9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - உள்ளத்தின்-சீர் - திருக்குறள்

  Play Audio

1. "அகழ்வரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை இக்குறளில் பயின்று வரும் அணி?

Answer: உவமையணி

2. "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை இக்குறளில் பயின்று வரும் அணி?

Answer: சொற்பொருள் பின்வருநிலையணி

3. "குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் இக்குறளில் பயின்று வரும் அணி?

Answer: சொற்பொருள் பின்வருநிலையணி

4. "பெருமைக்கும் எனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் இக்குறளில் பயின்று வரும் அணி?

Answer: ஏகதேச உருவக அணி

5. பேதை தொழில் எது?

Answer: நாணாமை, நாடாமை

6. "கனவிலும் இன்னது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு - இக்குறளில் இடம்பெறும் அதிகாரம்?

Answer: தீ நட்பு

7. "சலத்தால் பொருள்செயதே மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று இக்குறளில் பயின்று வரும் அணி?

Answer: உவமையணி

8. இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை நூல் எது?

Answer: திருக்குறள்

1

9. திருக்குறளின் வேறு பெயர்கள் எவை?

Answer: முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல் தமிழ்மறை, முதுமொழி பொருளுரை

10. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் யார்?

Answer: தருமர், மணக்குடவர், தமாத்தார், நச்சர், பரிதி பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்

11. திருக்குறளில் சிறந்த உரை யாருடையது?

Answer: பரிமேலழகர் உரை

12. திருக்குறள் ----- நூல்களுள் ஒன்று?

Answer: பதினெண்கீழ்க்கணக்கு

13. திருக்குறளை போற்றி எழுதப்பட்ட நூல்?

Answer: திருவள்ளுவ மாலை

14. தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் நூல் எது?

Answer: திருக்குறள்

15. திருக்குறளை இயற்றியவர் யார்?

Answer: திருவள்ளுவர்

16. திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்?

Answer: நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதகர், பெருநாவலர்

17. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?

Answer: 1812

18. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் எது?

Answer: குறிப்பறிதல்

19. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் யார்?

Answer: தஞசை ஞானப்பிரகாசர்

20. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்?

Answer: மணக்குடவர்

2

21. திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை இடங்களில் வருகிறது?

Answer: ஏழு

22. திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் முழுமையாக மொழிபெயர்த்தவர் யார்?

Answer: ஜி. யு போப்

23. கீழ்வருவனவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடுக்க?

Answer: திருக்குறளில் கோடி என்ற என்ற சொல் எட்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்