இலை மண்ணாங்கட்டியின் ஒற்றுமை

    ஒரு இலை மண்ணாங்கட்டியும் ஒன்றாக பார்த்து, இரண்டும் விசாரித்துக் கொண்டது. இலை மண்ணாங் கட்டியிடம் நாம் சிறுவர்கள்.

    நம்மை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். நம் வாழ்வெல்லாம் கஷ்டம் என்றது. மண்ணாங் கட்டி ஒப்பு கொண்டு உண்மை.

    நான் மழை வந்தால் கரைந்து விடுவேன். காற்றடித்தால் நீ பறந்து போவாய். நாம் கலந்து இருந்தால் எந்த கஷ்டமுமில்லை.

    நாம் ஒன்றாக இருப்பது எப்படி புரியாமல் கேட்டது இலை. காற்றடிக்கும் போது உன்மீது நான் கெட்டியாக உட்காருவேன்.

    மழை வந்தால் நீ என்னை காத்துக் கொள். அப்போது நமக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்றது மண்ணாங்கட்டி.

    இலைக்கு இது பிடித்தது. ஒன்றாக இருப்பதில் எவ்வளவு நன்மை என்று மண்ணாங்கட்டி சொல்படி ஒன்றாக இருந்தது.

1

முந்தைய கதை
அடுத்த கதை