1. 'விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான் வெளுப்பது உனது விடியலில்லை ' என்ற கவிதையை எழுதியவர் யார்?
Answer: அப்துல் ரகுமான்
2. 'விடையை கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு வினாவாய் நீயே நிற்கின்றாய்' என்ற கவிதையை எழுதியவர் யார்?
Answer: அப்துல் ரகுமான்
3. 'ஏன்? என்பாய் கேள்வியில்லை - அந்த ஏன் என்னும் ஒளியில் உன்னைத் தேடு' என்ற கவிதையை எழுதியவர் யார்?
Answer: அப்துல் ரகுமான்
4. சூஃபி பிரிவை சேர்ந்த மௌலானா ரூமி அவர்கள் ஆப்கானிஸ்தானில் பிறந்த ஆண்டு?
Answer: 1207
5. மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியத்தை படைத்தவர்?
Answer: மௌலானா ரூமி
6. புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து கவிதை படைத்தவர்?
Answer: மௌலானா ரூமி
7. 'என்னை மூங்கிற்காட்டிலிருந்து வெட்டி வீழ்த்தி பிரித்ததற்காக நான் எழுப்பும் கூக்குரல் கேட்டு ஆடவர் பெண்டிர் யாவரும் அழுது புலம்புகின்றனர்' என்ற கவிதையை இயற்றியவர்?
Answer: மௌலானா ரூமி
8. இலக்கண குறிப்பு : - 'கற்றேன்'?
Answer: தன்மை ஒருமை வினைமுற்று
9. 'உரைத்தாய்'?
Answer: முன்னிலை ஒருமை வினைமுற்று
10. 'உடை அணிந்தேன்'?
Answer: இரண்டாம் வேற்றுமை தொகை
1
11. அப்துல் ரகுமான் எந்த இஸ்லாமிய கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்?
Answer: வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில்
12. பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை முதலான நூல்களை எழுதியவர்?
Answer: அப்துல் ரகுமான்
13. அப்துல் ரகுமான் எந்த நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
Answer: ஆலாபனை
14. பாரதிதாசன் விருது, தமிழன்னை விருது பெற்றவர் யார்?
Answer: அப்துல் ரகுமான்
15. 'தொலைந்து போனவர்கள்' என்ற கவிதை இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: சுட்டு விரல்
2