10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - நான்காம்-தமிழ் - இலக்கணம்-பொது

  Play Audio

1. பரிபாடல் அடியில் "விசும்பும் இசையும்" என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

Answer: வானத்தையும் பேரொலியையும்

2. குலசேகர ஆழ்வார் "வித்துக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே?

Answer: பால் வழுவமைதி, திணை வழுவமைதி

3. பாரத ஸ்டேட் வங்கியின் உரையோடு மென்பொருள் எது?

Answer: இலா

4. முகப்புத்தக வலையினிலே என்ற கவிதையை இயற்றியவர் யார்?

Answer: டெபோரா பர்னாந்து (இலங்கை தமிழ்க் கவிஞர்)

5. "நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே" என்ற வரியை பாடியவர் யார்?

Answer: பாரதியார்

6. Nanotechnology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: மீநுண்தொழில்நுட்பம்

7. Biotechnology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: உயிர்த் தொழில் நுட்பம்

8. Ultraviolet rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: புற ஊதாக் கதிர்கள்

9. Space Technology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: விண்வெளி தொழில்நுட்பம்

10. Cosmic rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: விண்வெளிக் கதிர்கள்

11. Infrared rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: அகச்சிவப்பு கதிர்கள்

12. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

Answer: நீலமணி

13. அன்றாட வாழ்வில் அறிவியல் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

Answer: ச. தமிழ்ச்செல்வன்

14. காலம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

Answer: ஸ்டீபன் ஹாக்கிங்

1

15. இருதிணைகள் யாது?

Answer: உயர்திணை, அஃறிணை (அல்திணை)

16. ஆறறிவுடைய மக்களை ----- என்றும், மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் ----- என்றும் வழங்குவர்?

Answer: உயர்திணை, அஃறிணை (அல்திணை)

17. திணையின் உட்பிரிவு என்ன?

Answer: பால்

18. பால் என்பதன் பொருள் என்ன?

Answer: பகுப்பு, பிரிவு

19. பால் எத்தனை வகைப்படும்?

Answer: 5 வகைப்படும்

20. உயர்திணையின் பகுப்புகள் யாவை?

Answer: ஆண்பால், பெண்பால், பலர்பால்

21. அஃறிணையின் பகுப்புகள் யாவை?

Answer: ஒன்றன்பால், பலவின் பால்

22. உயர்திணைக்குரிய பால் பகுப்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?

Answer: வீரன், அண்ணன், மருதன் - ஆண்பால்

23. அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் எடுத்துக்காட்டு தருக?

Answer: யானை, புறா, மலை

24. அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் எடுத்துக்காட்டு தருக?

Answer: பசுக்கள், மலைகள்

2

25. இடம் எத்தனை வகைப்படும்?

Answer: 3 வகை (தன்மை, முன்னிலை, படர்க்கை)

26. தன்மை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு?

Answer: நான், யான், நாம், யாம்

27. தன்மை வினைகளுக்கு எடுத்துக்காட்டு?

Answer: வந்தேன், வந்தோம்

28. முன்னிலை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு?

Answer: நீ, நீர், நீவிர், நீங்கள்

29. முன்னிலை வினைகளுக்கு எடுத்துக்காட்டு?

Answer: நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்

30. படர்க்கை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு?

Answer: அவன், அவள், அவர், அது, அவை

31. படர்க்கை வினைகளுக்கு எடுத்துக்காட்டு?

Answer: வந்தான், சென்றான், படித்தான், பேசினார்கள், பறந்தது, பறந்தன

32. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும், எழுதுவதும்?

Answer: வழாநிலை

33. இலக்கண முறையின்றி பேசுவதும், எழுதுவதும்?

Answer: வழு நிலை

34. இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது?

Answer: வழுவமைதி

3

35. வழு, வழாநிலை எந்த தொடர்களில் வரும்?

Answer: திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு

36. திணை வழுநிலைக்கு எடுத்துக்காட்டு?

Answer: செழியன் வந்தது

37. திணை வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?

Answer: செழியன் வந்தான்

38. பால் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?

Answer: கண்ணகி உண்டான்

39. பால் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?

Answer: கண்ணகி உண்டாள்

40. இடம் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?

Answer: நீ வந்தேன்

41. இடம் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?

Answer: நீ வந்தாய்

42. காலம் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?

Answer: நேற்று வருவான்

43. காலம் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?

Answer: நேற்று வந்தான்

44. விடை வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?

Answer: கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல்

4

45. விடை வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?

Answer: கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல்

46. மரபு வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?

Answer: தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோட்டம் என்று கூறுதல்

47. மரபு வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?

Answer: தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோப்பு என்று கூறுதல்

48. "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்து கூறுவது?

Answer: திணை வழுவமைதி

49. "வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது?

Answer: பால் வழுவமைதி

50. மாறன் என்பான் தன்னைப்பற்றி பிறரிடம் கூறும்போது, "இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்" என தன்மையினை படர்க்கை இடத்தில கூறுவது?

Answer: இடவழுவமைதி

51. "குடியரசு தலைவர் நாளை தமிழகம் வருகிறார்" என்பது?

Answer: கால வழுவமைதி

52. 'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார் கூறியது?

Answer: இறைவனிடம் குலசேகராழ்வார்

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்