சிறியவனின் செயல்

    விஜயபுரத்தில் வசிக்கும் ரவி வட்டி வியாபாரம் செய்பவன். அவனிடம் எவ்வளவு பணமிருந்தாலும் திருப்தியில்லை. அந்த கிராமத்தில் விவசாயிகள் பணமுடை காரணமாக ரவியிடம் வட்டிக்கு கடன் வாங்குவார்கள். அதை அறுவடை நேரத்தில் பாக்கி தீர்க்கவில்லையென்றால் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வான்.

    பாக்கி தீராத விவசாயிகளின் உடமைகளை தன்னுடையதாக்கி கொள்வான் ரவி. ஒரு தடவை ராம் என்பவன் ரவியிடம் கடன் வாங்கிக் கொண்டான். அவனுடைய நிலைமை சரியில்லாத தால் பணம் தரமுடியாமல் காலம் கடந்து கொண்டிருந்தது. முடிவில் அந்த பாக்கி வசூலிக்க ராம் வீட்டுக்கு ரவி மட்டும் சென்றான்.

    பாக்கி தீர்க்க வில்லையென்றால் வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருள்களை தூக்கி வந்து விடலாம் என்று சென்றான். அவன் ராம் வீட்டுக்கு போகும் போது ராம் அவன் மனைவியும் வெளியே சென்றிருந்தார்கள். ராமின் மகன் 17 வயதாகிறது அவன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனிடம் ரவி, உன் அப்பா அம்மா இல்லையா என கேட்டான். அதை அவன் கண்டு கொள்ளாமல் இருந்தான்.

1

    மறுபடியும் கேட்டான். இந்த தடவை அவன் நின்ற ரவியின் பக்கம் திரும்பி என் அப்பா செடியை பிடுங்கி நடுவதற்கு போனார். அம்மா காற்றையும் நிலாவையும் வாங்கப் போனார்கள் என்றான். ரவிக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுக்கு பைத்தியம் போலிக்கிறது என்று நினைத்தான். கேட்டதற்கு சரியாக பதில் சொல்லும்படி மிரட்டினான். கையில் கொம்பை வைத்துக் கொண்டு மறுபடியும் அதையே சொன்னான். அவன் பயப்படவில்லை என புரிந்து கொண்டான் ரவி. அவனை மிரட்டி பாபு என் பேச்சை கேள். உன் அப்பா எனக்கு பணம் பாக்கி தரவேண்டும். அவர்கள் இது வரைக்கும் தீர்க்க வில்லை. பணம் கேட்கலாமென வந்தேன். உன் தாய் தந்தையர் எங்கே உண்மையை சொல் பஞ்சபூதம் சாட்சியாக நீ உண்மையை சொன்னால் உன் அப்பா இனி எனக்கு பாக்கில்லை என்று உனக்கு சத்தியம் செய்கிறேன் என்றான் ரவி.

    பஞ்சபூதம் சாட்சி செல்லாதல்லவா அதனால் யார் மீதாவது சத்தியம் செய்யுங்கள் நான் உண்மையை சொல்கிறேன் என்றான் அவன். ரவி அப்படி இப்படி பார்த்தான். ஒருவரும் தெரிய வில்லை. ரவி உள்ளுக்குள் ஆனந்தத்துடன் அதோ

2

    கிழக்கு பக்கம் ராமர் ஆலயகோபுரம் தெரிகிறது. அந்த கோபுரம் சாட்சியாக இவன் தந்தையர் விஷயத்தில் உண்மையை சொன்னால் பாக்கியை ரத்து செய்கிறேன். கடவுள் மீது சத்தியம் செய்தால் நீ நம்பமாட்டாயா என்றான் ரவி.

    அவன் வெட்கப்பட்டு விஷயத்தை சொன்னான். என் தந்தை பச்சையான செடிகளை வெட்டி, செத்த செடிகளை நடுவதற்கு சென்றார் என்றெனல்லவா? கட்டைகளை விற்று என் வீட்டில் சாமான் வாங்கிவிடுவார் என் அப்பா. ரவி அவனின் புத்திசாலிதனத்துக்கு ஆச்சரியப்பட்டு வீட்டுக்கு போனான்.

    உண்மையில் ரவிக்கு பாக்கியை ரத்து செய்யும் யோசனை இல்லை. அந்த சிறுவனின் வாயில் உண்மை வரவழைக்க பொய் சொனனான். மறுபடியும் பாக்கி வசூலிக்க ரவி ராம் வீட்டுக்கு வந்தான். ராம் கொஞ்சம் கெடுகேட்டார்.

    ரவி ராமை அடிக்க கை ஓங்கினான். அதே சமயம் அவன் மகன் விளையாட சென்றவன். திரும்பி வந்தான். இதை பார்த்ததும் ரவியின் கையை மறித்தான். அன்று என் அப்பாவின் கடன் பாக்கியில்லை என்று சத்தியம் செய்தாயே இப்போது ஏன் வந்தாய் என கேட்டான். அட அந்த வார்தையை

3

    நான் எப்போது சொன்னேன் என்றான் ரவி. அதற்கு சிறுவன் அன்று நடந்த எல்லா விஷயங்களையும் ஒன்று விடாமல் சொன்னான் தந்தையிடம். தந்தையார் வழக்கை நீதிபதியிடம் கூறினார். வழக்கு நீதிபதியிடம் சென்றது. நீதிபதி ரவி, மகனையும் அழைத்து உண்மையை தெரிந்து கொண்டான். ஐயா! தென்புறமுள்ள கோபுரத்தைக் காட்டி என்னிடம் சத்தியம் செய்தார் என்றான்.

    இதை கேட்டதும் ரவி கோபத்துடன் பார்த்தீர்களா! நான் அப்போதே சொன்னேனல்லவா இவன் மாயக்காரன் என்று எங்கியாவது தென்புறமாக கோபுரம் இருக்குமா! நான் அன்று கிழக்கு புற கோபுரம் தானே சொன்னேன் என்று உண்மையை சொல்லி விட்டான் ரவி. சொன்ன அடுத்த வினாடியே தன் தவற்றை உணர்ந்தான்.

    ஆனால் லாபமில்லை. நீ பொய் சொன்னாய் என்பது உன் வாயாலேயே நிரூபித்து விட்டாய். அதனால் ராமுவின் பணத்தை நீ கேட்க உனக்கு உரிமையில்லை என்றான். ரவி வெலவெலத்து நின்றான்.

4

முந்தைய கதை
அடுத்த கதை