1. "கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் கிழக்கு வானம் தூரமில்லை" என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?
Answer: வைரமுத்து
2. "முளைக்கும் விதைகள் முளைக்க துடித்தால் பூமி ஒன்றும் பாரமில்லை" என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?
Answer: வைரமுத்து
3. "அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்" என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?
Answer: வைரமுத்து
4. ஓ, என் சமகாலத் தோழர்களே! என்ற கவிதை யாருடைய கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer: வைரமுத்து
5. "ஏவு கணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்" என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?
Answer: வைரமுத்து
6. பண்பும் அன்பும், இனமும் மொழியும் இலக்கணக்குறிப்பு தருக?
Answer: எண்ணும்மைகள்
7. சொன்னோர் இலக்கணக்குறிப்பு தருக?
Answer: வினையாலனையும் பெயர்
8. கவிஞர் வைரமுத்து எங்கு பிறந்தார்?
Answer: தேனி மாவட்டத்தில் உள்ள மெட்டூர்
9. வைரமுத்து இந்திய அரசின் உயரிய விருதான ----- விருதை பெற்றார்?
Answer: பத்மபூஷன்
10. கவிஞர் வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு எது?
Answer: 2003
1
11. கவிஞர் வைரமுத்து சிறந்த படலாசிரியர்க்கான தேசிய விருதை எத்தனை முறை பெற்றுள்ளார்?
Answer: 7 முறை|கவிஞர் வைரமுத்து சிறந்த படலாசிரியர்க்கான மாநில விருதை எத்தனை முறை பெற்றுள்ளார்?
12. "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: புநானூறு
13. "வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: சீவக சிந்தாமணி
2