9 ஆம் வகுப்பு - மூன்று பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம்-நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் ஏழு - வாழிய-நிலனே - முத்தொள்ளாயிரம்

  Play Audio

1. முத்தொள்ளாயிரம் எந்தந்த நாடுகள் வளங்களை வெளிப்படுத்துகின்றது?

Answer: சேர, சோழ, பாண்டியன்

2. வெள்ளமதிப் பட்டது எனவெரீஇப்பு லினம்தாம்"என்ற முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ளன அணி?

Answer: தற்குறிப்பேற்ற அணி

3. "காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி நாவலோஓ என்றிசைக்கும் நாளொதை என்ற முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ள அணி?

Answer: உவமை அணி

4. "நந்தின் இளன்சினையும் புன்னைக் குவிமொட்டும்"என்ற முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ள அணி?

Answer: உவமை அணி

5. சேர நாட்டில் சேறுபட்ட நீர் மிக்க வயல்களில் எந்த நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன?

Answer: அரக்கு நிறத்தில்

6. பகைவர் அன்சும் வேலைக் கொண்ட நாடு எது?

Answer: சேரர்

7. "நச்சிலைவேல் கோக்கோதை நாடு என்ற முத்தொள்ளாயிரம் பாடல் எந்த நாட்டை குறிப்பிடப்படுகிறது?

Answer: சேர நாடு

8. "நல்யானைக் கோக்கிள்ளி நாடு"என்ற முத்தொள்ளாயிரம் பாடல் எந்த நாட்டை குறிப்பிடப்படுகிறது?

Answer: சோழர் நாடு

9. "நகைமுத்தை வெண்குடையான் நாடு"என்ற முத்தொள்ளாயிரம் பாடல் எந்த நாட்டை குறிப்பிடப்படுகிறது?

Answer: பாண்டியர் நாடு

10. சோழ நாட்டின் உழவர்கள் நெற்போர் மீது ஏறி மற்ற உழவர்களை எவ்வாறு அழைப்பர்?

Answer: நாவலோ

11. பாண்டியநாடு எந்த மரத்தின் பாலையிலிருந்து சிந்தும் மணிகளும் முத்துக்கள் போல் இருந்தது?

Answer: பாக்குமரம்

12. முத்தொள்ளாயிரம் எந்த பாவால் இயற்றப்பட்டது?

Answer: வெண்பா

13. மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900பாடல்களை கொண்ட நூல் என்பதால் ----- என்று பெயர்பெற்றது?

Answer: முத்தொள்ளாயிரம்

14. புரத்திராடடு என்னும் நூலின் இருந்து கிடைக்கப்பெற்ற முத்தொள்ளாயிரம் பாடல்களின் எண்னிக்கை?

Answer: 108பாடல்கள்

15. முத்தொள்ளாயிரம் ஆசிரியர் பெயர்?

Answer: பெயர் தெரியவில்லை

16. முத்தொள்ளாயிரம் ஆசிரியர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவராக கருதப்படுகிறார்?

Answer: ஐந்தாம் நூற்றாண்டு

17. பழனம் என்பதன் பொருள் என்ன?

Answer: நீர் மிக்க வயல்

18. வெரீஇ என்பதன் பொருள் என்ன?

Answer: அன்சி

19. பார்ப்பு என்பதன் பொருள் என்ன?

Answer: குண்சி

20. நாவலோ என்பதன் பொருள் என்ன?

Answer: நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து

21. இசைத்தால் என்பதால் பொருள் என்ன?

Answer: ஆரவாரத்தோடு கூவுதல்

22. நந்து என்பதன் பொருள் என்ன?

Answer: சங்கு

23. கழுகு என்பதன் பொருள் என்ன?

Answer: பாக்கு

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்