9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - உள்ளத்தின்-சீர் - ஏறு-தழுவுதல்

  Play Audio

1. ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடும் சங்க நூல் எது?

Answer: கலித்தொகை

2. தமிழர்களின் வீர விளையாடடுகளில் ஒன்று?

Answer: ஏறுதழுவுதல்

3. ஏறுதழுவுதல் எந்த நிலத்தில் தோன்றியது?

Answer: முல்லை

4. "எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மறுப்பு கலங்கினர் பலர் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: கலித்தொகை

5. காளைகளின் பாய்ச்சல் பற்றி கூறும் நூல்?

Answer: கலித்தொகை

6. ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் ஐம்பெருக்காப்பிய நூல்?

Answer: சிலப்பதிகாரம்

7. ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடும் இலக்கண நூல்?

Answer: புறப்பொருள் வெண்பாமாலை

8. ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடும் சிற்றிலக்கியம் எது?

Answer: பள்ளு

9. எருதுகட்டி எனும் மாடு தழுவுதல் நிகழ்வை - ----- பதிவு செய்துள்ளது?

Answer: கண்ணுடையம்மன் பள்ளு

10. "கருவந்தூரை"என்னும் ஊரில் எருதோடு போராடி இறந்தவர்?

Answer: சங்கன்

1

11. எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் உள்ள மாவட்டம்?

Answer: சேலம்

12. காளைப் போர் பற்றிய பெனி - சாஸன் சித்திரம் எங்கு உள்ளது?

Answer: எகிப்தில்

13. கிரீட் தீவிலுள்ள ----- என்னுமிடத்தில் உள்ள அரண்மனை சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன?

Answer: கினோஸஸ்

14. கூறிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளை பலர் விரட்டுவது போன்ற ஓவியம் எங்குள்ளது?

Answer: கரிக்கையூரில்

15. திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை மாவட்டம் உசிலப்பட்டி அருகே - ----- கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

Answer: கல்லூத்து மேட்டுப்பட்டி

16. தேனீ மாவட்டம் மயிலாடும் பாறை அருகே ----- என்ற இடத்தில் திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது?

Answer: சித்திரக்கல் புடவில்

17. சிந்துவெளி மக்கள் எதை தெய்வமாக வழிபட்டனர்?

Answer: காளை

18. சிந்துவெளி கல் முத்திரை ஏறுதழுவுதலை குறிப்பதாக தெரிவித்தவர் யார்?

Answer: ஐராவதம் மகாதேவன்

19. ஏறுதழுவுதல் எந்த நில மக்களின் அடையாளமாக திகழ்கிறது?

Answer: முல்லை

20. சல்லிக்கடடு பேச்சுவழக்கில் திரிபுற்று தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: ஜல்லிக்கடடு

21. மாட்டின் கழுத்தில் கட்டப்பட்ட வளையத்தின் பெயர்?

Answer: சல்லி

22. காளைச் சண்டையை தேசிய விளையாட்டாக கொண்ட நாடு எது?

Answer: ஸ்பெயின்

23. தமிழர்கள் பண்பாடடு திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் ----- ஆண்டுகள் தொன்மையுடையது?

Answer: 2000ஆண்டு

24. காங்கேய மாடுகள் உருவம் பொரித்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட மாவட்டம்?

Answer: கரூர்

25. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது எது?

Answer: காங்கேயம்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்