10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - பெருவழி - சங்க-இலக்கியத்தில்-அறம்

  Play Audio

1. மன்னன் மக்களுக்கு கொடை அளிப்பது போன்ற 17ம் நூற்றாண்டு சுவரோவியம் எங்கு உள்ளது?

Answer: சிதம்பரம்

2. சமயக் கலப்பிகல்லாத மானிட அறம் நிலவிய காலம் எது?

Answer: சங்ககாலம்

3. எந்த காலத்தில் அறத்தை மனித உறவின் மையமாக கொண்டிருந்தனர்?

Answer: சங்ககாலம்

4. சங்க காலத்திற்கு பிந்தைய அறஇலக்கியங்களின் காலத்தை எவ்வாஅழைக்கலாம்?

Answer: அறநெறிக்காலம்

5. சங்க இலக்கிய அறங்கள் இயல்பானவை. 'கவிதை வாழ்க்கையின் திறனாய்வு' என்றவர் யார்?

Answer: திறனாய்வாளர் அர்னால்டு

6. 'இம்சைச் செய்து மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்' என்று புறநானூறு பாடலை இயற்றியவர் யார்?

Answer: ஏணிச்சேரி முடமோசியார்

7. சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய் பற்றி குறிப்பிட்டவர் யார்?

Answer: ஏணிச்சேரி முடமோசியார்

8. சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் யாரை முதன்மைபடுத்தியே கூறப்பட்டுள்ளது?

Answer: அரசர்கள்

9. அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் யார்?

Answer: ஊன் பொதிப் பகங்குடையார்

10. அரசன் அறநெறியில் ஆட்சி செய்ததற்கு அமைச்சரும் உதவினர் என்று "நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை" என்று கூறும் நூல்?

Answer: மதுரைக்காஞ்சி

1

11. செம்மை சான்ற 'காவிதி மக்கள்' என்று அமைச்சர்களை போற்றியவர் யார்?

Answer: மாங்குடி மருதனார்

12. 'அறம் அற க்கண்ட நெறிமான் அவையம்' என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?

Answer: புறநானூறு

13. எந்த ஊரில் உள்ள அறஅவையம் தனிசிறப்பு பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?

Answer: உறையூர்

14. மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்று கூறிய நூல் எது?

Answer: மதுரைக்காஞ்சி

15. 'தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்யக்கூடாது' என்று கூறியவர் யார்?

Answer: ஆவூர் மூலங்கிழார்

16. "எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எரிதலும் செல்லான்" என்ற புறநானூறு பாடலை இயற்றியவர் யார்?

Answer: ஆவூர் மூலங்கிழார்

17. "செல்வத்துப் பயனே ஈதல்" என்ற புறநானூறு பாடலை பாடியவர் யார்?

Answer: மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்

18. கடையெழு வள்ளல்களின் கொடை பெருமை எந்த நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது?

Answer: சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார் பாடல்

19. ஆற்றுப்படை இலக்கியங்கள் ----- இலக்கியங்களாக உள்ளன?

Answer: கொடை இலக்கியம்

20. சேர அரசர்களின் கொடை பெருமையைப் பற்றி கூறும் நூல் எது?

Answer: பதிற்றுப்பத்து

2

21. வள்ளல்கள் எவ்வாறெல்லாம் போற்றப்பட்டனர்?

Answer: 'பசிப்பிணி மருத்துவன்', 'இல்லோர் ஒக்கல் தலைவன்'

22. வழங்குவதற்கு பொருள் உள்ளதா? என்று கூட பார்க்காமல் கொடுக்கும் பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தனை பாராட்டியவர் யார்?

Answer: நக்கீரர்

23. வள்ளலின் பொருள் இரவலின் பொருள், வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று கூறியவர் யார்?

Answer: பெரும்பதுமனார்

24. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்றவர் யார்?

Answer: ஒவையார்

25. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்று கூறியவர் யார்?

Answer: நச்செள்ளையார்

26. பேகன் மறுமை நோக்கி கொடுக்காதவன் என்றவர் யார்?

Answer: பரணர்

27. தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் என குமணன் வருந்தியதாக கூறியவர் யார்?

Answer: பெருஞ்சாத்தலைச் சாத்தனார்

28. எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் பாராட்டியவர் யார்?

Answer: கபிலர்

29. "ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது" என்று கூறும் நூல்?

Answer: கலித்தொகையில்

30. தான் பெற்றதை பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் எந்த நூலால் புலப்படுத்தப்படுகிறது?

Answer: புறநானூறு

3

31. உதவி செய்தலை "உதவியாண்மை" என்று கூறியவர் யார்?

Answer: ஈழத்துப் பூதன் தேவனார்

32. உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்றவர் யார்?

Answer: நல்வேட்டனார்

33. "பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அதன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று நல்லந்துவனார் பாடிய பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

Answer: கலித்தொகை

34. 'உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான்' என்று கூறியவர் யார்?

Answer: நல்வேட்டனார்

35. 'உறவினர் கெட, வாழபவனின் பொலிவு அழியும்' என்று கூறியவர் யார்?

Answer: பெருங்கடுக்கோ

36. செல்வம் என்பது சிந்தனையின் நிறைவு என்றது?

Answer: தமிழ் இலக்கியம்

37. 'நிறைவடைகிறவனே செல்வன்' என்று கூறுவது?

Answer: சீன நாட்டுத் தாவோயியம்

38. வாய்மை பேசும் நா உண்மையான நா என்ற கருத்தை இலக்கியங்கள் எவ்வாறு கூறுகின்றன?

Answer: 'பொய்யாச் செந்நா', 'பொய்படுபறியா வயங்கு செந்நா'

39. ஓர் அதிசய திறவுகோல் என்பது எது?

Answer: நா (நாக்கு)

40. இன்பத்தின் கதவை திறப்பதும், துன்பத்தின் கதவை திறப்பதும் எது?

Answer: நா (நாக்கு)

4

41. வாய்மையை "பிழையா நன்மொழி" என்று கூறும் நூல் எது?

Answer: நற்றிணை

42. 'பொய் மொழிக் கொடுஞ்சொல்' என்று பொய்மையை குறிப்பிடும் நூல் எது?

Answer: நற்றிணை

43. தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் எத்தனையாவது தரம்?

Answer: மூன்றாம் தரம்

44. சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம்?

Answer: இரண்டாம் தரம்

45. இயல்பாக அறியும் அறம்?

Answer: முதல் தரம்

46. கி. பி. ஆறாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் போதிதர்மர் எந்த மாநகரத்துச் சிற்றரசர்?

Answer: காஞ்சி நகரம்

47. போதிதர்மர் எந்த நாட்டிற்குச் சென்றார்?

Answer: சீனா

48. போதிதர்மர் போதித்த பௌத்த சமயத்தின் ஒரு பிரிவிலிருந்து உருவான மதம் எது?

Answer: ஜென் தத்துவம்

49. போதி தர்மருக்கு இன்றளவு கோவில் கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வரும் நாடு?

Answer: சீன நாட்டவர்

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்