ஆலந்தூரில் பாலா, ராதிகா என்ற இரண்டு டெய்லர்கள் இருந்தனர். ராதிகா ஒரு தெருவில் பாலா ஒரு தெருவில் இயந்திரம் வைத்து தைத்துக் கொண்டிருந்தனர்.
ஒருநாள் பாலா, ராதிகாவிடம் நான் உன்னை விட பெரிய டெய்லர் என் ஸ்டைல் உனக்கு வராது என்றான். அதற்கு ராதிகா உன்னைவிட நான் உயர்ந்தவள் என இப்படியே ஒவ்வொரு தடவையும் சண்டை போட ஆரம்பித்தனர். அந்த ஊரில் பலராமன், மணி என்ற ஏழை தம்பதியர்க்கு சித்ரா என்ற மகள் இருந்தாள். சித்ரா நல்ல புத்திசாலி. நான்கூட தைக்க கற்றுக் கொள்கிறேன் என்று தாயிடம் சொன்னாள். தையல் இயந்திரம் இருந்தால் நானும் சம்பாதித்து தருகிறேன் என்றாள்.
அதற்கு தாய் மணி உன் அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிப்பது சாப்பிடவே சரியாக இருக்கிறது. இயந்திரத்துக்கும் பணம் வேண்டும் கற்றுக் கொள்ளவும் பணம் வேண்டும். இப்போதே பாலா, ராதிகா இருவரும் போட்டியிடுகிறார்கள். நீ அவசரப் படாதே என்றாள்.
1
என்ன செய்வதென புரியாத சித்ரா எப்படியாவது இலவசமாக தையல் வேலை கற்க வேண்டும் என தீவிரமாக யோசித்து ஒருநாள் பாலாவிடம் சென்று பேச்சு கொடுத்து பாலாவை சிநேகிதம் பிடித்தாள். உன்னைபோல ராதிகாவுக்கு தைக்க வராது. நன்றாக தைக்கிறாய் என்றாள்.
கொஞ்சநாள் அங்கே சென்று வம்புபேசிவிட்டு நம் ஊரில் வந்த ஒரு சினிமாவில் ரோயின் போட்டு வந்த உடை அழகாக இருந்தது. அதே மாடல் தைக்க உன்னிடம் திறமை உள்ளது என பாலாவை புகழ ஆரம்பித்தாள். பாலா சந்தோஷப் பட்டாள். நீ தினமும் இங்கே வா பேச நல்ல துணையாய் என்றாள் பாலா.
அதற்கு சித்ரா எனக்கும் துணி தைக்க கற்றுக் கொள்ள வேண்டுமென ஆசை. கற்றுக் கொள்ள என்னிடம் பணமில்லை. எனக்கு இலவசமாக கற்பித்தால் உன் பேரில் பெரிதாக வரும்படி செய்கிறேன் என்றாள்.
அதற்கு பாலா சாதாரண பேஷன் கற்றுக் கொடுத்தாள். கமலா தனக்கு சரியாக வேலை கற்றுத் தரவில்லை என்று சொன்னாள் சித்ரா. சித்ரா தன் புத்திசாலித்தனத்தால் தெரிந்து கொண்டாள். ஒருநாள் சித்ரா பக்கத்தில் துணி வாங்கிக் கொண்டு
2
இதை ராதிகா தைத்தாள் போல தெரிகிறது. நல்லாவே இல்லை பாலா இயந்திரத்தில் வைத்து தைத்துக் கொண்டாள்.
இங்கே இருந்த சித்ரா ராதிகாவிடம் சென்று ராதிகாவும் ஏதோ பேசிக் கொண்டு பாலாவுக்கு தெரியாது இப்படி தைப்பதற்கு என்றாள். ராதிகா இதைக் கேட்டு ஆனந்தப்பட்டாள். தினமும் வந்து நடப்பதை என்னிடம் சொல் என்றாள். நான் தினமும் உன் வீட்டுக்கு வருகிறேன்.
ஆனால் பாலா, ராதிகாவிடம் எல்லா வேலையும் கற்றுக் கொண்டாள். அவளும் வியாபார ரகசியத்தை தெரிந்து கொண்டாள்.
இன்னும் பெண்களின் துணிகளை தைக்க ஆரம்பித்த சித்ரா தன் வீட்டு பக்கமே இருக்க ஆரம்பித்தாள். அங்கு எல்லோரும் சித்ரா நல்ல டெய்லர் என முடிவெடுத்தனர்.
அதனால் எல்லோரும் கொஞ்சம் காசுபோட்டு சித்ராவுக்கு இயந்திரம் வாங்கித் தந்தனர். அதனால் சித்ரா மிகவும் சந்தோஷப்பட்டாள். ஒரு பெயர் பலகை வைத்து நவீனமாக துணி தைக்க ஆரம்பித்தாள் சித்ரா. சித்ரா பெயர் ஊரெல்லாம் பரவியது.
3
இதனால் பாலா, ராதிகாவுக்கு உள்ள கொஞ்சம் நஞ்ம் வேலையும் இல்லை. அதனால் எல்லோரும் சித்ராவிடம் துணி தைக்க கொடுத்து அவள் நன்றாக சம்பாதித்தாள். சித்ராவின் தாய் தந்தையர் மிகவும் சந்தோஷப் பட்டனர்.
4