ஒரு கிராமத்தில் ஞானி வசித்து வந்தார். சிறிது காலத்திற்கு பிறகு துறவி வாழ்க்கை மேற்கொண்டார். கங்கைக் கரையில் தானே ஒரு குடிசை போட்டுக் கொண்டு வசித்தார். அடைய வேண்டியவற்றை அடைந்து மேலான ஞானத்தைப் பெற்ற அவர் ஆனந்த உணர்வோடு வாழ்ந்தார்.
அந்தக் காலத்தில் காசியின் தலைமைப் பொருள் கணக்கருக்கு புதல்வி ஒருத்தி இருந்தாள். அவள் பொல்லாத நீலி வேலைக்காரிகளையும் அடிமைகளையும் அவள் கொடுமையாக நடத்து வாள். அடிப்பாள் வாயில் வந்தபடி திட்டுவாள்.
ஒரு நாள் வேலைக்காரிகளும் அடிமைகளும் தங்கள் எஜமானியை கங்கையில் நீராட அழைத்துச் சென்றார்கள். நீரில் குளித்துப் பெண்கள் விளை யாடிக்கொண்டு இருக்கும் பொழுது பொழுது சாய்ந்துவிட்டது.
பெரும் புயல்காற்று திடும் என உண்டாகி வீசியது. புயல் வேகமாக வீசத் தொடங்கியதும் குளித்துக் கொண்டிருந்த மற்ற மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள். ஆகவே இதுவே தக்க தருணம் என்று கருதிய வேலைக்காரிகள் கணக்கரின் மகளை ஆற்றில் தள்ளிவிட்டுத் திரும்பி விட்டார்கள்.
1
மழை சோவென்று ஒரேயடியாய்க் கொட்டியது. பொழுது சாய்ந்துவிட்டது. எங்கும் இருள் பரவியது. தங்கள் இளம் எஜமானி இல்லாது லேலைக்காரிகள் வீடு போய்ச் சேர்ந்தார்கள். இளம் எஜமானி எங்கே என்று வேலைக்காரிகளைக் கேட்டபோது, கங்கையி லிருந்து, அவள் கரைக்குப் போனாள்.
ஆனால் அவள் எங்கே போனாள் என்பது எங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் பதில் சொன்னார்கள். பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் பெரிதும் முயன்று அந்தப் பெண்ணைத் தேடிப்பார்த்தார்கள். அவள் அகப்படவில்லை. அவளைப் பற்றிய செய்தி எதுவும் தெரியவில்லை.
வெள்ளம் பெருகி அவளை அடித்துக்கொண்டு சென்றது. அந்தப் பெண் ஒப்பாரி போட்டுக் கதறினாள். நள்ளிரவு நேரத்தில் ஞானி வாழும் ஆசிரமத்தை அவள் அடைய நேர்ந்தது. அவள் போட்ட ஒப்பாரியைக் கேட்டதும் ஞானி யாரோ ஒரு பெண் ஆபத்தில் சிக்கிக்கொண்டு கதறுகிறாள்.
அவளை நான் காப்பாற்றியாக வேண்டும் என்று நினைத்தார். மகிழ்ச்சியுடன் ஒப்பாரி போட்டுச் சென்ற அவர் தண்ணீரில் இறங்கி அந்தப் பெண்ணைப் பத்திரமாக கரை சேர்த்தார். யானையைப் போல பலசாலியாக இருந்ததால், இந்தக் காரியத்தை அவரால் எளிதில் செய்ய முடிந்தது.
2
ஆசிரமத்துக்குள்ளே நெருப்பை மூட்டி அவள் உடம்பில் சூடு உண்டாகும்படி செய்தார். சுவை மிகுந்த பல்வகையான கனிகளை எடுத்து அவள் முன்னே வைத்தார். அவள் சாப்பிட்டு முடியும் வரை ஞானி அவளிடம் எதுவும் விசாரிக்கவில்லை.
பிறகு அவளிடம் பெண்ணே! உங்கள் வீடு எங்கே இருக்கிறது? எவ்வாறு நீ ஆற்றில் விழுந்தாய் என்று விசாரித்தார். தனக்கு நேர்ந்த வற்றையெல்லாம் அவரிடம் அந்தப் பெண் சென்னாள்.
இதைக் கேட்டதும் அவர் அந்தப் பெண்ணிடம் தற்காலிகமாக நீ இங்கேயே தங்கு என்று சொல்லி தான் வசித்த குடிசையில் அவளைத் தங்கச் செய்துவிட்டு இரண்டு மூன்று தினங்கள் அவர் வெளியே படுத்து இருந்தார்.
பிறகு அவளிடம் பெண்ணே! நீ போய்விடு என்று சொன்னார். அந்தப் பெண் போகப் பிரியப் படாது அங்கேயே தங்கினாள். துறவியைத் தன் வசப்படுத்திக்கொள்வதில் அவள் ஈடுபட்டாள்.
நாள் ஆக ஆக பெண்களுக்கு இயல்பாக உள்ள வசீகரத்தாலும், வஞ்சனையாலும் ஞானியை அந்தப் பெண் மயக்கிவிட்டாள். இதனால் ஞானத்தை இழந்துவிட்ட அவர் அந்தப் பெண்ணுடன் காட்டில் வசித்தார்.
3
தனிமையில் காட்டில் வசிக்க விரும்பாத அவள் பலவாறு முனிவரிடம் ஏதேதோ சொல்லி ஒரு கிராமத்தில் எல்லைப் புறத்துக்கு அழைத்துப் போனாள். அங்கே அவர் பேரீச்சம் பழங்களை விற்று அவளை ஆதரித்தார்.
அதனால் அவருக்குப் பழ வியாபாரம் செய்யும் முனிவர் என்ற பெயர் உண்டாயிருந்தது. கிராமத் தார்கள் அவரை நல்ல பருவம், பொல்லாத பருவம் இவற்றைக் கூறும்படி கேட்டு அவரை ஆதரித்தார்கள். கிராமத்தின் கோடியில் அவருக்கு ஒரு குடிசையும் கட்டிக் கொடுத்தார்கள்.
முனிவர் வசிக்கும் எல்லை அருகே மலையில் வாழும் கொள்ளைக் கூட்டத்தார் நடமாட்டம் இருந்தது. ஒருநாள் கொள்ளைக் கூட்டத்தார் வந்து கிராமத்தைத் தாக்கி எல்லையில் வாழும் அதிபதிகளின் சொத்துக்களை கொள்ளை அடித்துப் போய்விட்டார்கள்.
அதோடு கூட கிராமவாசிகளையும் அவர்கள் கடத்திச் சென்றார்கள். வஞ்சகியான பொருள் கணக்கரின் மகளும் அவர்களுடன் இருந்தாள். திருடர்கள் தாங்கள் வாழும் இடத்தை அடைந்ததும் கிராமவாசிகளை விட்டுவிட்டார்கள்.
4
ஆனால் பெண்ணை மட்டும் சுதந்திரமாக விடாது திருடர்கள் தலைவன் அவளைத் தன் மனைவி ஆக்கிக் கொண்டான். ஏனெனில் அவள் அவ்வளவு அழகியாய் இருந்தாள்.
இந்த விவரம் தெரியவந்ததும் ஞானி அந்தப் பெண்ணுக்கு என்மீது பிரியம் அதிகம். அங்கு தங்கப் பிரியப்படாது என்னிடம் அவள் திரும்பி விடுவாள் என்று நினைத்துக் கொண்டார். அவள் வந்து விடுவாள் வந்துவிடுவாள் என்று காத்திருந்து பார்த்தார்.
ஆனால் அந்தப் பெண்ணோ திருடர்களுடன் வாழ்வதையே விரும்பினாள். அதுவே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆயினும் பழ வியாபார முனிவர் வந்து தன்னைக் கூட்டிக் கொண்டு போய் விடுவார் என்ற அச்சம் வேறு அவளுக்கு இருந்தது.
அந்த மனிதன் இறந்து போய்விட்டால் நான் அதிக செளகரியமாக வாழ முடியும். ஆகவே நான் அதிகம் நேசிப்பதாக வஞ்சித்து, இங்கே வரவழைத்து கொன்றுவிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.
ஆகவே ஒரு ஆள் மூலம் தான் இங்கு அதிக சிரமப்படுவதாகவும் தன்னை வந்து உடனே அழைத்துப் போகுமாறும் செய்தி அனுப்பினாள்.
5
அந்தப் பெண்மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த பழ முனிவர் உடனே கிராமத்தின் எல்லையை அடைந்து அவளுக்குச் செய்தி அனுப்பினார். அதற்கு அவள் நாதா! இப்பொழுது நாம் கிளம்பி ஒஒடினால் கொள்ளைக் கூட்டத் தலைவன் நம் இருவரையும் பிடித்துக் கொன்று விடுவான்.
இரவானதும் நாம் இருவரும் சேர்ந்து ஓடிவிடலாம் என்று செய்தி அனுப்பினாள். பிறகு அவள் வந்து முனிவரை அழைத்துப்போய், தான் வசிக்கும் அறையில் மறைத்து வைத்தாள். திருடர்கள் இரவில் குடிபோதையில் அங்கு திரும்பி வந்தார்கள்.
அப்போது அவள் திருடர்களின் தலைவனிடம் அன்பே! உங்கள் எதிரி உங்கள் வசம் சிக்கிக் கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டாள். அதற்கு அவன் அவனை இப்படி இப்படிச் செய்வேன் என்று பதில் சொன்னான்..
உடனே அவள் உங்கள் எதிரி வெகு தொலைவில் இல்லாமல் அடுத்த அறையிலே இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டாள். தீவட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு திருடர் தலைவன் அடுத்த அறைக்குள் நுழைந்து ஞானியைப் பிடித்து உடம்பிலும் தலையிலும் மனது
6
திருப்தி ஏற்படும் வரை அடித்தான். ஞானி அழாமல் அடியைப் பொறுத்துக்கொண்டார். நன்றி கெட்டவர்கள், கொடியவர்கள், தீயவர்கள் என்று மட்டும் முணுமுணுத்தார். இவற்றை மட்டுமே அவர் சொன்னார்.
இவ்வாறு அடித்தபின் ஞானியின் கால் களையும், கைகளையும் திருடன் கட்டிப் போட்டான். பிறகு வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு இரவு தன் காதலியுடன் படுத்துத் தூங்கினான். காலையில் எழுந்த மீண்டும் ஞானியை அடிக்கலானான்.
அப்போதும் அவர் முன்சொன்ன நான்கு வார்த்தைகளை மட்டும் திரும்பத் திரும்ப முணு முணுத்தாரே தவிர வேது எதுவும் செய்யவில்லை. இதைக் கேட்டு திருடன் ஆச்சரியம் அடைந்தான். அவன் ஞானியை நோக்கி அடிக்கும்போது எதற்காக இந்த வார்த்தைகளை நீ திரும்பத் திரும்பச் சொல்லுகிறாய் என்று கேட்டான்.
நான் சொல்வதைக் கவனமாய்க் கேள் என்று பழமுனிவர் சொன்னார். ஒரு சமயம் காட்டில் நான் முனியாக வாழ்ந்துகொண்டு இருந்தேன். எனக்கு ஞான உணர்வும் ஏற்பட்டு இருந்தது. கங்கையி லிருந்து காப்பாற்றி தேவையான உதவிகளை இந்தப் பெண்ணுக்கு நான் செய்தபோது ஆசை காட்டி என்னை இவள் மயக்கிவிட்டதால் எனது உயர்
7
நிலையிலிருந்து நான் தாழ்ந்து போக நேர்ந்தது. காட்டை விட்டுக் கிராமத்துக்கு வந்து வசித்து இவளை நான் ஆதரித்துக் காப்பாற்றினேன். அப்போது அவளைத் திருடர்கள் தூக்கிவந்து விட்டார்கள். தான் இங்கு மகிழ்ச்சியற்ற நிலையில் வாழ்வதாகவும் ஆகவே வந்து தன்னை அழைத்துப் போகுமாறும் செய்தி அனுப்பினாள்.
இப்படிச் செய்து என்னை உம்மிடம் அகப் பட்டுக் கொள்ளச் செய்துவிட்டாள். அதனால் தான் நான் இவ்வாறு கூறுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பதில் திருடனைச் சிந்திக்கும்படி தூண்டியது. தனக்கு நன்மை செய்து நல்லவராய் இருப்பவரிடமே இப்படி சிறுமைப் புத்தியுடன் நடந்து கொள்ளும் இவள் என்னதான் செய்ய மாட்டாள்.
இவள் இறந்துபோக வேண்டியதுதான் என்று நினைத்தான். ஞானி சொல்வது உண்மை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட அவன் அந்தப் பெண்ணை எழுப்பினான். கிராமத்துக்குக் வெளியே முனிவரைக் கொன்றுவிடப் போவதாக நடித்தான். வாளை உருவிக் கையில் வைத்துக் கொண்டு முனிவரைப் பிடித்துக் கொள்ளுமாறு பெண்ணிடம் சொன்னான்.
8
அவ்வாறு அவள் செய்ததும் ஒரே வெட்டில் அவளை இரு துண்டங்கள் ஆக்கிக் கொன்றான். பிறகு முனிவரை தலை முதல் கால் வரை முழுவதும் நீராட்டி வைத்தான். அவருக்குத் திருப்தி ஏற்படும் வரை பல தினங்கள் உணவு படைத்தான்.
அதன் பின்னர் ஒரு நாள் திருடன் தாங்கள் எங்கு செல்ல உத்தேசம்? என்று கேட்டான். அதற்கு அவர் உலகம் எனக்கு இன்பம் பயப்பதாய் இல்லை. தவ வாழ்வை மேற்கொண்டு முன்பு காட்டில் வசித்த இடத்திலேயே நான் வசிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.
உடனே திருடன் தானும் துறவியாகிவிட விரும்புவதாகச் சொன்னான். ஆகவே இருவரும் துறவிகளாகி காட்டில் ஒரு குடிசையில் வசித்தார்கள். தவம் செய்து அவர்கள் இருவரும் அடைய வேண்டிய நற்பேற்கள் அனைத்தையும் அடைந் தார்கள். இறுதியில் அடைய வேண்டிய பிரம்ம லோகத்தை அடைந்தார்கள்.
9