1. சொற்றொடர் எழுதுவதற்கு அடிப்படையாக அமைத்த பெயர்சொல்லையே ----- என்கிறோம்?
Answer: எழுவாய்
2. "மீனா கனகாம்பரத்தை சூட்டினால்"என்ற தொடரில் செயப்படுபொருள் எது?
Answer: கனகாம்பரம்
3. தோன்றா எழுவாய்க்கு எகா?
Answer: படித்தாய்
4. பெயர் பயனிலைக்கு எகா?
Answer: சொன்னவள் கலா
5. வினா பயனிலைக்கு எகா?
Answer: விளையாடுபவன் யார்?
6. ஒரு சொல்லானது எழுவாயாக வரும் பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருவது?
Answer: பெயரடை எனப்படும்
7. பந்து உருண்டது என்பது?
Answer: தன்வினை
8. உருட்டவைத்தான் என்பது என்ன?
Answer: பிறவினை
9. எழுவாய் ஒரு வினையை செய்தால் அது?
Answer: தன்வினை
10. எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது?
Answer: பிறவினை
11. வி, பி, போன்ற விகுதிகள் கொண்டு செய், வை, பன்னு போன்ற துணை வினைகளை இணைந்தும் உருவாக்கப்படுவது?
Answer: பிறவினை
12. அப்பா சொன்னார் என்பது?
Answer: செய்வினைத், தொடர்
13. தோசை வைக்கப்பட்டது என்பது?
Answer: செயப்பாடடுவினைத் தொடர்
14. செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை?
Answer: செய்வினை
15. செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை?
Answer: செயப்பட்டு வினை
1
16. அப்துல் நேற்று வந்தான் இது எவ்வகை தொடர்?
Answer: தன்வினை தொடர்
17. அப்துல் நேற்று வருவித்தான் இது எவ்வகை தொடர்?
Answer: பிறவினை
18. கவிதா உரை படித்தாள் இது எவ்வகை தொடர்?
Answer: செய்வினைத் தொடர்
19. உரை கவிதாவால் படிக்கப்பட்டது இது எவ்வகை தொடர்?
Answer: செயப்பாடடுவினை தொடர்
20. குமரன் மழையில் நனைந்தான் இது எவ்வகை தொடர்?
Answer: உடன்பாடடுவினைத் தொடர்
21. குமரன் மழையில் நனையவில்லை இது எவ்வகை தொடர்?
Answer: எதிர்மறைவினைத் தொடர்
22. என் அன்னன் நாளை வருவான் இது எவ்வகை தொடர்?
Answer: செய்தித் தொடர்
23. எவ்வளவு உயரமான மரம் இது எவ்வகை தொடர்?
Answer: உணர்ச்சி தொடர்
24. உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? இது எவ்வகை தொடர்?
Answer: வினாத்தொடர்
25. பூக்களைப் பறிக்காதீர் இது எவ்வகை தொடர்?
Answer: கட்டளைத் தொடர்
26. இது நாற்காலி, அவன் மாணவன் இது எவ்வகை தொடர்?
Answer: பெயர்ப் பயனிலை தொடர்
27. பதம் (சொல்) எத்தனை வகைப்படும்?
Answer: இரண்டு (பகுபதம், பகாப்பதம்)
28. பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் ----- எனப்படும்?
Answer: பகுபதம்
29. பகுபதம் எத்தனை வகைப்படும்?
Answer: இரண்டு (பெயர்ப் பகுபதம், வினை பகுபதம்)
30. பகுபத உறுப்புகள் எத்தனை?
Answer: ஆறு (பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்)
31. சொல்லின் இறுதியில் நின்று தினை, பால், என், இடம், காட்டுவதாக அமைவது?
Answer: விகுதி
32. பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைப்பது?
Answer: சந்தி
33. பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது?
Answer: சந்தி
34. பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வருவது?
Answer: சாரியை
35. பகுதி, விகுதி இடைநிலை சார்ந்து வருவது?
Answer: சாரியை
36. பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து?
Answer: எழுத்துப்பேறு ஆகும்
2