1. பயணம் எத்தனை வகைப்படும்?
Answer: மூன்று வகை (தரைவழி, நீர்வழி, வான்வழி)
2. நீர்வழிப் பயணம் எத்தனை வகைப்படும்?
Answer: இரண்டு வகை (உள்நாட்டு நீர்வழி, கடல்நீர் பயணம்)
3. நமக்கு கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையான நூல் எது?
Answer: தொல்காப்பியம்
4. கடற்பயணத்தை 'முந்நீர் வழக்கம் 'எனக் குறிப்பிடப்படும் நூல் எது?
Answer: தொல்காப்பியம்
5. "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து " - என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?
Answer: திருக்குறள்
6. பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டததை விரிவாக விளக்கும் நூல் எது?
Answer: பட்டினப்பாலை
7. 'உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் 'என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?
Answer: அகநானுறு
8. "அருங்கலம் தரீஇயற் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
Answer: பதிற்றுப்பத்து
9. பல வகையான கப்பல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிகண்டு எது?
Answer: சேந்தன் திவாகர நிகண்டு
1
10. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளை கடக்க பயன்படுத்தியவை எவை?
Answer: தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம்
11. தமிழர்கள் கடல் பயணம் மேற்கோள்ள உதவியவை எது?
Answer: கலம், வங்கம், நாவாய்
12. பழங்காலத்தில் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி தற்போது எங்குள்ளது?
Answer: நியூசிலாந்து நாட்டு வெலிங்டன்அருங்காட்சியம்
13. | தமிழர்கள் கப்பல் கட்டும் கலைஞர்களை எவ்வாறு அழைத்தனர்?
Answer: கம்மியர்
14. "கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: மணிமேகலை
15. தமிழர்கள் கப்பலின் நீர்மட்ட வைப்பிற்கு எந்த வகையான மரங்களை பயன்படுத்தினர்?
Answer: வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல்
16. தமிழர்கள் கப்பல்களின் பக்கங்களுக்கு எந்த வகையான மரங்களை பயன்படுத்திறனர்?
Answer: தேக்கு, வெண்தேக்கு
17. மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை ----- என்பர்?
Answer: வெட்டுவாய்
18. 'கண்ணடை 'என்பது எந்த மரத்தில் காணப்படும் உருவங்கள்?
Answer: இழைத்தை மரம்
19. கப்பலின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை எந்த நீட்டலளவை மூலம் கணக்கிட்டனர்?
Answer: தச்சுமுலம்
2
20. பெரிய படகுகளின் முன் பக்கத்தை எதன் தலையைப் போன்று வடிவமைத்தனர்?
Answer: யானை, குதிரை, அன்னம் இதை (கரிமுக அம்பி, பரிமுக அம்பி) என அழைத்தனர்
21. மரங்களையும், பலகைகளையும் இணைக்கும்போது அதன் இடையே எதை வைத்தனர்?
Answer: தேங்காய் நார், பஞ்சு
22. தமிழர்கள் கப்பலின் அடிப்பகுதியில் எதைக்கொண்டு பூசினர்?
Answer: சுண்ணாம்பும், சணலையும் கலந்து அரைத்து எண்ணெய் கலந்து பூசினர்
23. தமிழர்களின் கப்பல்கள் பழுதடையாமல் உழைத்ததை கண்டு வியந்து பாராட்டிய கடற்பயணி யார்?
Answer: மார்க்கோபோலோ (இத்தாலி)
24. மரத்திலான ஆணிகளை ----- என்பர்?
Answer: தொகுதி
25. "ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறியவர்?
Answer: வாக்கர்
26. பாய்மரக் கப்பல்கள் எதன் உதவியால் செலுத்தப்பட்டது?
Answer: காற்று
27. தமிழர் பயன்படுத்திய பாய்மரக் கப்பல்கள் எவை?
Answer: பெரிய பாய்மரம், திருக்கைத்திப் பாய்மரம், காணப் பாய்மரம், கோசுப் பாய்மரம்
28. பாய்மரக் கப்பலில் பயன்படும் கயிர்கள் எவை?
Answer: ஆஞ்சான் கயிறு, தாம்பாங்கயிறு, வேடாங்கயிறு, பளிங்கைக் கயிறு, முட்டங்கயிறு, இளங்கயிறு, கோடிப்பாய்க்கயிறு
3
29. பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் எது?
Answer: பரிபாடல்
30. கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் ----- எனப்படும்?
Answer: எரா
31. கப்பலுக்கு பயன்படும் குறுக்கு மரத்தை ----- என்பர்?
Answer: பருமல்
32. கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி ----- எனப்படும்?
Answer: சுக்கான்
33. கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பு?
Answer: நங்கூரம்
34. சமுக்கு ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுவது எது?
Answer: சமுக்கு
35. சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று எந்த நூல் கூறுகிறது?
Answer: கப்பல் சாத்திரம்
36. கப்பல் செலுத்துபவர்களை என்ன பெயரில் அழைத்தனர்?
Answer: மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி
37. "நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி வளி தொழில்" என்னும் புறப்பாடல் அடியை பாடியவர் யார்?
Answer: வெண்ணியக்குயத்தியார்
38. கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தை காட்டுவதற்காக அமைக்கப்படுவது ----- ஆகும்?
Answer: கலங்கரை விளக்கம்
4
39. உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினை கொண்டதாக உடையது?
Answer: கலங்கரை விளக்கம்
40. கலம் என்பதன் பொருள்?
Answer: கப்பல்
41. கரைதல் என்பதன் பொருள்?
Answer: அழைத்தல்
42. பெரிய கப்பலில் வரும் பொருள்களை தோணிகள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர் என்ற செய்தி இடம்பெற்ற நூல்?
Answer: புறநானுறு
43. "கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து "என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: புறநானுறு
44. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது?
Answer: ஓடம்
45. தொல்காப்பியம் கடற்பயணத்தை ----- வழக்கம் என்று கூறுகிறது?
Answer: முந்நீர்
46. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி?
Answer: சுக்கான்
47. கப்பல் கட்டுவதற்கு பயன்படும் மர ஆணிகள் ----- என அழைக்கப்படும்?
Answer: தொழுதி
48. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது ----- ?
Answer: நங்கூரம்
49. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ----- எனக் குறிப்பிடப்படும்?
Answer: கண்ணடை
50. பொருத்துக a. எரா - 1. திசைகாட்டும் கருவி b. பருமல் - 2. அடிமரம் c. மீகாமன் - 3. குறுக்கு மரம் d. காந்த ஊசி - 4. கப்பலைச் செலுத்துபவர்
Answer: a - 2, b - 3, c - 4, d - 1
5