11 ஆம் வகுப்பு - உரைநடை - கல்வி - இயல் ஐந்து - கேடில்-விழுச்செல்வம் - தமிழகக்-கல்வி-வரலாறு

  Play Audio

1. கல்வி கற்பதற்கான பிரிந்து செல்வதை 'ஓதற்பிரிவு' என்று குறிப்பிடும் நூல் எது?

Answer: தொல்காப்பியம்

2. மெய்ப்பாடு எத்தனை வகைப்படும்?

Answer: 8

3. கல்வியின் பொருட்டு ஒருவருக்கு "பெருமிதம்" தோன்றும் என்று கூறும் நூல் எது?

Answer: தொல்காப்பியம்

4. ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களை வகுத்த நூல் எது?

Answer: தொல்காப்பியம், நன்னூல்

5. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே! " என்ற புறநானூற்று பாடலை பாடியவர் யார்?

Answer: ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

6. பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றனர் என்பதை விளக்கும் நூல் எது?

Answer: புறநானூறு

7. 'சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியாக, பயிற்று மொழியாக இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது'என்றவர் யார்?

Answer: மா. இராசமாணிக்கனார்

8. தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் மற்றும் சமயம், வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கியது என்று கூறியவர்?

Answer: மா. இராசமாணிக்கனார்

9. "துணையாய் வருவது தூயநற் கல்வி" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: திருமந்திரம்

10. "கல்வி அழகே அழகு" என்று கூறும் நூல் எது?

Answer: நாலடியார்

1

11. இளமையில் கல் என்று கூறியவர் யார்?

Answer: ஒளவையார்

12. தமிழகத்தில் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் கற்பித்தல் பணியை செய்து வந்த அமைப்புகள் எவை?

Answer: மன்றம், சான்றோர் அவை, அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, பௌத்தப்பள்ளி

13. எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் கணக்கும் கற்பிப்போர் ----- எனப்பட்டனர்?

Answer: கணக்காயர்

14. பிற்காலத்தில் ஐந்தாக விரிவாக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கங்களையும் கற்பிப்போர் ----- எனப்பட்டனர்?

Answer: ஆசிரியர்

15. சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர் ----- எனப்பட்டனர்?

Answer: குரவர்

16. கற்ற வித்தைகளை அரங்கேற்றம் இடமாகத் திகழ்வது?

Answer: மன்றம்

17. செயல்களை சீர்தூக்கி பார்க்கும் அவையாக விளங்கியது?

Answer: சான்றோர் அவை

18. கல்வி கற்பிக்கப்படும் இடங்களை "பள்ளி" என்றுக் கூறும் நூல் எது?

Answer: பெரிய திருமொழி

19. கல்வி கற்பிக்கப்படும் இங்களை "ஓதும் பள்ளி" என்று கூறும் நூல் எது?

Answer: திவாகர நிகண்டு

20. கல்வி கற்பிக்கும் இடங்களை 'கல்லூரி' என்றுக் கூறும் நூல் எது?

Answer: சீவகசிந்தாமணி

2

21. கற்றலுக்கு உதவும் ஏட்டுக்கற்றைகளை எவ்வாறு அழைத்தனர்?

Answer: ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், நூல்

22. கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் ஆகிய நான்கு கொடிகளும் ----- சமயத்தின் தலையாய அரங்கங்களாகும்?

Answer: சமண சமயம்

23. சமண சமயத்தை சேர்ந்த ----- துறவிகள் மலைக்குகைகளில் தங்கினர்?

Answer: திகம்பரத்

24. பள்ளி என்ற சொல்லுக்கு ----- என்று பொருள்?

Answer: படுக்கை

25. பள்ளி என்ற சொல் ----- சமயத்தின் கொடையாகும்?

Answer: சமண, பௌத்த

26. சமணப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கை பற்றிய செய்திகள் காணப்படும் இடம்?

Answer: திருச்சி மலைக்கோட்டை, கழுகுமலை

27. பட்டினிக்குரத்தி என்னும் சமணப்பெண் ஆசிரியர் ----- என்ற இடத்தில் சமணப் பள்ளியொன்றை நிறுவினார்?

Answer: விளாப்பாக்கம்

28. பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடமென்று கூறும் நூல்?

Answer: மணிமேகலை

29. "ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் பட்டிமண்டபத்து பாங்கறிந்து ஏறுமின்" என்று கூறும் நூல் எது?

Answer: மணிமேகலை

30. காஞ்சிபுரத்திலிருந்து பௌத்த பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய சீன பயணி யார்?

Answer: யுவான் சுவாங்

3

31. தமிழகத்தின் திண்ணைப்பள்ளி முறையை அடிப்படையாக கொண்டு ரெவனெண்ட் பெல் என்பவர் "மெட்ராஸ் காலேஜ்" என்ற பள்ளியை நிறுவிய இடம்?

Answer: ஸ்காட்லாந்த்து

32. மெட்ராஸ் காலேஜ் ஸ்காட்லாந்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: மெட்ராஸ் சிஸ்டம், பெல் சிஸ்டெம், மானிடரி சிஸ்டம்

33. ----- முறை போதனா முறையை தாண்டி வாழ்வியலை கட்டமைப்பதில் உறுதியானதாக விளங்கியது?

Answer: குருகுலக்கல்வி

34. தெற்றிப்பள்ளிகள் என அழைக்கப்படும் கல்வி முறை?

Answer: திண்ணைப்பள்ளிகள்

35. திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ----- என்றே அழைக்கப்பட்டனர்?

Answer: கணக்காயர்கள்

36. திண்ணைப் பள்ளிகள், பாட சாலைகள், மக்தாபுகள், மதரஸாக்கள் போன்ற கல்வி அமைப்புகளை நாட்டுக்கல்வி என அழைத்தவர்கள் யார்?

Answer: ஆங்கிலேயர்கள்

37. சென்னை மாகாணத்தில் ----- இயங்கி வந்தன என்று தாமஸ் மன்றோ ஆய்வில் குறிப்பிடுகிறார்?

Answer: 12, 498

38. சென்னை மாகாணத்தில் இயங்கி வந்த திண்ணைப்பள்ளிகள் பற்றி யார் காலத்தில் ஆய்வு நடத்தப்பட்டது?

Answer: தாமஸ் மன்றோ

39. திருவாடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப்புலவராக விளங்கிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரனாரிடம் உ. வே. சாமிநாதார் எம்முறையில் கல்வி கற்றார்?

Answer: திண்ணைப்பள்ளி

40. "கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer: திரிகடுகம்

4

41. டச்சுக்காரர்களின் சமயப்பரப்புச் சங்கம் தமிழகத்தில் முதன் முதலாக கல்வி பணியில் ஈடுபட்ட ஆண்டு?

Answer: 1706

42. இந்தியாவில் முதன் முதலில் அச்சுக்கூடத்தை எங்கு ஏற்படுத்தினர்?

Answer: தரங்கம்பாடி

43. தரங்கம்பாடியில் முதன் முதலில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தியவர்கள் யார்?

Answer: டச்சுக்காரர்கள்

44. இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி எது?

Answer: தமிழ்

45. 1453 இல் அச்சு இயந்திரத்தை வடிவமைத்த ஜெர்மனி நாட்டவர் யார்?

Answer: ஜான் கூட்டன்பர்க்

46. தமிழகத்தில் அறப்பள்ளிகளை நிறுவியதோடு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளையும் அமைத்தவர்கள்?

Answer: டச்சுக்காரர்கள்

47. எந்த ஆண்டு சாசனச் சட்டப்படி லண்டன் பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் ஒதுக்குகிறது?

Answer: 1813 சாசன சட்டம்

48. இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழைத்தேசத்து கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் என்னும் கொள்கையை கொண்டவர்கள் ----- என்று அழைக்கப்பட்டனர்?

Answer: கீழைத்தேயவாதிகள்

49. மேற்கத்திய பாணியில் கல்விமுறையான ஆங்கிலவழிக் கல்விமுறை மூலமாகவே இந்தியர்களை முன்னேற்ற முடியும் என வாதிட்டவர்கள் ----- என்று அழைக்கப்பட்டனர்?

Answer: மேற்கத்தியவாதிகள்

50. கீழைத்தேயவாதிகள் மற்றும் மேற்கத்தியவாதிகள் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக மெக்காலே கல்விக் குழு உருவாக்கப்பட்ட ஆண்டு?

Answer: 1835

5

51. சார்லஸ் கல்விக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு?

Answer: 1854

52. இந்திய கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் என்று போற்றப்படும் அறிக்கை?

Answer: சார்லஸ் வுட்டின் அறிக்கை

53. கி. பி. 1882ஆம் ஆண்டு உருவான ----- சீருடை முறை, தாய்மொழியைக் கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கியது?

Answer: ஹண்டர் கல்விக்குழு

54. புதிய பள்ளிகளை தொடங்கி நடத்தும் பொறுப்பை தனியாருக்கு வழங்க பரிந்துரைத்த கல்விக்குழு எது?

Answer: ஹண்டர் கல்விக்குழு

55. ஆங்கிலேயர்கள் ஆட்சிபுரிந்த 19ம் நூற்றாண்டில் நம் நாட்டில் எழுதப் படிக்காத தெரிந்தவர்களின் எண்ணிக்கை ----- ஆகா இருந்தது?

Answer: 15

56. 14 வயது வரை அனைவருக்��ும் கட்டாய இலவச கல்வி என்று கூறும் அரசியலமைப்பு பிரிவு எது?

Answer: பிரிவு - 45

6

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்