6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - எல்லாரும்-இன்புற - பராபரக்-கண்ணி

  Play Audio

1. "தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்?

Answer: தாயுமானவர்

2. தண்டருள் என்ற சொல்லின் பொருள்?

Answer: குளிர்ந்த கருணை

3. பணி என்ற சொல்லின் பொருள்?

Answer: தொண்டு

4. கூர் என்ற சொல்லின் பொருள்?

Answer: மிகுதி

5. எய்தும் என்ற சொல்லின் பொருள்?

Answer: கிடைக்கும்

6. செம்மையருக்கு என்ற சொல்லின் பொருள்?

Answer: சான்றோருக்கு

7. எல்லாரும் என்ற சொல்லின் பொருள்?

Answer: எல்லா மக்களும்

8. ஏவல் என்ற சொல்லின் பொருள்?

Answer: தொண்டு

9. அல்லாமல் என்ற சொல்லின் பொருள்?

Answer: அதைத்தவிர

10. பராபரமே என்ற சொல்லின் பொருள்?

Answer: மேலான பொருளே

1

11. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர் யார்?

Answer: தாயுமானவர்

12. "தமிழ் மொழியின் உபநிடதம்" எனப் போற்றப்படும் நூல்?

Answer: தாயுமானவர் பாடல்கள்

13. ‘கண்ணி’ என்பது?

Answer: இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை

14. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

Answer: தம்முயிர்

15. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

Answer: இன்புற்றிருக்க

16. 'தானென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: தான் + என்று

17. 'சோம்பல்’ என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்?

Answer: சுறுசுறுப்பு

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்