8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - அறத்தால்-வருவதே-இன்பம் - மெய்ஞ்ஞான-ஒளி

  Play Audio

1. எப்படியும் வாழலாம் என்பது ----- இயல்பு?

Answer: விலங்குகளின்

2. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ----- பண்பு?

Answer: மனிதன்

3. "கள்ளக் கருத்துக்களைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: குணங்குடி மஸ்தான் சாகிபு

4. "அடக்கத் தாம்மாய ஐம்பொறியை கட்டிப்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: குணங்குடி மஸ்தான் சாகிபு

5. பகராய் என்பதன் பொருள் என்ன?

Answer: தருவாய்

6. ஆனந்த வெள்ளம் என்பதன் பொருள் என்ன?

Answer: இன்பப்பெருக்கு

7. பராபரம் என்பதன் பொருள் என்ன?

Answer: மேலான பொருள்

8. அறுத்தவருக்கு என்பதன் பொருள்?

Answer: நீக்கியவர்க்கு

9. ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிக அறிய செயல் என்றவர் யார்?

Answer: குணங்குடி மஸ்தான் சாகிபு

10. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?

Answer: சுல்தான் அப்துல்காதர்

11. இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தவர் யார்?

Answer: குணங்குடி மஸ்தான் சாகிபு

12. சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி நானம் பெற்றவர் யார்?

Answer: குணங்குடி மஸ்தான் சாகிபு

13. எக்காளக் கன்னி மனோன்மனிக் கன்னி, நந்தீசுவரக் கன்னி முதலான நூல்கள் இயற்றியவர் யார்?

Answer: குணங்குடி மஸ்தான் சாகிபு

1

14. மனிதர்கள் தம் ----- தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்?

Answer: ஐம்பொறிகளை

15. நானியர் சிறந்த கருத்துக்களை மக்களிடம் ----- ?

Answer: பகர்தனர்

16. "ஆனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: ஆனந்தம் + வெள்ளம்

17. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: உள்ளிருக்கும்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்