9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிருக்கு-வேர் - பெரியபுராணம்

  Play Audio

1. வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?

Answer: பெரியபுராணம்

2. காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரிக்கும் நூல் எது?

Answer: பெரியபுராணம்

3. "காடெல்லாம் கலைக்கரும்பு காவெல்லாம் குலைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை"என்ற பாடலை பாடியவர் யார்?

Answer: சேக்கிழார்

4. எந்த நாடு முழுவதும் நீர் நாடு என்று சொல்லத் தக்கதாய் உள்ளது?

Answer: சோழ நாடு

5. அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலையில் ----- வீழ்ந்து மூழ்கும்?

Answer: எருமை

6. சோழ நாட்டின் நீண்ட இலைகளையுடையது எது?

Answer: வன்சி, கான்சி

7. திருத்தொண்டர்தொகை யாரால் எழுதப்பட்டது?

Answer: சுந்தர்

8. நம்பியாண்டார் நம்பி இயற்றியது?

Answer: திருத்தொண்டர் திருவந்தாதி

9. பெரியபுராணத்தை இயற்றியவர் யார்?

Answer: சேக்கிழார்

10. ஒவ்வொரு அடியாராக அறுபத்துமூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்ட நூல் திருத்தொண்டர் புராணம் இதன் பெருமை காரணமாக இது ----- என்று அழைக்கப்படுகிறது?

Answer: பெரியபுராணம்

11. சேக்கிழார் காலம் என்ன?

Answer: 12ம் நூற்றாண்டு

12. சேக்கிழார் யாருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்?

Answer: சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன்

13. "பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவளவ"என்று சேக்கிழாரை போற்றியவர் யார்?

Answer: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

14. இரும்போந்து என்பதன் பொருள் என்ன?

Answer: பருத்த பனைமரம்

15. கான்சி என்பதன் பொருள் என்ன?

Answer: ஆற்றுப்பூவரசு

16. கருங்குவளை, செந்நெல் இலக்கனக்குறிப்பு தருக?

Answer: பண்புத்தொகை

17. விரிமலர் என்பதன் இலக்கனக்குறிப்பு?

Answer: வினைத்தொகை

18. தடவரை என்பதன் இலக்கணக்குறிப்பு?

Answer: உரிச்சொல் தொடர்

19. வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின் நீரோ - என்ற வரியை பாடியவர் யார்?

Answer: பாரதியார்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்