1. "ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: தொல்காப்பியம்
2. உணர்ந்தோர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: வினையாலணையும் பெயர்
3. ஓரறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?
Answer: புல், மரம்
4. ஈரறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?
Answer: சிப்பி, நத்தை
5. மூவறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?
Answer: கரையான், எறும்பு
6. நான்கறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?
Answer: நண்டு, தும்பி
7. ஐந்தறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?
Answer: பறவை, விலங்கு
8. ஆறறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?
Answer: மனிதன்
9. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?
Answer: தொல்காப்பியம்
10. தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?
Answer: தொல்காப்பியர்
1
11. பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் முதலாக அமைந்த நூல் எது?
Answer: தொல்காப்பியம்
12. தொல்காப்பியத்தில் எத்தனை அதிராகம் உள்ளது?
Answer: மூன்று (எழுத்து, சொல், பொருள்)
13. தொல்காப்பியம் எத்தனை இயல்களை உடையது?
Answer: 27 இயல்கள்
14. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல் அதிகாரம் எதனை விளக்குகிறது?
Answer: மொழி இலக்கணம்
15. தொல்காப்பியத்தில் தமிழரின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்கும் அதிகாரம் எது?
Answer: பொருளதிகாரம்
16. எந்த நூலில் பிறப்பியலில் எழுத்துக்கள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கிருப்பதை அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்?
Answer: தொல்காப்பியம்
2