8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - அறத்தால்-வருவதே-இன்பம் - அயோத்திதாசர்-சிந்தனைகள்

  Play Audio

1. சமத்துவம், பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் யார்?

Answer: தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்

2. தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்?

Answer: அயோத்திதாசர்

3. நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு, உவப்பான எழுத்து, பாராட்டத்தக்க உழைப்பு ஆகிய ஐந்து பண்புகளையும் ஒருசேரப்பெற்ற சிந்தனையாளர் யார்?

Answer: அயோத்திதாசர்

4. தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

Answer: அயோத்திதாசர்

5. அயோத்திதாசர் பிறந்த ஆண்டு எது?

Answer: 1845மே 20ம் நாள் சென்னையில் பிறந்தார்

6. அயோத்திதாசர் இயற்பெயர் என்ன?

Answer: காத்தவராயன்

7. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதனால் பள்ளிப்பருவத்தில் பல இன்னல்களுக்கு உள்ளானவர்?

Answer: அயோத்திதாசர்

8. அயோத்திதாசர் (காத்தவராயன் யாரிடம் கல்வியும், சித்தமருத்துவம் பயின்றார்?

Answer: அயோத்திதாசர் பண்டிதர்

9. தன் ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டவர் யார்?

Answer: அயோத்திதாசர்

10. அயோத்திதாசர் எங்கு சென்று வாழ்ந்தார்?

Answer: நீலகிரி

11. அயோத்திதாசர் திருமணத்திற்கு பிறகு எங்கு சென்றார்?

Answer: பர்மா

12. பர்மாவில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்துவந்த தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்டவர் யார்?

Answer: அயோத்திதாசர்

13. அயோத்திதாசர் அறிந்த மொழிகள் யாவை?

Answer: தமிழ், பாலி, ஆங்கிலம் வடமொழி

14. அயோத்திதாசர் எந்த வகையான நூல்களை ஆழ்ந்து காற்றார்?

Answer: இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயதத்துவம்

1

15. ஒருபைசாத் தமிழன் என்னும் வாரஇதழை தொடங்கியவர்?

Answer: அயோத்திதாசர்

16. அயோத்திதாசர் ஒருபைசாத் தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கிய ஆண்டு எது?

Answer: 1907

17. ஒருபைசாத் தமிழன் இதழை ஓர் ஆண்டுக்கு பின் என்ன பெயராக மாற்றினார்?

Answer: தமிழன்

18. மக்களுக்கு நீதி நேர்மை, சரியான பாதை ஆகியவற்றை தெளிவுபடுத்துவதே தமிழன் இதழின் நோக்கம் என்று கூறியவர் யார்?

Answer: அயோத்திதாசர்

19. தமிழன் இதழ் மூலம் எங்கெல்லாம் சமூக சிந்தனை, பகுத்தறிவு உணர்வுகளை பரப்பினார்?

Answer: தமிழ்நாடு, மைசூர், கோலார், ஐதராபாத், ரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா

20. ஒரு மனிதன் அறிவு வளர்ச்சிபெற வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம் என்று கூறியவர்?

Answer: அயோத்திதாசர்

21. கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல், மரம்வளர்த்தல் போன்றவற்றையும் கற்கவேண்ண்டும் என்று வலியுறுத்தியவர் யார்?

Answer: அயோத்திதாசர்

22. சங்ககாலப் பெண்களைப் போலவே, இக்காலப் பெண்களும் கல்விகற்று தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக்கொள்ளும் உரிமையை பெறவேண்டும் என்று எடுத்துரைத்தவர் யார்?

Answer: அயோத்திதாசர்

2

23. போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு சிமிட்டு இரத்தினைச் சுருக்கம் பாலாவாகடம் போன்ற நூல்கள் பதிப்பித்தவர் யார்?

Answer: அயோத்திதாசர்

24. "என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கு சீர்திருத்தக் கருத்துக்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் அப்பாத்துரையாரும்"என கூறியவர்?

Answer: தந்தை பெரியார்

25. அயோத்திதாசர் கூறும் வாழும் முறை யாது?

Answer: அன்பு கொண்டு வாழ வேண்டும்

26. அன்பு கொண்ட நாட்டில் ஒரே நீர்த்துறையில் புலியும் பசுவும் நீர் அருந்தும் என்றவர் யார்?

Answer: அயோத்திதாசர்

27. நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கை கூட உதவாது என கூறியவர்?

Answer: அயோத்திதாசர்

28. புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச எ சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா போன்ற நூல்கலை எழுதியவர் யார்?

Answer: அயோத்திதாசர்

29. திருவள்ளுவர், ஓளவையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பெளத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியவர் யார்?

Answer: அயோத்திதாசர்

30. எந்த மருத்துவமனைக்கு அயோத்திதாசர் பண்டிதர் மருத்துவமனை என பெயர் சூட்டப்பட்டது?

Answer: சென்னை தாம்பரம் சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவனை

31. ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்க"திராவிட மகாஜன சங்கம்"என்னும் அமைப்பை தோற்றுவித்தவர்?

Answer: அயோத்திதாசர்

32. அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

Answer: 1892

33. விடுதலை என்பது ஆட்சிமாற்றம் மடடுமன்று. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அமையவேண்டும் என கூறியவர்?

Answer: அயோத்திதாசர்

34. சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மட்டும் இருக்ககூடாது, மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அது அமையவேண்டும் என கூறியவர?

Answer: அயோத்திதாசர்

3

35. அயோத்திதாசர் ----- சமூகசீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்?

Answer: தென்னிந்திய

36. அயோத்திதாசர் நடத்திய இதழ்?

Answer: ஒருபைசா தமிழன்

37. கல்வியோடு ----- கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து?

Answer: கைத்தொழிலும்

38. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது?

Answer: ஆழ்ந்த படிப்பு

39. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது?

Answer: மழை

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்