10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - அன்பின்-மொழி - ஜெயகாந்தம் ( நினைவு-இதழ்)

  Play Audio

1. சமகால கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் யார்?

Answer: ஜெயகாந்தன்

2. மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் யார்?

Answer: ஜெயகாந்தன்

3. ஜெயகாந்தன் எவற்றில் எல்லாம் தனி முத்திரை பதித்தார்?

Answer: சிறுகதை புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி

4. ஜெயகாந்தனின் காலம் என்ன?

Answer: 24. 4. 1934 முதல் 08. 04. 2015

5. உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்காக குடியரசுத்தலைவர் விருது வாங்கியவர் யார்?

Answer: ஜெயகாந்தன்

6. "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது வாங்கியவர் யார்?

Answer: ஜெயகாந்தன்

7. 'இமயத்துக்கு அப்பால்' என்ற சோவியத் நாட்டு விருது வாங்கியவர் யார்?

Answer: ஜெயகாந்தன்

8. ஞானபீட விருது, தாமரைத்திரு விருதுகளை வாங்கியவர் யார்?

Answer: ஜெயகாந்தன்

9. சமுக அமைப்பின் முரண்பாடுகளை எழுத்திலே காட்டியவர் யார்?

Answer: ஜெயகாந்தன்

10. நேர்முக எதிர்முக விளைவுப் பெற்றவர், உள்ளடக்க விரிவால் மனிதாபிமானத்தை வாசக நெஞ்சங்களில் விதைத்தவர் யார்?

Answer: ஜெயகாந்தன்

1

11. என் எழுத்துக்கு ஓர் லட்சியம் உண்டு என்றவர் யார்?

Answer: ஜெயகாந்தன்

12. தர்மார்த்தங்களை உபதேசிக்க வியாசர் எழுதியது?

Answer: மகாபாரதம்

13. கலைப்பணி என்றால் அதனுள் சமூக பார்வை அடக்கம் என்றவர் யார்?

Answer: ஜெயகாந்தன்

14. ஜெயகாந்தன் எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிட தவறுவதில்லை என கூறியவர் யார்?

Answer: அசோகமித்திரன்

15. ஜெயகாந்தன் பற்றி வாசகர்களின் கருத்து எந்த இதழில் வெளியானது?

Answer: தீபம் இதழ், 1967 ஆம் ஆண்டு

16. "நேர்கொண்ட அனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள், இவைகள் ஜெயகாந்தன் என்று செம்மார்ந்த தமிழனின் சிறப்பான அடையாளம்" என்று கூறியவர் யார்?

Answer: கா. செல்லப்பன்

17. ஜெயகாந்தன் எழுதிய சிறுதொகுப்புகள் எவை

Answer: குருபீடம், யுகசக்தி, ஒரு பிடி சோறு, உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள்

18. ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள் எவை

Answer: பிரளயம், கைவிலங்கு, ரிஷிமூலம், பிரம்ம உபதேசம், யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல, சினிமாவுக்கு போன சித்தாளு

19. ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள் எவை

Answer: சுந்தர காண்டம், பாரிசுக்குப் போ! , உன்னைப் போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

20. 'கங்கை எங்கே போகிறாள்' என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?

Answer: ஜெயகாந்தன்

2

21. சுந்தர காண்டம் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?

Answer: ஜெயகாந்தன்

22. 'வாழ்விக்க வந்த காந்தி' (பிரஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்) செய்தவர் யார்?

Answer: ஜெயகாந்தன்

23. 'ஒரு கதாசிரியரின் கதை' (முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு) தமிழாக்கம் செய்தவர் யார்?

Answer: ஜெயகாந்தன்

24. ஜெயகாந்தனின் திரைப்படமான படைப்புகள் எவை?

Answer: சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான்

25. ஜெயகாந்தன் வரவிருக்கும் கேள்விகளுக்கு தரும் பதில்களாக எதை ஆக்கிவிடுகிறார்?

Answer: முன்னுரை

26. பாரிஸுக்கு போ என்ற புதினத்தின் முன்னுரை யாது?

Answer: ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம் (1966)

27. ஜெயகாந்தனின் இன்னொருமுகம் யாது?

Answer: கவிதை, திரைப்பாடல்

28. "எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் என்ற பாடலின் ஜெயகாந்தன் யாரைப் பற்றி எழுதியுள்ளார்?

Answer: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

29. எழுத்தாளனுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது என்று ஜெயகாந்தன் கூறுகிறார்?

Answer: மனித வாழ்வின் பிரச்சனைகள்

30. உங்கள் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப் பெரிய சவால் எது?

Answer: ஜெயகாந்தன் பதில் - மகத்தான சாதனை - பெட்ரா சுதந்திரத்தை பேணிக் காத்தது, மிகப்பெரிய சவாலும் அதுவே

31. தர்க்கத்திற்கு அப்பால் என்னும் சிறுகதை எந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளது?

Answer: யுகசந்தி என்னும் தொகுப்பு

32. சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer: ஜெயகாந்தன்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்