7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - அறிவியல்-ஆக்கம் - கவின்மிகு-கப்பல்

  Play Audio

1. "உலகுகிளர்ந்த தன்ன உருகெழு வங்கம்" என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

Answer: மருதன் இளநாகனார்

2. உரு என்பதன் பொருள்?

Answer: அழகு

3. போழ என்பதன் பொருள்?

Answer: பிளக்க

4. வங்ககூழ் என்பதன் பொருள்?

Answer: காற்று

5. நீகான் என்பதன் பொருள்?

Answer: நாவாய் ஓட்டுபவன்

6. வங்கம் என்பதன் பொருள்?

Answer: கப்பல்

7. எல் என்பதன் பொருள்?

Answer: பகல்

8. கோடு உயர் என்பதன் பொருள்?

Answer: கரை உயர்ந்த

9. மாட ஒள்ளெரி என்பதன் பொருள்?

Answer: கலங்கரை விளக்கம்

10. உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது?

Answer: நாவாய்

11. சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்?

Answer: மருதன் இளநாகனார்

12. கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் யார்?

Answer: மருதன் இளநாகனார்

1

13. மருதத்திணை பாடுவதில் வல்லவர் யார்?

Answer: மருதன் இளநாகனார்

14. எட் டுத்தொகை நூல்களுள் ஒன்று?

Answer: அகநானுறு

15. அகநானுறு நூலின் வேறு பெயர்?

Answer: நெடுந்தொகை

16. அகநானுறு நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

Answer: 400

17. எட்டுத்தொகை நூல்கள் எவை?

Answer: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானுறு, புறநானுறு

18. இயற்கை வங்கூல் ஆட்ட - இத்தொடரில் வங்கூல் சொல்லின் பொருள்?

Answer: காற்று

19. மக்கள் ----- ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்?

Answer: வங்கத்தில்

20. புலால் நாற்றம் உடையதாக அகநானுறு கூறுவது?

Answer: கடல்

21. 'பெருங்கடல் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: பெருமை + கடல்

22. இன்று + ஆகி என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: இன்றாகி

23. எதுகை இடம்பெறாத இணை?

Answer: இரவு - இயற்கை

24. பொருத்துக a. வங்கம் - 1. பகல் b. நீகான் - 2. கப்பல் c. எல் - 3. கலங்கரை விளக்கம் d. மாட ஒள்ளெரி - 4. நாவாய் ஓட்டுபவன்

Answer: a - 2, b - 4, c - 1, d - 3

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்