1. ஒளிப்படி இயந்திரம் என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள சொல் எது?
Answer: xerox
2. ஒளிப்படி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?
Answer: செஸ்டர் கார்ல்சன்
3. செஸ்டர் கார்ல்சன் எதனை கொண்டு முதல் ஒளிப்படியை எடுத்தார்?
Answer: கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக் கொண்டு
4. நியூயார்க்கைச் சேர்ந்த செஸ்டர் கார்ல்சன் தனது முதல் ஒளிப்படியை எந்த ஆண்டு எடுத்தார்?
Answer: 1938 ம் ஆண்டு
5. கிரேக்க மொழியில் சீரோகிராஃபி என்பதன் பொருள் என்ன?
Answer: உலர் எழுத்துமுறை
6. செஸ்டர் கார்ல்சனால் ஜெராக்ஸ் இயந்திரம் உலகத்திற்கு அறிமுகப்படுத்திய ஆண்டு எது?
Answer: 1959 ம் ஆண்டு
7. தொலைநகல் இயந்திரத்தின் ஆங்கிலப் பெயர் என்ன?
Answer: Fax
8. குறியீடுகளை மின்னாற்றல் உ தவியுடன் அச்சிடுவதில் வெற்றிக் கண்டவர் யார்?
Answer: அலெக்சாண்டர் பெயின்
9. அலெக்சாண்டர் பெயின் குறியீடுகளை மின்னாற்றல் உ தவியுடன் அச்சிடுவதில் வெற்றிக் கண்டு அதற்கான காப்புரிமையை பெற்ற ஆண்டு எது?
Answer: 1846
10. தொலைநகல் கருவியை உருவாக்கியவர் யார்?
Answer: ஜியோவான்னி காசில்லி
1
11. ஜியோவான்னி காசில்லி எந்த நாட்டு இயற்பியல் அறிஞர்?
Answer: இத்தாலி நாடு
12. ஜியோவான்னி காசில்லி எந்த தொலைநகல் கருவியை உருவாக்கினார்?
Answer: பான்டெலிகிராஃப்
13. எந்த நகருக்கு இடையே தொலைநகல் சேவை முதலில் தொடங்கப்பட்டது?
Answer: பாரிஸ் நகரில் இருந்து லியோன் நகருக்கு
14. பாரிஸ் நகரில் இருந்து லியோன் நகருக்கு தொலைநகல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Answer: 1865
15. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் முறையை கண்டுபிடித்தவர் யார்?
Answer: ஹாங்க் மாக்னஸ்கி
16. ஹாங்க் மாக்னஸ்கி தாம் கண்டு பிடித்த இயந்திரத்திற்கு இட்ட பெயர் என்ன?
Answer: காமாஃபேக்ஸ்
17. "நான் இங்கிலாந்திலோ உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும் என் வங்கிப் பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கொரு வழியை சிந்தித்தேன். சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது. அங்கு சாக்லேட் இங்கே பணம்" எனக் கூறியவர் யார்?
Answer: ஜான் ஷப்பர்டு பாரன்
18. தானியங்கி பண இயந்திரம் ATMயை கண்டுபிடித்தவர் யார்?
Answer: ஜான் ஷப்பர்டு பாரன்
19. முதன் முதலில் 1967 ஆண்டு ஜூன் 27 ம் நாள் தானியங்கி பண இயந்திரம் (ATM) எந்த வங்கியில் நிறுவப்பட்டது?
Answer: பார்க்லேஸ் வங்கி
2
20. அட்டை தேய்ப்பி இயந்திரம் (Swiping Machine) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: கட்டணம் செலுத்தும் கருவி, விற்பனைக் கருவி
21. முதன் முதலில் 1962ல் கடவுச் சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றவர் யார்?
Answer: ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு
22. ஆரம்பத்தில் ----- தருவற்கு பயன்படுத்தவே காப்புரிமை தரப்பட்டது?
Answer: பெட்ரோல்
23. தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் ----- அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன?
Answer: திறன் அட்டை (smart card)
24. அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வருகைப் பதிவுக்காகவும் வெளிறுகைப் பதிவுக்காகவும் பயன்படும் கருவி எது?
Answer: (Biometric Device)
25. ஆளறிச் சோதனை கருவிக்கு ----- என்று பெயர்?
Answer: (Biometric Device)
26. இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்?
Answer: மைக்கேல் ஆல்ட்ரிச்
27. இணைய வழி மளிகை கடை அமெரிக்காவில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Answer: 1989
28. எந்த ஆண்டு இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது?
Answer: 1991
3
29. வையக விரிவு வலையை உருவாக்கியவர் யார்?
Answer: டிம் பெர்னர்ஸ் லீ
30. எந்த ஆண்டு டிம் பெர்னர்ஸ் லீ வையக விரிவு வலையை உருவாக்கினார்?
Answer: 1990
31. IRCTC (இந்திய தொடர் வண்டி இணைய வழங்கல் மற்றும் சுற்றுலா கழக இணைய வழி பதிவு) எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
Answer: 2002 ம் ஆண்டு
32. தற்போது IRCTC இணைய வழி சேவையை ஒரே நேரத்தில் எத்தனை பேர் பயன்படுத்தலாம்?
Answer: 3 லட்சம் பேர்
33. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற நடைபெறும் தேர்வின் பெயர் என்ன?
Answer: தேசிய திறனாய்வு தேர்வு
34. கிராமப்புறத்தில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற நடைபெறும் தேர்வின் பெயர் என்ன?
Answer: தேசிய திறனாய்வு தேர்வு, கல்வி உதவித்தொகை தேர்வு
35. விரலி என்ற தமிழ் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் என்ன?
Answer: pen drive
4