9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - கலை-பல-வளர்த்தல் - சிற்பக்கலை

  Play Audio

1. "ஓவிய விதானத்து, உரைபெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?

Answer: சிலப்பதிகாரம் (புகார்க்காண்டத்தில் அரங்கேற்றுகாதையின் வரி)

2. கல், உலோகம் செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே ----- எனலாம்?

Answer: சிற்பக்கலை

3. "கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்"என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

Answer: திவாகர நிகண்டு மற்றும் மணிமேகளை

4. சிற்பங்களை உருவ அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்?

Answer: இரண்டு (முழுஉருவச் சிற்பங்கள், புடைப்பு சிற்பங்கள்)

5. உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாக தெரியும் வகையில் அமைந்த சிற்பம் எது?

Answer: முழு உருவச் சிற்பம்

6. முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பம் எது?

Answer: புடைப்பு சிற்பம்

7. உலோகத்தினாலும், கல்லினாலும் சிற்பங்கள் எத்தனை வகையில் அமைக்கப்படுகின்றன?

Answer: நான்கு (தெய்வ உருவங்கள், இயற்கை)

8. சிற்பிகள் எவ்வாறு

Answer: சிறப்பிக்கப்படுகின்றனர்?

9. யார் காலத்தில் சுதையினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன?

Answer: பல்லவர் காலத்தில்

10. தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய எதில் சிற்பக்கலை பற்றி குறிப்பு காணப்படுகிறது?

Answer: தொல்காப்பியம்

1

11. போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடப்படும் கல்?

Answer: நடுகல்

12. தமிழரின் தொடக்ககாலச் சிற்பக்கலைக்கு சான்றாக விளங்குவது?

Answer: நடுகல்

13. கண்ணகிக்கு சிலைவடித்த செய்தி இடம் பெரும் நூல்?

Answer: சிலப்பதிகாரம்

14. மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்பு கலவை (சுதை சிற்பங்கள்) இருந்ததை எந்த நூல் மூலம் அறியலாம்?

Answer: மணிமேகலை

15. பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது எது?

Answer: மாமல்லபுரச் சிற்பங்கள்

16. பல்லவர் கால சிற்பக்கலை எந்தெந்த கோவில்களில் காணப்படுகிறது?

Answer: கான்சி கைலாசநாதர்கோவில், கான்சி வைகுந்தப்பெருமாள் கோவில்

17. பல்லவர் காலச் சிற்பங்கள் எங்கு காணப்படுகின்றன?

Answer: மாமல்லபுரம், காஞசிபுரம், திருச்சி மலைக்கோட்டை

18. பாண்டியர் காலச் சிற்பங்கள் எங்கு காணப்படுகின்றன?

Answer: திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி திருப்பரங்குன்றம்

19. கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான்கோவிலில் அமைந்துள்ள சிற்பங்கள் யார் காலச் சிற்பங்களுக்கு உதாரணம்?

Answer: பாண்டியர் காலச் சிற்பங்கள்

20. தஞசை பெரியகோவிலை காட்டியவர்?

Answer: முதலாம் இராஜராஜன்

2

21. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் யார்?

Answer: முதலாம் ராஜேந்திரசோழன்

22. தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலை கட்டியவர் யார்?

Answer: இரண்டம் இராஜராஜன்

23. திரிபுவன வீரேசுவரம் கோவிலை கட்டியவர் யார்?

Answer: மூன்றாம் குலோத்துங்கச் சோழன்

24. 14அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும் மிகப்பெரிய நந்தியும் எங்கு காணப்படுகிறது?

Answer: தஞசை பெரியகோவில்

25. ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகம், சிங்கமும் கிணறும் எங்கு காணப்படுகிறது?

Answer: கங்கைகொண்ட சோழபுரம்

26. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடும்பாளூரில் மூவர் கோவில் சிற்பங்கள் யாரால் கட்டப்பட்டது?

Answer: இரண்டாம் பராந்தக சோழன்

27. சீனிவாசநல்லூரில் உள்ள குரங்குநாதர் கோவில் சிற்பங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளது?

Answer: திருச்சிராப்பள்ளி

28. சோழர் காலச் சிற்பக்கலை நுட்பத்திற்கு மிகசசிறந்த சான்றாக விளங்கும் கோவில்?

Answer: திருவரங்கக் கோவில்

29. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று யாருடைய காலம் அழைக்கப்படுகிறது?

Answer: சோழர்

30. தமிழ்நாடு சிற்பக்கலை கல்லூரி எங்கு உள்ளது?

Answer: மாமல்லபுரம்

3

31. தமிழகத்தில் உலோகப்படிமங்கள் செய்யும் பயிற்சி செய்யும் நிலையம் அமைத்துள்ள இடம் எது?

Answer: சுவாமிமலை, கும்பகோணம், மதுரை

32. அரசு கவின் கலைக்கல்லூரி எங்கு அமைத்துள்ளது?

Answer: சென்னை கும்பகோணம்

33. தமிநாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்கம் சிற்பக்கலை பற்றி வெளியிடும் நூலின் பெயர் என்ன?

Answer: சிற்பசெந்நூல்

34. யாருடைய ஆட்சிக்காலத்தில் கோயில் கோபுரங்கள் உயரமாக கட்டப்பட்டது?

Answer: விஜயநகர பேரரசு

35. விஜயநகர மன்னர் கால சிற்பங்கள் எந்தெந்த பகுதிகளுடன் தொடர்பு கொண்டு இருந்தது?

Answer: தெலுங்கு, கன்னடம்

36. ஆயிரங்கால் மண்டபத்தை அமைத்தவர்கள் யார்?

Answer: நாயக்கர்

37. நாயக்கர் காலச் சிற்பங்களுக்கு உச்சநிலை படைப்பு எனக் கருதப்படுவது எது?

Answer: கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள சிவன் கோவில்

38. சமணச் சிற்பங்கள் எங்கு காணப்படுகின்றது?

Answer: திருநாதர் குண்று, மதுரை

39. இருபத்துநான்கு தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டடுள்ள இடம்?

Answer: விழுப்புரம் மாவட்டம் சென்ஷிக்கு அருகில் உள்ள திருநாதர்குன்று

40. பைனசிதை என்பதன் பொருள் என்ன?

Answer: சிமெண்ட்

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்