9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதென்று-பேர் - தமிழ்விடு-தூது

  Play Audio

1. "தித்திக்கும் தெள்அமுதாயத் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன் முத்தமிழே"என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

Answer: தமிழ்விடு தூது

2. "வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச் சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே"என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்?

Answer: தமிழ்விடு தூது

3. தமிழ்விடு தூது ஆசிரியர் யார்?

Answer: பெயர் தெரியவில்லை

4. குறம், பள்ளு என்பதன் பொருள் என்ன?

Answer: சிற்றிலக்கிய வகைகள்

5. மூன்றினம் என்பது?

Answer: துறை, தாழிசை, விருத்தம்

6. திறமெல்லாம் என்பதன் பொருள் என்ன?

Answer: சிறப்பெல்லாம்

7. சிந்தாமணி என்பதன் பொருள் என்ன?

Answer: சிதறாத மணி (சீவகசிந்தாமணி)

8. சிந்து என்பதன் பொருள் என்ன?

Answer: ஒருவகை இசைப்பாடல்

9. அமைதி, மேன்மை ஆகியவற்றைக் சுட்டும் குணம் எவை?

Answer: சத்துவம்

10. சோம்பல், தாழ்மை போன்றவற்றைக் குறிக்கும் குணம்?

Answer: தாமசம்

11. போர், தீவிரமான செயல்களை குறிக்கும் குணம்?

Answer: இராசசம்

12. ஊனரசம் என்பதன் பொருள் என்ன?

Answer: குறையுடைய சுவை

13. தமிழையே தூது ஆக்கிய நூல்?

Answer: தமிழ் விடு தூது

14. இரண்டு கண்களைப்போல் இரண்டிரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு ----- என்று பெயர்?

Answer: கன்னி

15. தமிழ்ல் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையல் தொடுக்கப்படும் செய்யுள் வகை ----- ஆகும்?

Answer: கண்ணி

16. தேவர்களுடைய மூன்று குணங்கள் எவை?

Answer: சத்துவம், இராசசம், தாமசம்

17. மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் எத்தனை?

Answer: 5 (வெண்மை, கருமை, செம்மை, பொம்மை, பசுமை)

18. தமிழ் மொழி தூங்கிசை வண்ணம் முதலாக, இடைமெல்லிசை வண்ணம் ஈறாக ----- வண்ணங்களை கொண்டுள்ளது?

Answer: நூறு

19. சுவை எத்தனை வகைப்படும்?

Answer: 6

20. செவிக்கு விருந்தளிக்கும் தமிழ் மொழி எத்தனை சுவைகளை பெற்றுள்ளது?

Answer: 9சுவை (வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை

1

21. தமிழ் மொழிக்கு அழகுகள் எத்தனை?

Answer: 8 (அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு)

22. முத்திக்கனி இலக்கணக்குறிப்பு தருக?

Answer: உருவகம்

23. தெள்ளமுது இலக்கணகுறிப்பு தருக?

Answer: பண்புத்தொகை

24. குற்றமிலா இலக்கணக்குறிப்பு தருக?

Answer: ஈறுகெட்ட எதிர்மறை பெயர்ரெச்சம்

25. நா இலக்கணக்குறிப்பு தருக?

Answer: ஓரெழுத்து ஒருமொழி

26. செவிகள் உணவான இலக்கணக்குறிப்பு தருக?

Answer: நான்காம் வேற்றுமைத்தொகை

27. சிந்தா மணி இலக்கணக்குறிப்பு தருக?

Answer: ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

28. வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் பெயர்களில் அழைக்கப்படுவது?

Answer: தமிழ்விடு தூது

29. தூது எவ்வகை இலக்கியம்?

Answer: சிற்றிலக்கியம்

30. தூது அனுப்பும் பொருட்களின் எண்ணிக்கை?

Answer: பத்து

31. தமிழ்விடு தூது எக்கடவுளை தலைவனாக கொண்டு பாடப்பட்டது?

Answer: மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர்

32. தமிழ்விடு தூது எந்த வெண்பாவால் இயற்றப்பட்டது?

Answer: கலிவெண்பா

33. தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது?

Answer: 268

34. தமிழ் விடு தூது வை யார் புதுப்பித்த ஆண்டு?

Answer: உ. வே. சா

35. தமிழ்விடு தூதுவை உ. வே. சா புதுப்பித்த ஆண்டு?

Answer: 1930ஆண்டு

36. தமிழ் விடு தூதுவில் யார் மீது பெண் காதல் கொள்கிறாள்?

Answer: மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதர் மீது

37. "காதொலிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் என்ற பாடலை இயற்றியவர் யார்?

Answer: கவியோகி சுத்தானந்த பாரதியார்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்