10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - அன்பின்-மொழி - அணி

  Play Audio

1. மக்களுக்கு அழகு சேர்ப்பது?

Answer: அணிகலன்கள்

2. செய்யுளுக்கு அழகு சேர்ப்பது?

Answer: அணிகள்

3. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது ----- எனப்படும்?

Answer: தற்குறிப்பேற்ற அணி

4. "போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி "வாரல்" என்பனபோல் மரித்துக்கை காட்ட என்ற பாடலில் இடம்பெற்ற அணி எது?

Answer: தற்குறிப்பேற்ற அணி

5. தீவகம் என்னும் சொல்லுக்கு ----- என்று பொருள்?

Answer: விளக்கு

6. செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செயுள்ளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி?

Answer: தீவக அணி

7. தீவக அணி எத்தனை வகைப்படும்?

Answer: 3 (முதல்நிலை தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம்)

8. "சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர் ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து" என்ற பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது?

Answer: தீவக அணி

9. நிரல்நிறை அணி என்பது?

Answer: நிரல் - வரிசை, நிறை - நிறுத்துதல்

10. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைந்துப் பொருள் கொள்வது எந்த அணி?

Answer: நிரல்நிறை அணி

1

11. "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்ற குறளில் பயின்று வரும் அணி எது?

Answer: நிரல்நிறை அணி

12. எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்பு தன்மையினை கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்து பாடுவது எந்த அணி?

Answer: தன்மையணி

13. தன்மையணியை ----- என்றும் கூறுவர்?

Answer: நவிற்சி அணி

14. தன்மைஅணி (நவிற்சி அணி) எத்தனை வகைப்படும்?

Answer: நான்கு வகை (பொருள் தன்மையணி, குணத்தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற்தன்மையணி)

15. "மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்கள்?

Answer: சிலப்பதிகாரம்

16. "எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மை யாகும் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?

Answer: தண்டியலங்காரம்

17. "இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும் - இவ்வடிகளில் கற்காலம் என்பது?

Answer: தலையில் கல் சுமப்பது

18. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவலுமாக ஜெயகாந்தன் கருதுவது?

Answer: பெற்ற சுதந்திரத்தை பேனிக் காத்தல்

19. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ----- , ----- வேண்டினார்?

Answer: கருணையன், எலிசபெத்துக்காக

20. வாய்மையே மழைநீராக - இத்தொடரில் வெளிப்படும் அணி?

Answer: உருவக அணி

2

21. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் - இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது - சமூகப் பார்வையோடு கலைப்பனி புரியவே எழதினார்?

Answer: சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

22. Humanism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: மனிதநேயம்

23. Cultural Boundaries ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: பண்பாட்டு எல்வை

24. Cultural values ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: பண்பாட்டு விழுமியங்கள்

25. Cabinet ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: அமைச்சரவை

26. யானை சவாரி என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: பாவண்ணன்

27. கல்மரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: திலகவதி

28. அவற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: ந. முருகேசபாண்டியன்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்