10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-நாடு-சமூகம் - இயல் ஏழு - விதைநெல் - சிலப்பதிகாரம்

  Play Audio

1. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

Answer: இளங்கோவடிகள்

2. சுண்ணம் என்பதன் பொருள் என்ன?

Answer: நறுமணப்பொடி

3. காருகர் என்பதன் பொருள் என்ன?

Answer: நெய்பவர் (சாலியர்)

4. தூசு என்பதன் பொருள் என்ன?

Answer: பட்டு

5. துகிர் என்பதன் பொருள் என்ன?

Answer: பவளம்

6. வெறுக்கை என்பதன் பொருள் என்ன?

Answer: செல்வம்

7. நொடை என்பதன் பொருள் என்ன?

Answer: விலை

8. பாசவர் என்பதன் பொருள் என்ன?

Answer: வெற்றிலை விற்போர்

9. ஓசுனர் என்பதன் பொருள் என்ன?

Answer: எண்ணெய் விற்போர்

10. மண்ணுள் வினைஞர் என்பதன் பொருள் என்ன?

Answer: ஓவியர்

1

11. மண்ணீட்டாளர் என்பதன் பொருள் என்ன?

Answer: சிற்பி

12. கிழி என்பதன் பொருள் என்ன?

Answer: துணி

13. ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு பற்றி கூறிய நூல் எது?

Answer: திருத்தணிகையுலா

14. "சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

Answer: திருத்தணிகையுலா

15. ஏழு வகையான இசைகள் யாவை?

Answer: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்

16. ஏழு சுரங்கள் யாவை?

Answer: ச, ரி, க, ம, ப, த, நி

17. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாக - - - என்னும் இடத்தை அடைந்தனர்?

Answer: கொடும்பாளூர்

18. தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாக சென்றால் எந்த ஊரை அடையலாம்?

Answer: மதுரை

19. கோவலனையும், கண்ணகியையும் வழிநடத்தி சென்றவர் யார்?

Answer: கவுந்தியடிகள்

2

20. கணவனை இழந்த கண்ணகி மதுரையில் இருந்து எந்த இடத்தை அடைந்தாள்?

Answer: நெடுவேள் குன்றம் (சுருளிமலை) 'வேங்கைக் கானல்' என்னும்மிடம்

21. உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள் என்பது?

Answer: உரைப்பாட்டு மடை

22. வாய்க்காலில் வரும் நீரை வயலுக்கு திருப்பிவிடுவது?

Answer: மடை

23. உரை என்பது என்ன?

Answer: பேசும் மொழியின் ஓட்டம்

24. செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது எது?

Answer: உரைப்பாட்டு மடை

25. ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்று?

Answer: சிலப்பதிகாரம்

26. முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என சிறப்பிக்கப்படும் நூல்?

Answer: சிலப்பதிகாரம்

27. மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறும் நூல்?

Answer: சிலப்பதிகாரம்

28. சிலப்பதிகாரத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?

Answer: 3 காண்டம் (புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்)

29. சிலப்பதிகாரத்தில் எத்தனை காதைகள் உள்ளன?

Answer: 30 காதைகள்

3

30. சிலப்பதிகாரம் எந்த நூலோடு தொடர்புடையது?

Answer: மணிமேகலை

31. இரட்டை காப்பியங்கள் எவை?

Answer: சிலப்பதிகாரம், மணிமேகலை

32. இளங்கோவடிகள் எந்த மரபைச்சார்த்தவர்?

Answer: சேர மரபு

33. மணிமேகலையின் ஆசிரியர் யார்?

Answer: சீத்தலைச் சாத்தனார்

34. 'அடிகள் நீரே அருளுக ' என்று இளங்கோவடிகளிடம் கூறியவர் யார்?

Answer: சீத்தலைச் சாத்தனார்

35. 'நாட்டுதும் யாம் ஓர் பாட்டைச் செய்யுள் எனச் கூறியவர் யார்?

Answer: இளங்கோவடிகள்

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்