6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் ஏழு - புதுமைகள்-செய்யும்-தேசமிது - நால்வகைச்-சொற்கள்

  Play Audio

1. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

Answer: நான்கு (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்)

2. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்?

Answer: பெயர்ச்சொல்

3. பெயர்ச்சொல் (எ. கா. ) ?

Answer: பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்

4. வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல்?

Answer: வினைச்சொல் (எடுத்துக்காட்டு) வா, போ, எழுது, விளையாடு

5. பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல்?

Answer: இடைச்சொல் (எடுத்துக்காட்டு) உம் – தந்தையும் தாயும், மற்று - மற்றொருவர், ஐ - திருக்குறளை

6. பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வரும் சொல்?

Answer: உரிச்சொல் (எடுத்துக்காட்டு) மா – மாநகரம், சால - சாலச்சிறந்தது

7. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?

Answer: வ. உ. சிதம்பரனார்

8. வ. உ. சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?

Answer: பாரதியார்

9. வ. உ. சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?

Answer: பாரதியார் பாடல்கள்

1

10. ”சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்த நாள்?

Answer: 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள்

11. ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்?

Answer: வ. உ. சிதம்பரனார்

12. நாட்டுப்பற்று என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: Patriotism

13. இலக்கியம் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: Literature

14. கலைக்கூடம் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: Art Gallery

15. மெய்யுணர்வு என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: Knowledge of Reality

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்