9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - எட்டுத்திக்கும்-சென்றிடுவீர் - விண்ணையும்-சாடுவோம்

  Play Audio

1. இருபதாம் நூற்றாண்டில் இந்திய வானியல் அறிவியல் துறையில் தமிழர்களின் பங்கு மகத்தானதற்கு காரணம் என்ன?

Answer: அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, வளர்மதி, சிவன் போன்றோர் பணிபுரிந்துள்ளனர்

2. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) ஒன்பதாவது தலைவராக பதவியேற்ற தமிழர் யார்?

Answer: சிவன்

3. இஸ்ரோவின் தலைவராக பதவியேற்ற முதல் தமிழர் யார்?

Answer: சிவன்

4. 2015ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இயக்குனராக பணிபுரிந்தவர் யார்?

Answer: சிவன்

5. சிவன் அவர்களின் சொந்த ஊர் எது?

Answer: நாகர்கோவில்

6. சிவன் அவர்களின் தந்தை பெயர் என்ன?

Answer: கைலாசவடிவு

7. சிவன் அவர்களின் கல்வித்தகுதி என்ன?

Answer: இளங்கலை கணினி அறிவியல், வானுர்திப் பொறியியல்

8. சிவன் அவர்கள் இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்த ஆண்டு என்ன?

Answer: 1982

9. PSLV திட்டத்தை தொடங்க அரசு அனுமதி அளித்த ஆண்டு என்ன?

Answer: 1983

10. PSLV விரிவாக்கம் என்ன?

Answer: polar Statellite Launch Vehicle

1

11. இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

Answer: விக்ரம் சாராபாய்

12. இந்தியாவின் முதல் செயற்கைகோள் எது?

Answer: ஆர்யபட்டா

13. ஆர்யபட்டா செயற்கைகோள் விண்ணில் செலுத்திய ஆண்டு எது?

Answer: 1975

14. ஆர்யபட்டா செயற்கைகோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்திய கிராமங்களில் உள்ள 50 இலட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச் செல்ல உதவியவர் யார்?

Answer: விக்ரம் சாராபாய்

15. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு உள்ளது?

Answer: திருவனந்தபுரம்

16. யாரின் முயற்சியால் இஸ்ரோ தொடங்கப்பட்டது?

Answer: விக்ரம் சாராபாய்

17. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் என்ன ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்?

Answer: வானூர்தியியல், வான்பயண மின்னணுவியல், கூட்டமைப் பொருள்கள், கணினி தகவல் தொழில்நுட்பம்

18. செயற்கைகோள் ஏவு ஊர்தியை பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும் 'சித்தாரா' செயலியை உருவாக்கியவர் யார்?

Answer: சிவன் (இஸ்ரோ தலைவர்)

19. சித்தாரா (SITARA) யின் விரிவாக்கம் என்ன?

Answer: Software For Integrated Trajectory Analysis With Real Time Application

20. அப்துல்கலாம் யாரை மென்பொறியாளர் என்று எப்போதும் அழைப்பார்?

Answer: சிவன்

2

21. இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பணியாற்றியவர் யார்?

Answer: அப்துல்கலாம்

22. அப்துல்கலாம் தமிழ்நாட்டின் எந்த பகுதியைச் சேர்ந்தவர்?

Answer: இராமேஸ்வரம்

23. "இந்திய ஏவுகணை நாயகன்" என்று போற்றப்படுபவர் யார்?

Answer: அப்துல்கலாம்

24. அப்துல்கலாம் இந்தியாவின் உயரிய விருதான ----- பெற்றுள்ளார்?

Answer: பாரத ரத்னா

25. இரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் எந்த ஆண்டு முதல் செயற்கை கோள்களை ஏவி உள்ளன?

Answer: 1957

26. இந்தியாவிற்காக இதுவரை எத்தனை செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன?

Answer: 45

27. வளர்மதி எந்த ஊரில் பிறந்தார்?

Answer: அரியலூர்

28. 2015ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?

Answer: வளர்மதி

29. வளர்மதி இஸ்ரோவில் எந்த ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்?

Answer: 1984

30. 2012 ம் ஆண்டு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT 1) திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் யார்?

Answer: வளர்மதி

3

31. இஸ்ரோவின் செயற்கைகோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிஞர் யார்?

Answer: வளர்மதி

32. மீனவர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி எது?

Answer: நேவிக்

33. விண்வெளித்துறையில் எத்தனை வகையான தொழில்நுட்பங்கள் உள்ளன?

Answer: மூன்று

34. விண்வெளித்துறையில் மூன்று வகையான தொழில்நுட்பங்கள் எவை?

Answer: 1. செயற்கைகோள் ஏவுவதற்கான தொழில்நுட்பம் 2. செயற்கைகோள்களை ஏற்றி செல்லும் ஊர்தி 3. ஏவு ஊர்த்திலிருந்து செயற்கை கோளில் இருந்து வரும் செய்தி

35. GSLV மார்க் 2 ஏவுகணையின் சுமக்கும் திறன் என்ன?

Answer: 2. 25டன்

36. GSLV மார்க் 3 ஏவுகணையின் சுமக்கும் திறன் என்ன?

Answer: 3டன்

37. நம் நிலவின் புற வெளியை ஆராய அனுப்பிய செயற்கை கோளின் பெயர் என்ன?

Answer: சந்திராயன் 1

38. நம் விண்வெளித்துறைக்கு பெரிய புகழை கொடுத்த செயற்கை கோளின் பெயர் என்ன?

Answer: சந்திராயன் 1

39. சந்திராயன் 2 உள்ள ஆராயும் ஊர்தியின் பெயர் என்ன?

Answer: ரோவர்

40. சந்திராயன் 2 உள்ள ரோவர் நிலவில் இறங்கி எத்தனை நாள் பயணிக்கும்?

Answer: 14 நாட்கள்

4

41. அருணன் சுப்பையா தமிழகத்தில் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

Answer: திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடி அருகில் உள்ள கோதைசேரி

42. அருணன் சுப்பையா திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் எந்த ஆண்டு பணியில் சேர்ந்தார்?

Answer: 1984

43. 2013 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டமான மங்கல்யான் திட்டத்தின் இயக்குனர் யார்?

Answer: அருணன் சுப்பையா

44. இளைய காலம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?

Answer: மயில்சாமி அண்ணாதுரை

45. மயில்சாமி அண்ணாதுரை தமிழகத்தில் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

Answer: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கோதவாடி

46. மயில்சாமி அண்ணாதுரை இதுவரை எத்தனை முனைவர் பட்டங்களை பெற்றுள்ளார்?

Answer: 5

47. மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவில் எந்த ஆண்டு பணியில் சேர்ந்தார்?

Answer: 1982

48. சந்திராயன் 1 திட்ட இயக்குனர் யார்?

Answer: மயில்சாமி அண்ணாதுரை

49. சர். சி. வி ராமன் நினைவு அறிவியல் விருதை பெற்றவர் யார்?

Answer: மயில்சாமி அண்ணாதுரை

50. தமது அறிவியல் அனுபங்களை "கையருகே நிலா"" என்னும் நூலை எழுதியவர் யார்?

Answer: மயில்சாமி அண்ணாதுரை

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்