ஓர் ஊரில் சோம்பேறி ஒருவன் இருந்தான். உழைப்பதே அவனுக்கு பிடிக்காது. என்றாவது ஒரு நாள் தன் வீட்டு வழியாக கூறை மீது இருந்து பொன் காசுகள் கொட்டும். மகிச்சியாக வாழலாம் என்று கனவு கண்டான்.
அவன் குடும்பமே அவனால் பட்டினி கிடந்தது. நீண்ட தொலைவில் ஞானி ஒருவர் இருக்கிறார். அவர் எல்லாம் தெரிந்தவர். அவரிடம் சென்றால்தான் எப்பொழுது பணக்காரன் ஆவோம் என்று தெரிந்து கொள்ளலாம்? என்று நினைத்தான் அவன்.ஞானி இருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டான் அவன்.
வழியில் புலி ஒன்று அவனைப் பார்த்து "நீ எங்கே செல்கிறாய்"? என்று கேட்டது. "நான் எப்பொழுது செல்வன்(பணக்காரன்) ஆவேன் என்று அறிந்து கொள்வதற்காக ஞானியிடம் செல்கிறேன்" என்றான் அவன்.
"நான் என்ன சாப்பிட்டாலும் என் பசி அடங்க மாட்டேன் என்கிறது. என் பசி அடங்க நான் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டு வா" என்றது புலி. அப்படியே செய்வதாகச் சொல்லி அங்கிருந்து புறப்பட்டான் அவன். சில நாட்கள் சென்றன.
1
வழியில் இருந்த மா மரம் ஒன்று அவனைப் பார்த்து "எங்கே செல்கிறாய்"? என்று கேட்டது. அவனும் தான் செல்லும் காரணத்தைச் சொன்னான். "ஒவ்வோராண்டும் நான் ஏராளமான பூக்களைப் பூக்கிறேன்.
ஆனால் என்ன பயன்? ஒரு காய்க் கூடக் காய்ப்பதில்லை. என்ன காரணம் என்று அந்த ஞானியிடம் கேட்டு வா" என்றது மாமரம். "கேட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டான் அவன்.
வழியில் அவன் ஆற்றைக் கடக்க வேண்டி இருந்தது. அங்கிருந்த மீன் ஒன்று தலையை உயர்த்தி "எங்கே போகிறாய்?" என்று அவனைக் கேட்டது. அவனும் நடந்ததைச் சொன்னான்.
"மூன்றாண்டுகளாக என் தொண்டையில் இனம் தெரியாத வலி இருக்கிறது. என்ன செய்தால் அந்த வலி போகும் என்று அந்த ஞானியிடம் கேட்டு வா என்றது மீன். "அப்படியே செய்கிறேன்" என்று அங்கிருந்து புறப்பட்டான் அவன்.
சில நாட்கள் பயணத்திற்குப் பின் ஞானியைச் சந்தித்தான். "ஐயா நான் எப்பொழுது பெருஞ் செல்வன் ஆவேன்? சொல்லுங்கள்" என்று கேட்டான் அவன்.
2
வேறு ஏதேனும் என்னிடம் தெரிந்து கொள்ள வேண்டுமா? என்று வினவினார் ஞானி. நினைவு வந்த அவன் புலி, மாமரம், மீன் கேட்கச் சொன்னதை அவரிடம் கேட்டான். அந்த மீன் தொண்டையில் ஒரு முத்து சிக்கி உள்ளது.
அதை எடுத்து விட்டால் அதன் வலி போய் விடும். அந்த மா மரத்தின் அடியில் பெரும் புதையல் உள்ளது. அதை யாராவது எடுத்துக் கொண்டால் அந்த மாமரம் ஏராளமாக காய் காய்க்கும்.
அந்த புலி கடைந்தெடுத்த முட்டாள் ஒருவனை விழுங்கி விட்டால் அதன் பசி போய்விடும் என்றார் ஞானி. மகிழ்ச்சியோடு அங்கிருந்து புறப் பட்ட அவன் வழியில் மீனைச் சந்தித்தான். ஞானி சொன்னதை அப்படியே மீனிடம் சொன்னான். நீயே அந்த விலை மதிப்பற்ற முத்தை எடுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்று என்றது மீன். நான் எதுவும் செய்யாமலே பெருஞ்செல்வன் ஆகப் போகிறேன். உன் முத்து எனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டான் அவன். மாமரத்தைச் சந்தித்த அவன் உன் வேர்ப் பகுதியில் பெரும்புதையல் இருக்கிறது.அதை யாருக்காவது கொடுத்துவிட்டால் நன்கு காய்ப்பாய்.
3
என்று ஞானி சொன்னதை சொன்னான். "நீயே அந்தப் புதையலை எடுத்து கொள்" என்று சொன்னது மாமரம்." உழைக்காமலே நான் பெருஞ்செல்வன் ஆவேன். உன் புதையல் எனக்கு வேண்டாம்" என்று அங்கு இருந்து புறப்பட்டான் அவன்.
ஆவலோடு அவனை எதிர்பார்த்து கொண்டிருந்த புலி. அதைப் பார்த்ததும் அவன் "நீ பெரிய முட்டாள் ஒருவனை விழுங்கி விட்டால் உன் பசி நோய் குணமாகும் என்று ஞானி சொன்னார்" என்றான். "ரெிய முட்டாளுக்கு நான் எங்கு போவேன். என் நோய் குணமாகாது போலிருக்கிறது. உங்களுக்கு வழியில் நடந்ததை எல்லாம் விரிவாகச் சொல்லவும் என்று கேட்டது புலி.
நடந்ததை எல்லாம் விளக்கமாகச் சொன்னான் அவன். இதை கேட்டதும் புலிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. "விலை மதிப்பற்ற முத்தும் பெரும் புதையலும் கிடைத்தும் அதை எடுத்துக் கொண்டு நீ வரவில்லை.
உழைக்காமலே நீ பெருஞ்செல்வன் ஆவேன் என நினைக்கிறாய். உன்னை விட பெரிய முட்டாள், இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்? என்று சொல்லி விட்டு அவன் மேல் பாய்ந்து அவனை விழுங்கியது புலி.
4