அனைவரும் வேலைக்காரர்களே

    ஆஸ்திரேலியாவை ஆண்டு வந்த மன்னன் மிகவும் தற்பெருமைக் கொண்டவன். யாருக்கும் தலை வணங்க மாட்டான், கொடியவன். அதனால் அவனின் சிறு கட்டளையைக் கூட வீரர்கள் மிகவும் கவனத்துடன் நிறைவேற்றி வந்தார்கள்.

    ஒரு நாள் அவன் தன்னை வளர்த்து ஆளாக்கிய கிழவன் புகாபரிடம், "எல்லா மக்களும் எனக்கு வேலைக்காரர்கள்தான்" என்று கெளவரத்தோடு சொன்னான். அதற்கு புகாபர், "எல்லா மனிதர்களுமே ஒருவருக்கொருவர் வேலைக்காரர்கள்தான்" என்று கூறினார்.

    இதைக் கேட்ட அரசன் கோபத்தோடு "அப்படியானால் நான் உனக்கு வேலைக்காரனா?" நீ சொன்னதை நீருபிக்க வேண்டும். இன்று கதிரவன் மறைவதற்குள் என்னை நீ உன்விருப்பப்படி வேலை செய்ய வைக்க வேண்டும். அப்படி செய்தால் உனக்கு நூறு மாடுகளை பரிசாக கொடுக்கிறேன்.

    இல்லா விட்டால் உன்னைக் கொன்று விடுவேன் என்று கத்தினான். "ஏற்றுக் கொள் கிறேன்" என்றார் அமைதியாக புகாபர். மிகவும் வயதானவர் புகாபர் கைத்தடி ஒன்றைத் தரையில்

1

    ஊன்றியபடி அங்கும் இங்கும் நடந்தார். வாசலில் "ஐயா இந்த எழைக்குப் பிச்சை போடுங்கள்" என்ற குரல் ஒலித்தது. அரசனைப் பார்த்து அந்தப் பிச்சைக்காரனுக்கு ஏதேனும் உணவு டோட அனுமதி தாருங்கள்" என்றார் புகாபர்.

    அரசனும் "சரி போட்டு விட்டுவா" என்றான். புகாபர் இரண்டு கைகளாலும் உணவுத் தட்டைப் பிடித்துக் கொண்டு அதே சமயம் கைத்தடியையும் ஊன்றிக் கொண்டு அரசனைக் கடந்து சென்றார். திடீரென்று அவர் கையிலிருந்த தடி நழுவித் தரையில் விழுந்தது.

    உணவுத் தட்டைப் போட்டுவிட்டுக் கீழே விழுந்து விடுபவர் போல இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் ஆடினார்.

    "அரசே சீக்கிரம் கைத்தடியை எடுத்து என் கையில் கொடுங்கள்' இல்லையேல் நான் விழுந்து விடுவேன்" என்று அலறினார் அவர். அரசன் எதையும் சிந்திக்காமல் அந்தத் தடியை எடுத்துக் கொடுத்தார்.

    புகாபர் சிரித்துக் கொண்டே பார்த்தீர்களா? அரசே எல்லா மனிதர்களும் ஒருவர் மற்றவருக்கு வேலைக்காரர்கள் தான். நான் அந்தப் பிச்சைக் காரனுக்காக வேலை செய்கிறேன். நீங்கள் எனக்காக

2

    வேலை செய்கிறீர்கள். எனக்குத் தருவதாக சொன்ன நூறு மாடுகளை இந்தப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்து விடுங்கள் என்றார். அவர் கெட்டிக்கார தனத்தைப் பாராட்டி புகழ்ந்த அரசன் அன்று முதல் அவரைத் தனக்கு அறிவுரை கூறுவதற்காக வைத்துக் கொண்டான்.

3

முந்தைய கதை
அடுத்த கதை