இல்லை என்றும் அதிகாரம்

    ஒரு வீட்டில் மாமியாரும் மருமகளும் இருந்தனர். அடங்காப் பிடாரியான மாமியாருக்கு மருகளைக் குறை சொல்வதும் திட்டுவதும்தான் எப்பொழுதும் வேலை. பயந்து கொண்டே மருமகளும் வாழ்ந்து வந்தாள். மாமியார் இல்லாத நேரம் மருமகள் மட்டும் வீட்டில் இருந்தாள். "அம்மா தாயே சாப்பிட்டு மூனு நாள் ஆகுது இந்த ஏழைப் பிச்சைக்காரனுக்கு ஏதேனும் சாப்பாடு போடுங்கள் என்ற குரல் வாசலில் கேட்டது. ஏதேனும் பிச்சை போட்டுவிட்டால் அடங்காப் பிடாரியான மாமியார் தன்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள் என்பதை உணர்ந்தாள் அவள். வேறு வீடு பாரப்பா" என்று சொல்லிப் பிச்சைக் காரனை அனுப்பி வைத்தாள்.

    வீடு திரும்பிக் கொண்டிருந்த மாமியார் வழியில் பிச்கைக்காரனை சந்தித்தாள் அந்த வீட்டிற்கு போனாயே ஏதேனும் பிச்சை கிடைத்ததா? என்று கேட்டார். "ஒன்னும் கிடைக்கலேம்மா.

    அந்த வீட்டில் இருந்த அம்மா வேற வீடு பாருன்னு சொல்லிட்டாங்க" என்றான் பிச்சைக்காரன்

1

    "பிச்சை கிடையாதுன்னு சொன்னா அந்த சிறுக்கி என்னோடு வா அவளை என் செய்கிறேன்னு பார்" என்று சொன்னாள் அவள்.

    நல்ல பிச்சை கிடைக்கப் போகிறது என்று நினைத்த அவன் "மகராசி நீங்க நல்லா இருக்கனும்" என்று சொல்லி கொண்டே அவளுடன் சென்றான். இருவரும் அந்த வீட்டு வாசலை அடைந்தனர்.

    வெளியே நின்றபடியே தன் மருமகளை அதிகாரமாகக் பெயர்ச் சொல்லி அழைத்தாள் மாமியார். என்னவோ ஏதோவொன்று பயந்து கொண்டே வெளியே வந்தாள் மருமகள். ஏண்டி இந்தப் பிச்சைக்காரன் வந்த போது ஒன்னும் இல்லை. வேற வீடு பாருன்னு சொன்னியா? என்று இடிகுரலில் கேட்டாள் மாமியார். நடுங்கி கொண்டே "ஆமாம்" என்றான் மருமகள்.

    இந்த வீட்டில் இல்லை என்று சொல்வதற்குக் கூட உனக்கு ஏதுடி அதிகாரம். இதுதான் கடைசி தடவை. இனிஇப்படி நடந்து கொள்ளாதே. அப்புறம் நான் பொல்லாத ராட்சசியாகி விடுவேன் என்றாள் மாமியார்.

    இனி இப்படி நடக்க மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க என்றாள் மருமகள்.

2

    மகிழ்ச்சியோடு அவர்கள் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்தான் பிச்சைக்காரன். அவனைப் பார்த்து மாமியார் இந்த வீட்டில் பிச்சைக்காரனுக்கு இல்லை என்று சொல்வதற்குக் கூட இவளுக்கு அதிகாரம் இல்லை என்பது இப்போது புரிந்து இருக்கும் எனக்குதான் அதிகாரம்.

    இந்த வீட்டில் ஒன்றும் இல்லை வேறு வீடு பார் என்றாள் .பிச்சைக்காரன் மாமியாருக்கு சாபம் விட்டு விட்டு சென்றான்.

3

முந்தைய கதை
அடுத்த கதை