7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - ஒப்புரவு-ஒழுகு - அறம்-என்னும்-கதிர்

  Play Audio

1. "இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக" என்னும் வரியை பாடியவர் யார்?

Answer: முனைப்பாடியார்

2. வித்து என்பதன் பொருள் என்ன?

Answer: விதை

3. ஈன என்பதன் பொருள் என்ன?

Answer: பெற

4. நிலன் என்பதன் பொருள் என்ன?

Answer: நிலம்

5. களை என்பதன் பொருள் என்ன?

Answer: வேண்டாத செடி

6. பைங்கூழ் என்பதன் பொருள் என்ன?

Answer: பசுமையான பயிர்

7. வன்சொல் என்பதன் பொருள் என்ன?

Answer: கடுஞ்சொல்

8. முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

Answer: திருமுனைப்பாடி

9. முனைப்பாடியார் எந்த சமயத்தை சேர்ந்தவர்?

Answer: சமணம்

10. முனைப்பாடியார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

Answer: 13 - ம் நூற்றாண்டு

11. முனைப்பாடியார் இயற்றிய நூலின் பெயர் என்ன?

Answer: அறநெறிச்சாரம்

12. அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களை கொண்டது?

Answer: 225 படல்கள்

13. காந்தியடிகள் எப்போதும் ----- பேசினார்?

Answer: வாய்மையை

14. இன்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுததுக?

Answer: இனிமை + சொல்

15. அறம் + கதிர் என்பதனை சேர்த்தெழுததுக?

Answer: அறக்கதிர்

16. 'இளமை' என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

Answer: முதுமை

17. பொருத்துக: விளைநிலம்

Answer: இன்சொல்

18. விதை

Answer: ஈகை

19. களை

Answer: வன்சொல்

20. உரம்

Answer: உண்மை

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்