ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவனுக்கு நிறைய செல்வமும், நிலப்புலன்களும், தோட்டங்களும் இருந்தன. மேலும் ஆடு, மாடுகளும், குதிரைகளும் கணக்கிற்று இருந்தன. அந்தப் பணக்காரனுக்கு மூன்று மகன்கள் இருந்தன.
மூவருக்கும் குணங்கள் மாறுபட்டு இருந்ததால் அவர்கள் இடையே ஒற்றுமை இல்லை. மூவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். அவர் தந்தை எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.
இது அந்தப் பணக்காரருக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது. தனது மகன்கள் மூவரும் ஒற்றுமையாக இல்லாமல் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்களே என்று வருந்தினான்.
ஒரு நாள் அந்தப் பணக்காரன் திடீரென்று நோய்வாய்ப் பட்டான். எவ்வளவோ வைத்தியம் பாத்தும் நோய் குணமாகவில்லை. இனி தான் பிழைக்க மாட்டோம் என்பதை உணர்ந்த அவன் தமக்குப் பிறகு சொத்துக்களை பங்கிட்டு கொள்வதில்
1
தமது மகன்களிடையே சண்டை எற்படக் கூடும் என கருதினார். அதனால் தனது மகன்களுக்குத் தெரியாமல் தன் நண்பர் ஒருவரை வரவழைத்து ஓர் உயில்எழுதி வைத்தார்.
அதன் பிறகு அவர், நீண்ட நாள் உயிர் வாழவில்லை. அவர் இறப்பதற்கு முன் எழுதி வைத்துவிட்டுச் சென்ற உயிலை மகன்களுக்கு படித்து காட்டினார். என்னுடைய சொத்து முழுவதும் நானாக உழைத்து சேர்த்தது.
எனவே என் விருப்பப்படி என்னிடம் அன்பாக இருந்த என் மூத்த மகனுக்கு என் சொத்தில் சரி பாதியையும் சில சமயங்களில் நான் சொல்லியபடி நடக்காததால் எனது இரண்டாவது மகனுக்கு என் சொத்தில் மூன்றில் ஒரு பங்கையும், என் கடைசி மகனுக்கு என் சொத்தில் ஒன்பதில் ஒரு பங்கும் எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் இறப்பதற்கு முன்னரேயே எழுதி வைத்துவிட்டுப் போய் விட்டதால் மகன்கள் மூவரும் அதன்படியே நடக்க வேண்டியதாகி விட்டது. ஊர் பெரியவர்கள் முன்னிலையில் உயிலில் கூறியவாரு சொத்துக்கள் முழுவதையும் பங்கிட்டுக் கொண்டனர். இறுதியாக குதிரைகளை பங்கிட்டுக் கொள்ளும் போதுதான் அம்மூவருக்கும் சண்டை எழுந்தது.
2
மொத்தம் பதினேழு குதிரைகள் இருந்தன. உயிலில் குறிப்பிட்டபடி இவைகளை எவ்வாறு பங்கிட முடியும்? அங்கு கூடி இருந்தவர்களுக்கும் எப்படித் தீர்ப்புக் கூறுவது என்று தெரியவில்லை.
அப்போதுதான் பீர்பாலைப் பற்றி நினைவு வந்தது "பீர்பால் இந்த வழக்கை நல்ல முறையில் தீர்த்து வைப்பார்" என்று மகன்கள் முடிவு செய்தனர். மகன்கள் பீர்பாலிடம் சென்றனர்.
வழக்கு முழுவதையும் கேட்ட பீர்பால், நாளைய தினம் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் வழக்கைத் தீர்த்து வைக்கிறேன் என்று கூறி மூவரையும் அனுப்பி வைத்தார்.
மறுநாள் காலை பீர்பால் ஒரு குதிரை மேல் ஏறி அவர்கள் வீட்டிற்கு சென்றார். மைந்தர்கள் அவரை அழைத்தனர். பீர்பால் நேராக குதிரை மையத்திற்ச் சென்று தன்னுடைய குதிரையையும் அந்தக் குதிரைகளுடன் நிறுத்தினார்.
பிறகு மகன்களை நோக்கி என்னுடைய குதிரையையும் உங்கள் குதிரையுடன் சேர்த்து உள்ளேன். இப்பொழுது மொத்தம் பதினேட்டுக் குதிரைகள் உள்ளன இதில் பாதியான ஒன்பது குதிரையை மூத்த மகனான நீ எடுத்து கொள் என்றார். மூத்த மகன் ஒன்பது குதிரைகளை அழைத்துச்
3
சென்றான். இரண்டாவது மகனை நோக்கி உயிலின்படி உனக்கு மொத்தத்தில் மூன்றில் ஒரு பாகம் தானே? அப்படியானால் உன் பங்கிற்கு ஆறு குதிரைகளை எடுத்து கொள் என்றார் பீர்பால்.
மீதி மூன்று குதிரைகள் இருந்தன. மூன்றாவாது மகனைப் பார்த்து உனக்கு மொத்தத்தில் ஒன்பதில் ஒரு பாகம் தானே கிடைக்க வேண்டும். அப்படி யானால் உன் பங்கிற்கு இரண்டு குதிரைகள் வர வேண்டும்.
அவற்றை நீ எடுத்து கொள். மீதியுள்ள என் குதிரையை நான் எடுத்துச் செல்லுகிறேன். என் மூவருக்கும் மன வருத்தம் ஏற்படாமல் தீர்த்து வைத்தார் பீர்பால்.
4