக சுப்புரத்தினம்

16. கனக. சுப்புரத்தினம் என்ற பெயரை யார் கவிதை மீது கொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்?

Answer: பாரதியார்

17. பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் போன்ற நூல்கள் எழுதியவர் யார்?

Answer: பாரதிதாசன்

18. பாரதிதாசன் இயற்றிய கவிதைகள் அனைத்தும் எந்த பெயரில் தொகுக்கப்பட்டன?

Answer: பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்

19. பாரதிதாசன் எந்த நாடக நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?

Answer: பிசிராந்தையார்

20. "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: பாரதியார்

21. "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: கவிமணி

22. "பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்பாடல் என்பது சரிப்படாது என்ற பாடல் வரியை இயற்றியவற்ற யார்?

Answer: பாவேந்தர்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்