முட்டாளும் இளவரசியும்

    ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள் மிகுந்த அறிவுடையவளாக விளங்கினாள். யார் பேசினாலும் தன் அறிவுக் கூர்மையால் அவர்களை மடக்கி விடுவாள்.

    இளவரசி திருமணப் பருவம் அடைந்தாள். தன் மகளுக்கு யாரைத் திருமணம் செய்து வைப்பது என்று சிந்தித்தான் அரசன். தந்தையே! இளவரசனாக இருந்தாலும் சரி ஏழைப் பிச்சைக் காரானாக இருந்தாலும் சரி பேச்சாற்றலில் யார் என்னை வெற்றி கொள்கின்றாரோ அவரையே மணப்பேன் என்றாள்.

    இந்தச் செய்தி பல நாடுகளுக்கும் தெரிவிக்கப் பட்டது. பல நாட்டு இளவசரர்களும் அறிஞர்களும் போட்டியில் கலந்து கொள்ள அரண்மனைக்கு வந்தனர். வந்த ஒவ்வொருவரையும், சிறிது நேரத்திற்குள் தோற்கடித்து வெளியே அனுப்பிக் கொண்டு இருந்தாள் இளவரசி.

    நாள்தோறும் ஏராளமான கூட்டம் அரண் மனைக்கு வந்த வண்ணம் இருந்தது. இப்படியே சென்றால் நாட்டில் உள்ள எல்லோருடனும் இளவரசி

1

    எப்படிக் கட்டுப்படுத்துவது பொழுது போக்கு வதற்காக இங்கு வருபவர்களை எப்படித்தடை செய்வது என்று குழம்பினான் அரசன்.

    போட்டியில் வென்றால் திருமணம் தோற்றால் நூறு கசையடி என்று நாடெங்கும் முரசு கொட்டி தெரிவிக்கச் சொன்னான் அரசன். இதனால் இளவரசியுடன் போட்டியிட வருகின்றவர் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. வந்தவர்களும் தோற்றுக் கசையடி வாங்கிக் கொண்டு சென்றனர்.

    அந்த நாட்டில் பிச்கைக்கார இளைஞன் ஒருவன் இருந்தான். இளவரசியை மணப்பதற்காக நிகழும் போட்டியைப் பற்றி அறிந்தான். முயற்சி செய்து பார்ப்போம். நல்லவாய்ப்பு இருந்தால் இளவரசியை மணப்போம். இல்லையேல் கசையடி வாங்கி இறந்து விடுவோம் என்று நினைத்தான்.

    தன் ஊரில் இருந்து தலைநகரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். நீண்ட தூரம் நடந்தான். இறந்து போன கோழி ஒன்று வழியில் கிடந்தது. "இது எதற்காவது பயன்படும்" என்று நினைத்தான் அவன். தன் தோளில் கிடந்த சாக்குப் பைக்குள் அந்தக் கோழியைப் போட்டான்.

    இன்னும் சிறிது தூரம் நடந்தான். வழியில் கிடந்த சிறு தொட்டியில் அவன் கால் இடறியது.

2

    பேச வேண்டியிருக்கும் வருகின்ற கூட்டத்தில் அந்தத் தொட்டியையும் எடுத்து சாக்குப் பைக்குள் போட்டுக்கொண்டு நடந்தான். வழியில் மாடு ஆடுகளைக் கட்டும் குச்சி ஒன்று கிடந்தது. குதிரையின் கால் குளம்பு கிடந்தது. பல வளைவு களை உடைய ஆட்டின் கொம்பு ஒன்று கிடந்தது. எல்லாவற்றையும் எடுத்துப் பைக்குள் போட்டுக் கொண்டான்.

    சாக்குப் பையைத் தூக்கிக்கொண்டு மெல்ல நடந்து அரண்மனையை அடைந்தான் பிச்சைக் காரன். காவலுக்கு இருந்த வீரர்கள் கந்தல் ஆடை யுடன் காட்சி அளித்த அவனை கண்டு கேலியாக சிரித்தனர். இளவரசியுடன் போட்டியிட வந்து உள்ளேன். என்னை உள்ளே விடுங்கள் என்றான்.

    பிச்சைக்காரனாகிய உனக்கு என்ன தெரியும்? நீயா இளவரசியுடன் போட்டியிடப் போகிறாய்? என்று கேலியாகக் கேட்டான் வீரன் ஒருவன். என் மூக்குக்குக் கீழே வாய் உள்ளது. வாய்க்கு உள்ளே நாக்கு உள்ளது. என் திறமையான பேச்சினால் இளவரசியை வெல்வேன் என்றான் பிச்சைக்காரன்.

    உம்மைப் போன்ற முட்டாளிடம் இளவரிசி பேச மாட்டார்கள். நீ திரும்பி போய் நல்ல அறிவுபெற்று மீண்டும் இங்கே வா என்றான் இன்னொரு வீரன். நான் இங்கிருந்து ஒரு அடி கூட

3

    நகர மாட்டேன். போட்டியிட வந்திருக்கிறேன். இளவரசியிடம் போய் சொல் என்று உறுதியுடன் சொன்னான் பிசைக்கார முட்டாள்.

    வீரர்கள் இளவரசியிடம் சென்றார்கள். பிச்சைக்கார இளைஞன் ஒருவன் போட்டிக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். விளையாடு வதற்காக அந்த முட்டாள் இங்கு வந்து இருக்கிறான். நன்கு அவமானப்படப் போகிறான் அவனை இங்கே அனுப்பி வையுங்கள் என்றாள் மிகுந்த கோபத்துடன், பிச்சைக்காரன் உள்ளே நுழைந்தான்.

    பனிக்கட்டியை விட குளிர்ந்த கைகளை உடைய இளவரசியாரே வணக்கம் என்றான் பிச்கைக்காரன். என் கைகள் குளிர்ச்சியாக இல்லை. சூடாக உள்ளது. இந்தச் சூட்டில் ஒரு கோழியே வறுபட்டு விடும் இது உனக்குத் தெரியுமா? என்று வெடுக்கெனப் பதில் தந்தாள் இளவரசி.

    அப்படியா? கோழி வறுபடுமா என்று பார்க்கிறேன் என்ற அவன் சாக்குப் பைக்குள் கையை விட்டான் செத்த கோழியை வெளியே எடுத்தான். எதிர்பாரதது நடந்ததைக் கண்ட அவள் திகைத்துப் போனாள் தன் திகைப்பை மறைத்துக் கொண்டு சூடுபட்டால் கோழியின் கொழுப்பு ஒழுகுமே என்றாள்.

4

    பைக்குள் கைவிட்டுத் தொட்டியை எடுத்தான். ஒழுகுவதை இந்தச் தொட்டியில் பிடித்துக் கொள்ளலாம் என்றான் தொட்டி விரிசல் விட்டிருந்தால் ஒழுகுமே என்றாள் அவள். குதிரைக் குளம்பை எடுத்த அவன். விரிசல் உள்ள பகுதியின் கீழே இதை வைத்து அடைத்து விடலாம் என்றான்.

    எப்படி எதிர் கேள்வி கேட்டாலும் பதில் வைத்திருக்கிறானே என்று நினைத்தாள் அவள். தொட்டியை விட குதிரைக் குளம்பு பெரிதாக உள்ளது எப்படித் தொட்டியை அதனால் அடைக்க முடியும்? என்று கேட்டாள் இளவரசி.

    குச்சியை வெளியே எடுத்தான் பிச்சைக்காரன். இதைப் பயன்படுத்திக் குளம்பிற்குள் தொட்டியை இறுக்கமாகப் பொருத்த முடியும் என்றான் தாறுமாறான கேள்விகளுக்குத் தக்க பதில் தறுகிறானே. அவனுடைய கை ஓங்கி வருகிறதே என்று திகைத்தாள் அவள்.

    அவனை மடக்க நினைத்த அவள் இளைஞனே! நான் என்ன சொன்னாலும் அதை வெறொன்றாகத் திருப்பி விடுகிறாய். நாக்கு பல திருப்பங்கள் இருப்பது போல நீ நடந்து கொள்கிறாய் என்றாள் இளவரசி.

5

    தன் பைக்குள் கையை விட்ட பிச்கைக்காரன் ஆட்டுக் கொம்பை எடுத்தான். அதை அவளிடம் காட்டி இதைவிட அதிக திருகுகள் உள்ளதைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டான்.

    அவள் என்ன பதில் சொல்வது என்று சிந்தித்தாள். நீண்ட நேரம் ஆகியது. அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. இளவரசி தன்னுடைய தோல்வியைக் ஒப்புக்கொண்டுவிட்டாள். பிறகு பிச்சைக்காரனுக்கும் இளவரசிக்கும் நல்லதொரு நாளில் திருமணம் அரண்மனையில் விழாக் கோலமாக சீரும் சிறப்புமாக நடந்தேறியது.

6

முந்தைய கதை
அடுத்த கதை