ஒரு ஊரில் குரங்கு ஒன்று இருந்தது. அந்தக் குரங்கு குதிரைக் குட்டியைப் போல் பெரிதாயும் பலமாயும் இருந்தது. அந்தக் குரங்கு நதிக்கரையில் தனியாக வசித்து வந்தது. ஆற்றின் நடுவே தீவு ஒன்று இருந்தது. அந்தத் தீவில் மாமரங்களும் பலா மரங்களும் இதர பழ மரங்களும் இருந்தன.
ஆற்றங்கரைக்கும் தீவுக்கும் நடுவே தனியாக பாறை ஒன்று மட்டும் இருந்தது. யானையைப் போல பலமாக இருந்த காரணத்தால் ஞானி ஆற்றங் கரையிலிருந்து பாறைக்கும், பாறையிலிருந்து தீவுக்கும் குதித்தது.
தீவில் தங்கி வயிறு நிறைவுமட்டும். பழங் களைத் தின்றது. மாலை நேரம் வந்ததும் தீவிலிருந்து வந்த வழியே கரைக்குத் திரும்பி விட்டது. அதன் வாழ்க்கை இவ்விதம் நாள்தோறும் நடந்து வந்தது.
இது சமயம் அந்த ஆற்றில் முதலை ஒன்று தன்மனைவியுடன் வசித்து வந்தது. கர்ப்பமாய் இருந்த பெண் முதலை குரங்கு ஆற்றங்கரையி லிருந்து தீவுக்கு வந்து போவதைக் கவனித்தது. குரங்கின் ஈரலைத் தின்ன வேண்டும் என்ற ஆசை பெண் முதலைக்கு உண்டாகி அது தன் கணவிடம் அந்தக் குரங்கைப் பிடித்துத் தாருங்க என்று கூறியது.
1
தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்று வதாக வாக்குறுதி அளித்துவிட்டு ஆண் முதலை புறப்பட்டுச் சென்று குரங்கு மாலையில் பாறைக்குத் திரும்புவதை எதிர்பார்த்து பாறையின்மீது அமர்ந்திருந்தது.
பகல் பொழுதைத் தீவில் கழித்துவிட்டு மாலையில் ஞானக் குரங்கு திரும்பியது. அப்போது நடுவிலுள்ள பாறை உயர்ந்து இருப்பதுபோல் அதற்குத் தோன்றியது. ஏனெனில் ஆற்றின் நீர் மட்டத்தையும் பாறையின் உயரத்தையும் குரங்கு நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தது.
பாறை உயரமாகத் தெரிந்ததால் முதலை தன்னைப் பிடிப்பதற்காக பாறையில் காத்திருப்பது போல் அதற்குத் தோன்றியது. ஆகவே தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள எண்ணிய குரங்கு ஏ பாறையே! என்று அழைத்தது பதில் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஏ பாறையே! ஏ பாறையே என்று இரு முறை கூப்பிட்டுப் பார்த்தும் பாறை மெளனமாய் இருந்தது. உடனே குரங்கு ஒரு தந்திரம் செய்தது. நண்பர் பாறையே எப்பொழுதும் பேசுகிற நீ இன்று ஏன் பேசாமல் இருக்கிறாய்? என்று கூறியது.
2
ஒகோ! நிலைமை அப்படியா நாள்தோறும் பாறை பதில் சொல்லுகிற வழக்கப்படி நானும் பதில் சொல்லுகிறேன் என்று முதலை எண்ணியது. பிறகு ஏ குரங்கே என்ன விஷயம்? என்று முதலை கூறியது. நீ யார் என்று குரங்கு விசாரித்தது. நான் முதலை என்று பதில் கூறியது.
எதற்காக நீ பாறைமீது அமர்ந்திருக்கிறாய்? என்று குரங்கு கேட்டது. உன்னைப் பிடித்து உன் இதயத்தைத் திண்பதற்காக என்று முதலை பதில் சொல்லியது. திரும்புவதற்கு வேறு வழியில்லாததால் ஒரு உபாயத்தின் மூலம் முதலையை ஏமாற்ற குரங்கு எண்ணியது.
ஆகவே அது முதலையிடம் உனக்கு ஆகாரம் ஆகாமல் என்னால் தப்ப முடியாது. ஆகவே வாயைத் திறந்துகொண்டு நீ தயாராய் இரு. நான் குதித்து உன் வாயில் வந்து விழுகிறேன் என்று கூறியது.
ஆகவே முதலை கண்களை மூடிக்கொண்டு வாயைத் திறந்து வைத்துக் கொண்டு இருந்தது. அதை ஏமாற்ற நினைத்த குரங்கு. ஒரே தாவில் முதலையின் தலை மீது தாவியது. பிறகு அங்கிருந்து வெகு வேகமாக ஆற்றங்கரையைத் தாவிவிட்டது. குரங்கின் கெட்டிக்காரத்தனம் இப்போது முதலைக்குப் புரிந்தது.
3
ஏ குரங்கே! நான்கு அறறெிகளைக் கடைப் பிடிப்பவன் எதிரிகளை எளிதில் மடக்கிவிடுவான். உன்னிடம் நான்கு அறநெறிகளும் இருப்பதாகக் கருதுகிறேன் என்று கூறியது. இவ்வாறு ஞானக் குரங்கைப் பாரட்டிவிட்டு முதலை தனது இருப் பிடத்துக்குத் திரும்பியது.
4