10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதஊற்று - இரட்டுற-மொழிதல்

  Play Audio

1. முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மொத்த வணிகலமும் மேவலால் - நித்தம் என தொடங்கும் பாடலின் ஆசிரியர்?

Answer: தமிழ் அழகனார்

2. சந்தக்கவிமணி பாடிய இரட்டுறமொழிதல் பாடலின் தமிழ் எதனுடன் ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது?

Answer: ஆழி

3. துய்ப்பது என்பதன் பொருள்?

Answer: கற்பது, தருதல்

4. மேவலால் என்பதன் பொருள்?

Answer: பொருந்துதலால், பெறுதலால்

5. மூன்று வகையான சங்குகள் எவை?

Answer: வெண்சங்கு, சலஜ்சலம், பாஜ்சசன்யம்

6. இரட்டுற மொழிதலின் மற்றொரு பெயர் என்ன?

Answer: சிலேடை

7. ஒரு சொல்லோ, சொற்றோடரோ இருபொருள்பட வருவது?

Answer: இரட்டுற மொழிதல் எனப்படும்

8. சந்தக் கவிமணி எனக் குறிப்பிடப்படுவர் யார்?

Answer: தமிழழகனார்

9. தனிப்பாடல் திரட்டு என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: புலவர் பலரால் பாடப்பட்டது

10. தமிழழகனாரின் இயற்ப்பெயர் என்ன?

Answer: சண்முக சுந்தரம்

1

11. தமிழழகனார் எத்தனை நூல்களை படைத்துள்ளார்?

Answer: 12 சிற்றிலக்கியங்கள்

12. இரட்டுறமொழிதல் பாடலில் 'முத்தமிழ் ' என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது?

Answer: முத்தினை அமிழ்ந்து எடுத்தல்

13. இரட்டுறமொழிதல் பாடலில் முச்சங்கம் என்பது கடலுக்கு இவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது?

Answer: மூன்று வகையான சங்கு தருதல்

14. தமிழின் மொத்த அணிகலன்கள் எனக் குறிப்பிடப்படும் நூல்கள்?

Answer: ஐம்பெரும்காப்பியம்

15. இரட்டுறமொழிதல் பாடலில் மெத்த வணிகலன் என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது?

Answer: மிகுதியான வணிகக் கப்பல்

16. இரட்டுறமொழிதல் பாடலில் சங்கத்தவர் காக்க என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது?

Answer: நீர் நிலையை தடுத்து நிறுத்தி சங்கினை காத்தல்

17. காலையிலேயே மாலையும் வந்து விட்டது என சிலடையாக கூறியவர் யார்?

Answer: கி. வா. ஜகந்நாதன்

18. "அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்" என்று கூறியவர்?

Answer: இசை விமர்சகர் சுப்புடு

19. முத்தமிழ் என்பது?

Answer: இயல், இசை, நாடகம்

20. முச்சங்கம் என்பது?

Answer: முதல், இடை, கடை

2

21. மெத்த வணிகலன் (மெத்த + அணிகலன்) என்பது?

Answer: ஐம்பெரும் காப்பியங்கள்

22. சங்கத்தவர் காக்க என்பது?

Answer: சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை

23. முத்தமிழ் கடல் விளக்கம் என்பது?

Answer: முத்தினை அமிழ்ந்து எடுத்தல்

24. முச்சங்கம் கடல் விளக்கம் என்பது?

Answer: மூன்று வகையான சங்குகள் தருதல்

25. மெத்த வணிகலன் கடல் விளக்கம்?

Answer: மிகுதியான வணிகக் கப்பல்கள்

26. சங்கத்தவர் காக்க கடல் விளக்கம்?

Answer: நீர்லையை தடுத்து நிறுத்தி, சங்கினை காத்தல்

27. "அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்" என்று கூறியவர்?

Answer: இசை விமர்சகர் சுப்புடு

28. பல் மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது "இவர் பல்துறை வித்தகர்" என்று அறிமுகப்படுத்தியவர் யார்?

Answer: கி. ஆ. பெ. விசுவநாதன்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்