புத்திசாலி மந்திரி

    அவந்திபுரத்தை ஆண்டுவந்த மகேந்திர வர்மன் நீதி நேர்மை பற்றி தெரியாதவன். அந்நாட்டுமக்கள் அரசர் ஆண்டு வந்த ஆட்சி சரியில்லை. நீதி, நேர்மை ஏதும் இல்லை என்று பேசிக்கொண்டார்கள்.

    இப்படியிருக்கும் போது அந்நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார். அம் முனிவர் அரசரிடம் அரசே உன் நாட்டின் வளம் மிகவும் நன்றாக இருக்கிறது. மக்கள் நன்றாக இருக்கின்றனர். நீதி, நேர்மை இரண்டுமே இல்லை. இந்நாட்டில் நீதி, நேர்மை எங்கு இல்லை. அடுத்த வருடம் வருவேன். வரும்போது நீதி, நேர்மை இருக்க வேண்டும். இல்லையெனில் எனக்கு மனம் மிகவும் வருத்தமாக இருக்கும் என்று சொல்லிவிட்டு வேறு ஊருக்கு சென்றார். சந்திரநாத் மந்திரி வந்தார். மந்திரியை அழைத்து நீ எனன இப்படி செய்கிறாய் நாட்டுக்கு எது தேவையோ அது வாங்க வேண்டமா அது வாங்காமல் அந்த முனி கோபித்து கொண்டு போனார். மந்திரி சிரித்தார். ஏதோ பேச வாயெடுத்தார். நீ ஒன்றும் சே வேண்டாம். சொன்னதை செய் அடுத்த வருடத்துக்குள் நீதி,

1

    நேர்மை வாங்கி வந்து வை என்றார். செய்கிறேன் அரசே என்றார் மந்திரி. மந்திரி யோசித்து மதியில்லாமல் இருக்கும் அரசரை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.

    மந்திரி தானே ஆட்சி செய்வது என்று முடிவு செய்து மக்களனைவரையும் தன் பக்கம் இழுத்து காவலர்கள், அரண்மனையில் உள்ளவர்கள் அனை வரையும் தன் வசப்படுத்தி கொண்டார். மக்கள் நலம் கருதி நாட்டின் நலம் கருதி நாட்டை சீர்படுத்தி கொண்டார். என்ன ஒரு வருடமாக போகிறது அந்த முனிவர் வந்து விட்டார்.

    எங்கே நீதி, நேர்மை என்றார். ஒரு குரல் கொடுத்ததும் காவலர்கள் வந்து அரசரை சூழ்ந்து கொண்டனர். என்ன என்னையே சிறையில் வைக்கிறாயா என்றார். ஆம் நீதி, நேர்மை கருதி மூளையில்லாத அரசர் நீ ஆட்சி செய்தால் நம்நாடு அடுத்த நாட்டு அரசன் வசமாகி விடும்.

    அதனால் நானே ஆட்சி செய்து நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுகிறேன் என்றார். முனிவர் வந்தார். அப்பாடா இப்போது தான் இந்நாட்டில் நேர்மை உள்ளது என்று சொல்லி புத்திசாலி மந்திரியை வாழ்த்தி விட்டு சென்றார்.

2

முந்தைய கதை
அடுத்த கதை