9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிருக்கு-வேர் - நீரின்றி-அமையாது-உலகு

  Play Audio

1. நீர் நிலைகளின் பல்வேறு பெயர்கள் யாவை?

Answer: அகழி, அழிக்கிணறு, உரைக்கிணறு, அணை ஏரி, குளம் ஊருணி, கண்மாய், கேணி

2. மழையைப் பற்றி திருவள்ளுவர் எந்த அதிகாரத்தில் பாடியுள்ளார்?

Answer: வான் சிறப்பு

3. "மாமழை போற்றதும் மாமழை போற்றதும்"என்று இயற்கையை புகழ்ந்தவர் யார்?

Answer: இளங்கோவடிகள்

4. உலக சுற்றுசூழல் தினம்?

Answer: ஜூன் - 5

5. "நீரின்று அமையாது உலகம்"என்று கூறியவர் யார்?

Answer: திருவள்ளுவர்

6. வேளாண்மைக்கு எது அடிப்படியாக உள்ளது?

Answer: நீர்

7. "மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன"என்று கூறியவர் யார்?

Answer: மாங்குடி மருதனார்

8. எந்த மண்டலத்தில் ஏரியை கண்மாய் என அழைப்பர்?

Answer: பாண்டிய நாட்டு மண்டலம்

9. உறைகிணறு எங்கு தோண்டப்படுகிறது?

Answer: மணற்பாங்கான இடத்தில்

10. மக்கள் பருகும் நீர் நிலைக்கு ----- என்று பெயர்?

Answer: ஊருணி

1

11. கல்லணையைக் கட்டியவன் யார்?

Answer: கரிகாலச் சோழன்

12. கல்லணையின் நீளம் எத்தனை அடி?

Answer: நீளம் - 1080அடி

13. கல்லணையின் அகலம் எத்தனை அடி?

Answer: அகலம் - 40முதல் 60அடி

14. கல்லணையின் உயரம் எத்தனை அடி?

Answer: உயரம் 15முதல் 18அடி

15. நமது வரலாற்று பெருமைக்கு சான்றாக விளங்கும் அணை எது?

Answer: கல்லணை

16. நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தந்தவர் யார்?

Answer: திருவள்ளுவர்

17. "உணவெனப்படுவது நிலத்தொடு நீரே - என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

Answer: புறநானூறு

18. இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

Answer: சர் ஆர்தர் காட்டன்

19. 1829ஆம் ஆண்டு "காவிரிப்பாசன பகுதிக்கு'தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

Answer: சர் ஆர்தர் காட்டன்

20. எந்த அணைக்கு கிராண்ட் அணைகட் என்ற பெயரை சர் அர்தர் காட்டன் சூட்டினார்?

Answer: கல்லணைக்கு

2

21. சர் ஆர்தர் காட்டன் 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே எந்த அணையைக் கட்டினார்?

Answer: தெளலீஸ்வரம் அணை

22. தமிழ்நாடு எந்த மண்டலத்தில் உள்ளது?

Answer: வெப்பமண்டலப் பகுதியில்

23. தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குக்கின்றன என்று கூறிய பேராசிரியர் யார்?

Answer: தொ. பரமசிவம்

24. குளிர்த்தல் என்பது குளித்தல் என்று ஆயிற்று எனக் கூறியவர் யார்?

Answer: பேராசிரியர் தொ. பரமசிவம்

25. திருமன்சனம் ஆடல் என்றால் என்ன பொருள்?

Answer: தெய்வ சிலைகளை குளிர்க்க வைப்பது

26. "குள்ளக் குளிரக் குடைந்து நீராடி"என்ற வரிகளை கூறியவர் யார்?

Answer: ஆண்டாள்

27. தெய்வசிலைகளை குளி (ர்) க்க வைப்பதை எவ்வாறு கூறுவர்?

Answer: திருமன்சனம் ஆடல்

28. எந்த இலக்கியத்தில் நீராடல் பருவம் என்று ஒரு பருவம் உள்ளது?

Answer: பிள்ளைத்தமிழ்

29. நாட்டுபுற தெய்வக்கோவில்களில் சாமியாடிகளுக்கு ----- நீர் கொடுத்து அருந்த செய்வதும் இப்போதும் நடைமுறையில் உள்ளன?

Answer: மன்சள்

3

30. திருமணம் முடிந்த பின் அதன் தொடர்ச்சியாக ----- என்பதை மேற்கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் நிலவுகிறது?

Answer: கடலாடுதல்

31. சனி நீரோடு என்பது யாருடைய வாக்கு?

Answer: ஓளவையார்

32. சோழர் காலத்தில் தூர்வார வேண்டிய அவசியம் இல்லாமல் எதை உபயோகித்தனர்?

Answer: குமிழித்தூம்பு

33. நமது நாட்டின் எந்த மாநிலத்தில் 700 அடிகளில் கூட ஆழ்குழாய் அமைத்தும் நீர் கிட்டவில்லை?

Answer: இராஜாஸ்தான்

34. உலகம் விரைவில் குடிநீருக்காக கடும் சிக்கலை எதிர்கொள்ளும் என கூறிய நிறுவனம்?

Answer: உலக சுகாதார நிறுவனம்

35. கோட்டையின் வெளியே அமைக்கப்பட்ட நீர் அரண் எது?

Answer: அகழி

36. மலைமுகட்டூத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது?

Answer: அருவி

37. கடல் அருகே தோண்டப்பட்ட கிணறு?

Answer: ஆழிக்கிணறு

38. இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு எது?

Answer: ஆறு

39. பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்?

Answer: இலன்சி

4

40. மணற்பாங்கான இடத்தில் தோன்றிச் சுடுமண் வளையமிட்ட கிணறு?

Answer: உறைக்கிணறு

41. சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு?

Answer: கட்டுக்கிணறு

42. சிறிதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலை?

Answer: குண்டம்

43. அடிநிலத்து நீர், நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று?

Answer: குமிழிஊற்று

44. உவர் மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை?

Answer: கூவல்

45. அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு?

Answer: கேணி

46. நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர் நிலை?

Answer: புணற்குளம்

47. கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு?

Answer: பூட்டைக் கிணறு

48. முல்லை பெரியாறு அணையை கட்டியவர் யார்?

Answer: ஜான் பென்னி குக்

49. முல்லை பெரியாறு அணையால் பாசனம் பெரும் மாவட்டம் யாவை?

Answer: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை இராமநாதபுரம்

50. முல்லை பெரியாறு அணை கட்ட கூடுதல் நிதி ஒதுக்க ஆங்கில அரசு மறுத்தபோது தனது சொத்துக்களை விற்று அணையைக் கட்டியவர் யார்?

Answer: ஜான் பென்னி குக்

51. இனிமேல் உலகப்போர் உருவானால் எதனால் உருவாகும்?

Answer: தண்ணீருக்காக

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்