9 ஆம் வகுப்பு - மூன்று பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம்-நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் ஏழு - வாழிய-நிலனே - சீவக-சிந்தாமணி

  Play Audio

1. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?

Answer: திருத்தக்கத் தேவர்

2. ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையை பாடுவனவாய்க் ----- உருவாயின?

Answer: காப்பியங்கள்

3. சீவகனை தலைவனாக கொண்டு தோன்றிய காப்பியம் எது?

Answer: சீவக சிந்தாமணி

4. இன்பங்களை துறந்து துறவு பூனவேண்டும் என்பதே எந்த காப்பியத்தின் மையக்கருத்தாகும்?

Answer: சீவக சிந்தாமணி

5. திருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணியில் எந்த நாட்டின் செழிப்பை பற்றி கூறுகிறார்?

Answer: ஏமாங்கத நாடு

6. வருக்கை என்பதன் பொருள் என்ன?

Answer: பலாப்பழம்

7. மால்வரை என்பதன் பொருள் என்ன?

Answer: பெரியமலை

8. கெழுநிதி என்பதன் பொருள் என்ன?

Answer: திரண்ட நிதி

9. மருப்பு என்பதன் பொருள் என்ன?

Answer: கொம்பு

10. வெறி என்பதன் பொருள் என்ன?

Answer: மனம்

11. கழனி என்பதன் பொருள் என்ன?

Answer: வயல்

12. இரிய என்பதன் பொருள் என்ன?

Answer: ஓட

13. சூல் என்பதன் பொருள் என்ன?

Answer: கரு

14. கொடியனார் என்பதன் பொருள் என்ன?

Answer: மகளிர்

15. அடிசில் என்பதன் பொருள் என்ன?

Answer: சோறு

16. நற்றவம் என்பதன் பொருள் என்ன?

Answer: பெருந்தவம்

17. வெற்றம் என்பதன் பொருள் என்ன?

Answer: வெற்றி

18. இரந்துகேட்பவருக்கு இல்லையென்னாது வாரி வழங்கும் செல்வர்களை போன்றது எது?

Answer: வெள்ளம்

19. மனம் கமழும் காலனியில் பேரொலி கேட்டு எந்த மீன்கள் கலைந்து ஓடுகின்றன?

Answer: வரால் மீன்கள்

1

20. உழுநர் என்பதன் பொருள் என்ன?

Answer: உழவர்

21. ஏமாங்கத நாட்டின் கருக்கொண்ட பச்சை பாம்பு போல எது தோற்றமளிக்கிறது?

Answer: நெற்பயிர்கள்

22. உண்மையான தவம் புரிவோருக்கு இல்லறம் நடத்துவோருக்கும் இனிய இடமாக உள்ள நாடு எது என்று திருத்தக்கதேவர் கூறுகிறார்?

Answer: ஏமாங்கத நாடு

23. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று?

Answer: சீவக சிந்தாமணி

24. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?

Answer: சீவக சிந்தாமணி

25. சீவக சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள உட்பிரிவின் பெயர் என்ன?

Answer: இலம்பகம்

26. சீவக சிந்தாமணி எத்தனை இலம்பகங்களை கொண்டது?

Answer: 13

27. மணநூல் என அழைக்கப்படும் நூல் எது?

Answer: சீவக சிந்தாமணி

28. திருத்தக்கதேவர் எந்த சமயத்தை சேர்ந்தவர்?

Answer: சமணம்

29. திருத்தக்கதேவர் இன்பசுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்ற வகையில் எக்காப்பியத்தை இயற்றினார்?

Answer: சீவக சிந்தாமணி

30. திருத்தக்கதேவர் எந்த நூற்ராண்டைச் சேர்ந்தவர்?

Answer: ஒன்பதாம் நூற்றாண்டு

31. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக திருத்தக்கதேவர் எந்த நூலை இயற்றினார்?

Answer: நரிவிருத்தம்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்