9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - உள்ளத்தின்-சீர் - மணிமேகலை

  Play Audio

1. இந்திரவிழா எந்த நகரோடு அதிகம் தொடர்பு உடையது?

Answer: புகார்

2. இந்திரவிழா பற்றிய குறிப்புகள் எந்த நூல்களில் குறிப்பு உள்ளது?

Answer: சிலப்பதிகாரம் மணிமேகலை

3. விழாவறை காதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

Answer: மணிமேகலை

4. "மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும் இத்திறம் தத்தம் இயல்பினிற் காடடும்"என்ற பாடல் வரியை இயற்றியவர்?

Answer: சீத்தலைசாத்தனார்

5. குழீஇ என்பதன் பொருள் என்ன?

Answer: ஒன்று கூடி

6. கோட்டி என்பதன் பொருள் என்ன?

Answer: மன்றம்

7. காதலிகைக் கொடி என்பதன் பொருள் என்ன?

Answer: சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது

8. விலோதம் என்பதன் பொருள் என்ன?

Answer: துணியாலான கொடி

9. இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறுகின்றன?

Answer: 28

10. இரட்டைக் காப்பியங்கள் எவை?

Answer: சிலப்பதிகாரம், மணிமேகலை

11. தமிழக மக்களின் வாழ்வியலை சொல்லும் கருவூலங்கலாகத் திகழும் நூல் எது?

Answer: சிலப்பதிகாரம், மணிமேகலை

12. மணிமேகலை நூலின் வேறு பெயர்?

Answer: மணிமேகலை துறவு

13. பெண்மையை முதன்மை படுத்தும் புரட்சி காப்பியம் எது?

Answer: மணிமேகலை

1

14. பண்பாடடுக் கூறுகளை காட்டும் தமிழ் காப்பியம் எது?

Answer: மணிமேகலை

15. சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணைகளும் நிறைந்த நூல்?

Answer: மணிமேகலை

16. மணிமேகலை எந்த சமய சார்புடைய காப்பியம்?

Answer: பெளத்தம்

17. கதை அடிப்படையில் மணிமேகலை எந்த நூலின் தொடர்ச்சி என கூறுவார்?

Answer: சிலப்பதிகாரம்

18. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை?

Answer: 30

19. மணிமேகலையின் முதல் கதை?

Answer: விழாவறை காதை

20. காலத்தை கணக்கிட்டு சொல்பவர்கள் யார்?

Answer: காலக்கணிதர்

21. கொம்புகளில் கட்டப்படும் கொடி?

Answer: காழுன்று கொடி

22. மணிமேகலையின் ஆசிரியர் யார்?

Answer: சீத்தலைச் சாத்தனார்

23. சீத்தலைச் சாத்தனார் இயற்பெயர் என்ன?

Answer: சாத்தன்

24. பாடை மாக்கள் என்பது யாரைக் குறிக்கிறது?

Answer: பல மொழி பேசும் மக்கள்

25. ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: துருத்தி

26. சீத்தலைச் சாத்தனார் சமகாலத்தவர் யார்?

Answer: இளங்கோவடிகள்

27. தண்டமிழ் ஆசான், சாத்தன், நண்ணுர்புலன் என்று சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டவர்?

Answer: சீத்தலைச் சாத்தனார்

28. சீத்தலைச் சாத்தனாரை தண்டமிழ் ஆசான், சாத்தன், நண்ணுர்புலன் என்று பாராட்டியவர் யார்?

Answer: இளங்கோவடிகள்

29. "ஆறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?

Answer: மணிமேகலை

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்