8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்-இன்பம் - சொற்பூங்கா

  Play Audio

1. தமிழ் சொல் என்பதற்கு ----- என்பது பொருள்?

Answer: நெல்

2. நெல்லில் பதர் உண்டு, ஆனால் ----- பதர் இருக்காது?

Answer: சொல்லில்

3. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யார் வாக்கு?

Answer: தொல்காப்பியர்

4. மொழி என்பதற்கு ----- என்பதும் ஒரு பொருள்?

Answer: சொல்

5. மொழியை எவ்வாறு பிரிப்பர்?

Answer: மூன்று வகையாக (ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி)

6. நெட்டெழுத்து ஏழு ஓரெழுத்து ஒருமொழி என்றவர் யார்?

Answer: தொல்காப்பியர்

7. குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைவு இலவே என்றவர் யார்?

Answer: தொல்காப்பியர்

8. 42 ஓரெழுத்து ஒரு மொழி உண்டு எனக் கூறியவர் யார்?

Answer: நண்ணுளார்

9. 42 ஓரெழுத்து ஒரு மொழியில் எத்தனை குறில் எழுத்துக்கள் உள்ளன?

Answer: 2 (நொ து)

10. காட்டுப் பசுவுக்கு ----- என்ற பெயர் உண்டு?

Answer: ஆமா

11. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை ----- என்கிறோம்?

Answer: மாநாடு

12. பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை ----- என்கிறோம்?

Answer: மாநிலம்

13. உலகப் பெரும் பரப்பையும் இயக்கத்தையும் சுட்ட ----- என்கிறோம்?

Answer: மானாலம்

1

14. ஏவுதல் என்பது என்ன?

Answer: அம்புவிடுதல்

15. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ----- எனப்பட்டன?

Answer: ஏவலன்

16. அம்புவிடும் கலையை ----- என்றது தமிழ்?

Answer: ஏகலை

17. அம்புவிடுவதில் வல்லவனை ----- என்று பாராட்டினர்?

Answer: ஏகலைவன்

18. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer: இரா. இளங்குமரனார்

19. பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர், நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத்திறன் பெற்றவர் யார்?

Answer: இரா. இளங்குமரனார்

20. இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார்?

Answer: இரா. இளங்குமரனார்

21. தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?

Answer: இரா. இளங்குமரனார்

22. திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும் அமைத்தவர் யார்?

Answer: இரா. இளங்குமரனார்

23. கலைச்சொல் அறிவோம்: articulatory phonetics

Answer: ஒலிப்பிறப்பியல்

24. consonant

Answer: மெய்யொலி

25. nasal consonant sound

Answer: மூக்கொலி

26. epigraph

Answer: கல்வெட்டு

27. vowel

Answer: உயிரொலி

28. lexicography

Answer: அகராதியியல்

29. phoneme

Answer: ஒலியன்

30. pictograph

Answer: சித்திர எழுத்து

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்