10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - அன்பின்-மொழி - தேம்பாவணி

  Play Audio

1. தேம்பாவணியை இயற்றியது யார்?

Answer: வீரமாமுனிவர்

2. "உவமணி கானம்கொல் என்று ஒலித்து அழுவ போன்றே" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: வீரமாமுனிவர்

3. கிறித்துவிற்குமுன் தோன்றியவர் யார்?

Answer: திருமுழுக்கு யோவான்

4. கிறித்துவின் வருகையை அறிவித்தவர் யார்?

Answer: திருமுழுக்கு யோவான்

5. திருமுழுக்கு யோவானை எவ்வாறு அழைப்பர்?

Answer: அருளப்பன்

6. வீரமாமுனிவர் திருமுழுக்கு யோவானை தன் காப்பியத்தில் என்ன பெயரில் குறிப்பிடுகிறார்?

Answer: கருணையன்

7. கருணையன் தாயாரின் பெயர் என்ன?

Answer: எலிசபெத் அம்மையார்

8. கருணையன் யார் இறப்பால் துன்பம் அடைகிறார்?

Answer: தன் தாயார் எலிசபெத் இறந்து விட்டதால்

9. கருணையன் துன்பத்தில் பங்கு கொண்டது யார்?

Answer: இயற்கை

10. சேக்கை என்பதன் பொருள் என்ன?

Answer: படுக்கை

1

11. யாக்கை என்பதன் பொருள் என்ன?

Answer: உடல்

12. பிணித்து என்பதன் பொருள் என்ன?

Answer: கட்டி

13. வாய்ந்த என்பதன் பொருள் என்ன?

Answer: பயனுள்ள

14. இளங்கூழ் என்பதன் பொருள் என்ன?

Answer: இளம்பயிர்

15. காய்ந்தேன் என்பதன் பொருள் என்ன?

Answer: வருந்தினேன்

16. அசும்பு என்பதன் பொருள் என்ன?

Answer: நிலம்

17. தேம்ப என்பதன் பொருள் என்ன?

Answer: வாட

18. புழை என்பதன் பொருள் என்ன?

Answer: துளை

19. உய்முறை என்பதன் பொருள் என்ன?

Answer: வாழும் வழி

20. ஓர்ந்து என்பதன் பொருள் என்ன?

Answer: நினைத்து

2

21. துணர் என்பதன் பொருள் என்ன?

Answer: மலர்கள்

22. படலை என்பதன் பொருள் என்ன?

Answer: மாலை

23. உவமணி என்பதன் பொருள் என்ன?

Answer: மணமலர்

24. கருணையன் யார் மார்பில் மாலையென அசைந்து வாழ்ந்தார்?

Answer: தன் தாயின் மார்பில்

25. கருணையன் புலம்பியதை கேட்டு யார் அழுதனர்?

Answer: மலர்கள், பறவைகள், வண்டுகள்

26. வீரமாமுனிவர் யாரை சந்திப்பதற்காக உருது மொழி கற்றார்?

Answer: திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னருடன் உரையாட

27. வீரமாமுனிவர் எத்தனை மாதங்களில் உருது மொழியைக் கற்றார்?

Answer: 2 மாதங்களில்

28. வீரமமுனிவருக்கு சந்தாசாகிப் வழங்கிய பட்டம் என்ன?

Answer: இஸ்மத் சன்னியாசி

29. இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீக சொல்லுக்கு பொருள் என்ன?

Answer: தூய துறவி

30. தேம்பா + அணி என்பதன் பொருள் என்ன?

Answer: வாடாத மாலை

3

31. தேன் + பா + அணி என்பதன் பொருள் என்ன?

Answer: தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு

32. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர் யார்?

Answer: கிருத்துவின் தந்தையாகிய சூசையப்பர்

33. தேம்பாவணி எத்தனை காண்டங்கள் உடையது?

Answer: 3 காண்டங்கள்

34. தேம்பாவணியில் உள்ள படலங்களின் எண்ணிக்கை?

Answer: 36 படலங்கள்

35. தேம்பாவணியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?

Answer: 3615 பாடல்கள்

36. தேம்பாவணி இயற்றப்பட்ட காலம் என்ன?

Answer: 17ம் நூற்றாண்டு

37. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

Answer: கான்சுடான்சு சோசப் பெசுகி

38. தமிழின் முதல் அகராதி எது?

Answer: சதுரகராதி

39. தமிழின் முதல் சதுரகராதியை எழுதியவர் யார்?

Answer: வீரமாமுனிவர்

40. தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்) என்ற என்ற எழுதியவர் யார்?

Answer: வீரமாமுனிவர்

4

41. பரமார்த்த குரு கதைகளை இயற்றியவர் யார்?

Answer: வீரமாமுனிவர்

42. காக்கென்று என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்

43. கணீர் என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: கண்ணீர் என்பதன் இடைக்குறை

44. காய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: வினைத்தொகை

45. உய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: வினைத்தொகை

46. செய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: வினைத்தொகை

47. மெய்முறை என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: வேற்றுமைத்தொகை

48. கைமுறை என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்